தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து கவிதைகள் Pongal quotes in Tamil

Pongal Quotes in Tamil
X

பொங்கல் வாழ்த்து

Pongal Quotes in Tamil -உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Pongal Quotes in Tamil -அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல், தமிழர்களின் தேசிய திருவிழா

பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் மிக கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துகளை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துகளை இங்கே அளித்துள்ளோம்

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க,

இன்பம் பொங்க, இனிமை பொங்க

என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க

பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

விடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும்,

இந்த தைத் திருநாள் முதல்..... பொங்கல் வாழ்த்துகள்!


தை திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.

இந்த அறுவடை திருவிழா உங்கள் வாழ்க்கையிலிருந்து உங்கள் கவலைகள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும் குறைத்து, உங்கள் இதயத்தை அமைதியான மற்றும் ஆரோக்கியமான எண்ணங்களால் நிரப்பட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!

கடவுள் சூரியனின் அருள் உங்களை தொடரட்டும்

உங்கள் வாழ்கையில் இனிப்பு பொங்கட்டும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இந்த பொங்கல் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும்

செழிப்பையும் கொண்டு வரட்டும்..

உங்கள் இதயத்தை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்..

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

பால் மற்றும் கரும்புகள் தித்திப்பு நிரம்பி வழியட்டும்

உங்கள் வீட்டை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பவும்

உங்கள் மகிழ்ச்சி கரும்பு போல் தித்திப்பாக இருக்கவும்

உங்களுக்கு சிறந்த மற்றும் வளமான பொங்கல் வாழ்த்துகள்!


சேற்றில் உழவர்

கால் வைப்பதால் தான்

சோற்றில் நாம்

கை வைக்கிறோம்

உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!!

தை பிறந்தால் வழி பிறக்கும்

உங்கள் வாழ்க்கையில்

பொங்கும் பொங்கலை போல்

இன்பம் செல்வம் நிம்மதி மற்றும்

நல்ல உறவுகள் அமைந்திட

எனது இனிப்பான வாழ்த்துகள்

உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள்

ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள்

மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள்

உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.


சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர

சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி

கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை

வருகிறது புது பொங்கல்

வளம் தரும் தை பொங்கல்

காளைகள் சீறிப்பாய

காத்துக்கிடக்கு வாடி வாசல்

அரிசி மாவில் கோலமிட்டு

ஜொலிக்கிறது வீடு வாசல்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஜி.பி.முத்துவின் ஊர்ப் பஞ்சாயத்து சூப்பர் ஹிட்!மக்கள் மனதில் இடம் பிடித்தார்!