ஏங்க..... காலையில் மகிழ்ச்சி பொங்க புத்துணர்ச்சியோடு அழகு தமிழில்.....வணக்கம் சொல்லுங்க...
Positive Good Morning Quotes in Tamil -வணக்கம். இந்த வார்த்தை ஆத்மார்த்தமானது. வெறும் வாயில் இருந்து வரும் வார்த்தை அல்ல. இது மனதோடு ஒன்றிப் போன வார்த்தை. அதுபோல் சந்தோஷத்தோடு சொல்லப்படும் வணக்கங்களுக்கு பல ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
காலையில் எழுந்ததும் உங்கள் நண்பர்கள், உறவுகள், உடன் பணிவோர், அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்கள் அடிமனதில்இருந்து சந்தோஷத்தோடு காலை வணக்கத்தினை அழகு தமிழில் சொல்லிப் பாருங்க... உங்கள் மனசுல ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் ஏற்படும்.
தினமும் காலை எழுந்த உடன் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அன்றைய தினம் இனிமையானதாக அமையும். நமக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து வரும் குறுந்செய்தி நம்மை இன்னும் மகிழ்ச்சி ஆக்கும்.
காலையில் உங்கள் மன நிலையானது மகிழ்ச்சியுடன், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்களே நிகழ வாய்ப்புண்டு. அதைத்தான் மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் என சொன்னார்கள். அதன் படி மனசு நல்ல நிலையில் வச்சுக்க பாருங்க.. காலை வணக்கத்திலிருந்து....
தலையணையின் அணைப்பிலிருந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்துஇமைகளை அவிழ்த்துநேற்றை மறந்து இன்றை தொடர்இனிய காலை வணக்கம்!
கதிரவனின் கடை;க்கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்புன்னகையுடன் தொடங்குபூக்களாக நிறையட்டும்இந்த தினம்.
புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்னைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்னைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!
positive good morning quotes in tamil
வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும்
மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே
மலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!
positive good morning quotes in tamilவிடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு.. சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
தவறி விழுந்த விதையே முளைக்கும் போது தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா. காலை வணக்கம்!
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை. இனிய காலை வணக்கம்!
இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!
துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்!உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு அதிர்ஷடத்தையே நம்பாதே.
ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்!
உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி! இனிய காலை வணக்கம்!
முன் வைத்த காலை பின் வைக்காதே வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்!
தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம் பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தாள். இனிய காலை வணக்கம்!
ஆவலாய் காத்திருக்கிறோம் மழைக்காக குடையும் உனக்காக நானும் காலை வணக்கம்!
இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால் முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்!
positive good morning quotes in tamilவேதனைகளை வென்று விட்டால் அதுவே ஒரு சாதனை தான்.இனிய காலை வணக்கம்!
எல்லா சமயமும் கூறுவது தீமையை செய்யாதே நன்மையை செய்.இனிய காலை வணக்கம்!
உதிக்கும் சூரியனை போல உங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.இனிய காலை வணக்கம்!
தோல்வி உன்னை துரத்தினால் வெற்றியை நோக்கி நீ ஓடுஇனிய காலை வணக்கம்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu