மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு தோசை... சூப்பரா செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க!

மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு தோசை... சூப்பரா செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க!

Preparation of tapioca dosa- மரவள்ளிக்கிழங்கு தோசை சாப்பிட்டு இருக்கறீங்களா? 

Preparation of tapioca dosa

Preparation of tapioca dosa- மரவள்ளிகிழங்கு மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒன்று. இதை வேகவைத்து சிற்றுண்டியாக சாப்பிடுவோம். ஆனால் இதில் மொறுமொறுவென்று ருசியான தோசை செய்யலாம். இதை தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து அளிக்கும் உணவு பொருள்களை பிடித்தமான முறையில் செய்து கொடுத்தால் வளரும் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியான முக்கிய பொருளில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு. வேர் காய்கறியான இது அதிக கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இதை கொண்டு தயாரிக்கப்படும் மொறு மொறு தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

​மரவள்ளிக்கிழங்கு தோசை; தேவையான பொருள்கள்​

இட்லி அரிசி - 2 கப்

உளுந்தம் பருப்பு - கால் கப்

பச்சரிசி - கால் கப்

மரவள்ளிக்கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது)- 1 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - காரத்துக்கேற்ப

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - தேவைக்கு

கொத்துமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப

​மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை

இட்லி அரிசி பச்சரிசி உடன் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தம் பருப்பு தனியாக ஊறவைக்கவும்.

மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி சேர்த்து, உளுந்தம் பருப்பு சேர்த்து அரைக்கவும். அரிசி நொய்யாக இருக்கும் போதே மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து அரைத்து எடுக்கவும்.

முக்கால் பதம் வந்ததும் அதில் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். மாவு ரவை பதத்துக்கு சன்னமாய் அரைத்து எடுக்கவும். 8 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு சீரகம், மிளகு, சோம்பு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை தூவி சேர்த்து நன்றாக கலக்கி 1 மணி நேரம் ஊறவிடவும்.

இப்போது தோசைக்கல் வைத்து நல்லெண்ணெய் வைத்து தேய்த்து இருபக்கமும் ஊற்றி சிவக்கும் போது திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கலாம். மொறு மொறு தோசை தயார். மெலிதாக அல்லது தடிமனாக விருப்பத்துக்கேற்றபடி வார்க்கலாம்.

தோசை ஒட்டாமல் வர வெங்காயம் தேய்த்து ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும். இதனுடன் தேங்காய்ச்சட்னி சேர்க்கலாம். சுவையும் மணமும் அற்புதமாக இருக்கும்.

​மரவள்ளிக்கிழங்கு நன்மைகள்​

மரவள்ளிக்கிழங்கு தூய ஸ்டார்ச். இது முற்றிலும் கார்போஹைட்ரேட்டுகளால் ஆனது. இதில் குறைந்த அளவு புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனினும் இது தானியம் மற்றூம் பசையம் இல்லாதது. அதனால் கட்டுப்படுத்தப்பட்ட கோதுமை, தானியங்கள் மற்றும் பசையம் உள்ளவர்களுக்கு இவை ஏற்றது.

வைட்டமின் சி நிறைந்தது. ஒவ்வொரு 100 கிராம் அளவில் 20% உள்ளது. நோய் எதிர்ப்புக்கு வைட்டமின் சி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறீப்பிடத்தக்கது. வைட்டமின் சி எலும்புகள், தோல், தசைகள் மற்றும் முட்டுகளில் காணப்படும் புரதமான இது கொலாஜன் உற்பத்தியை தூண்டக்கூடியது.

​மரவள்ளிக்கிழங்கு பக்கவிளைவுகள் உண்டு செய்யுமா?​

மரவள்ளிக்கிழங்கு வேரில் இயற்கையாகவே லினாமரின் என்னும் நச்சு கலவை உள்ளது. மேலும் இதில் உள்ள சயனோஜெனிக் கிளைகோசைடு என்னும் இராசயனங்கள் உள்ளன. இது உடலில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்பட்டு சயனைடு விஷத்தை உண்டு செய்யலாம். மோசமாக பதப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கு வேரை உட்கொள்வது சயனைடு விஷம் ஏற்படுத்தி கான்சோ எனப்படும் பக்கவாத நோய் உண்டு செய்யலாம். சமைக்கும் போது லினாமரை அகற்றலாம்.

மரவள்ளிக்கிழங்கில் உள்ள கலவைகளை லேடெக்ஸில் உள்ள ஒவ்வாமைகளாக உடல் தவறாக புரிந்துகொண்டு ஒவ்வாமையை உண்டு செய்கிறது. இது லேடெக்ஸ் பழ நோய்க்குறி என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற வேர்க்காய்கறிகளை ஒப்பிடும் போது இது அதிக கலோரி நிறைந்தது என்பதால் எடை அதிகரிப்பை தூண்டும். அதனால் அளவோடு எடுப்பது மட்டுமே பாதுகாப்பானது.

Tags

Next Story