எலும்பு வலுவாகனுமா? இறால் சாப்பிடுங்க..

Eral in Tamil
Eral in Tamil-நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு வித நன்மைகள் இருக்கிறது. உணவு என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவையாக கருதப்படுகிறது. சில உணவுகளில் அதிக ஊட்டசத்துக்கள் இருக்கும். சிலவற்றில் மிக சில சத்துக்களே இருக்கும். ஆனால், ஒரு சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட பல்வேறு உணவுகளில் நாம் சாப்பிடும் கடல் சார்ந்த உணவும் ஒன்று.
இறால் மீன் பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது.
கடல் நீரில் கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கழிவுப்பொருட்களாக மாறுவதை இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன.
பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் காணப்படும். ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன.

மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாகப் பெருகின. இந்தப் பெருக்கம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட தேவையினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்.
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இறால் ஏற்றுமதியில் உலகில் அதிக அளவில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.

இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. உலக அளவில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் இவை கொண்டுள்ளது.
ஊட்டச்சத்துக்களின்எண்ணற்ற நன்மைகளை இறால் கொண்டுள்ளது.
- மிகவும் குறைந்த அளவிலான கொழுப்புகள்
- அதிகமான புரதம்
- கலோரிகள்
- கால்சியம்
- பொட்டாசியம்
- செலினியம்
- விட்டமின் எ, ஈ
- பாஸ்பரஸ்
இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.
இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. எனவே இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.
அதிக ரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்தால் சிறந்த மருந்தாக இந்த இறால் இருக்குமாம். இவை, உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த இறால்கள் பெரிதும் உதவுகிறது. ரத்த நாளங்களை சீராக்கி சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய கோளாறுகளை இவை தடுக்க கூடியது.
இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu