ரோட்டுக்கடை ப்ளைன் சால்னா, வீட்டிலேயே தயார் செய்யலாம்- எப்படி என்று தெரிஞ்சுக்கலாமா?

ரோட்டுக்கடை ப்ளைன் சால்னா, வீட்டிலேயே தயார் செய்யலாம்- எப்படி என்று தெரிஞ்சுக்கலாமா?
X

Preparation of Plain Salna- பரோட்டாவுக்கு சுவையான பிளைன் சால்னா (கோப்பு படங்கள்)

Preparation of Plain Salna- ரோட்டுக்கடை ப்ளைன் சால்னாவை எப்படி செய்ய வேண்டும் என்ற சமையல் குறிப்பை தெரிந்துக்கொள்வோம். அதை பின்பற்றி சமைத்தால் ப்ளைன் சால்னா கமகம என ரெடியாகி விடும்.

Preparation of Plain Salna- இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லை என்றால், ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னாவை செய்யுங்கள்.

இந்த சால்னா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யக்கூடிய வகையில், மிகவும் எளிமையாக இருக்கும்.

ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.


ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னா ரெசிபி

தேவையான பொருட்கள்:

* சீரகம் - 1 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்ன்

* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு - 4

* கல்பாசி - 1 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் - 2

* பட்டை - 1

* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

* பொட்டுக்கடலை

* முந்திரி - 10

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு..

* வெங்காயம் - 2

* தக்காளி - 2

* பூண்டு - 10

* இஞ்சி - 4 துண்டு

* புதினா - ஒரு கைப்பிடி

* தேங்காய் - 1/2 மூடி 1/2 கப் பொட்டுக்கடலையுடன் இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சு தாளிச்சு விடுங்க..


இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்.

சால்னா செய்வதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, மிளகு, கல்பாசி, கசகசா, பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தேங்காய் மற்றும் புதினாவை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் வதக்கிய வெங்காய கலவையைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, முடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை ப்ளைன் சால்னா தயார்.

Tags

Next Story
ai in future agriculture