பூசணிக்காய் விதையின் பயன்கள் தமிழில்..
Poosani Vidhai Benefits in Tamil
Poosani Vidhai Benefits in Tamil
பூசணிக்காய் என்றாலே திருஷ்டி சுத்தி போட்டு அதை தெருவில் உடைப்பது தான் நினைவுக்கு வரும். ஆனால், பூசணிக்காய் மகிமை நிறைந்தது. பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும், வெளியே கொட்டிவிடுவார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். நாமோ அந்த அளவுக்கு இன்னும் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகவில்லை.
பூசணி விதைகள் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கொழுப்பு உடலில் உற்பத்தி செய்யமுடியாது என்பதால், உடலுக்கு தேவைப்படும் ஒமேகா -3 கொழுப்பை பூர்த்தி செய்ய உதவும் உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள் சாப்பிடும்போது இந்த பிரச்சனை பூர்த்தி செய்யப்படும். அது மட்டுமல்லாமல், உயிரணு பராமரிப்பு ம் மற்றும், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவுகிறது.
பூசணி விதைகள் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக உள்ளது. வெறும் 100 கிராம் பூசணி விதைகள் உங்களுக்கு 18 கிராம் நார்ச்சத்தை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு சராசரி நபரின் தினசரி தேவையின் 72 சதவிகிதம் ஆகும்.
பெருங்குடல் 100 டிரில்லியன் குடல் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது, நார்ச்சத்து நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகிறது, நமது குடலில் நுண்ணுயிர் சமநிலையை பராமரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
நல்ல கொழுப்பு அல்லது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (LDL) ஆகிய இரண்டு வகைகளில் உள்ள கொலஸ்ட்ரால் நமது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமனிகளின் சுவர்களில் எல்டிஎல் உருவாகிறது, இதன் விளைவாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். எச்டிஎல், தமனி சுவர்களின் பராமரிப்பு குழுவாக செயல்படுகிறது; கெட்ட கொழுப்பை நீக்கி அவற்றை மறுசுழற்சி செய்கிறது. பூசணி விதைகள் நமது உடலில் உள்ள கொழுப்பின் சமநிலையை பராமரிக்க ஒரு சிறந்த வழி.
பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தேவையற்ற கழிவுகளை நீக்குகின்றன. குறைந்த கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பூசணி விதைகளை நீங்கள் தவறாமல் சாப்பிட வேண்டும்
Poosani Vidhai Benefits in Tamil
சத்துகள்
இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
இதயம் காக்கும்
இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க மக்னீசியம் உதவும்.
Poosani Vidhai Benefits in Tamil
நோய் எதிர்ப்புச் சக்தி
இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும்..
சர்க்கரைநோய் தடுக்கும்
தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.
கல்லீரலை காக்கும்
ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.
ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்
இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும் செரொட்டோனின்' (serotonin) என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
உள்காயங்களைச் சரியாக்க உதவும்
இந்த விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.
உடலுக்கு வலிமை தரும்
இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.
Poosani Vidhai Benefits in Tamil
மாதவிடாய்க் கோளாறு நீக்கும்
பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
உடல் உஷ்ணத்தை குறைக்கும்
ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.
Poosani Vidhai Benefits in Tamil
கஷாயம்
இந்த விதைகளில் 5 அல்லது 10 கிராமை வறுத்து, நாட்டுச்சக்கரையுடன் சேர்த்து கஷாயமாக்கி இரவில் குடித்துவிட்டு, மறுநாள் காலை அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய் குடிக்கவும், பிறகு வெந்நீர் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள், தட்டைப்புழுக்கள், நாடப்புழு நீங்கும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் உள்ள ரசாயனத் தாக்கத்தைக் குறைக்கும்; சிறுநீரகப் பிரச்னைகளை நீக்கும்; நாளமில்லாச் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கும்.
மேலும் இந்த சுவையான விதைகள் உங்கள் சாலடுகள் மற்றும் சூப்களில் சேர்த்து சாப்பிடலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu