/* */

வவ்வால் மீன் இன வகைகளின் சத்துகள் பற்றி தெரியுமா? உங்களுக்கு?

Pomfret Fish in Tamil Name- வவ்வால் இன வகைகளில் மருத்துவகுணங்கள் அதிகம் உள்ளது. இதனை முறையாக அளவோடு உண்ணுவோருக்கு பல ஆரோக்ய நன்மைகள் உண்டு.

HIGHLIGHTS

வவ்வால் மீன் இன வகைகளின் சத்துகள் பற்றி தெரியுமா? உங்களுக்கு?
X

வவ்வால் மீன் ப்ரை
கருப்பு நிற வவ்வால் மீன்.

Pomfret Fish in Tamil Name-கடல் வாழ் உயிரின மீன்களில் அதிக புரத சத்துகள் இருப்பதால் இவை பெரும்பாலும் உணவிற்கு பயன்படுகிறது.ஒரு சில மீன் வகைகள் இதற்கு உதவாவிட்டாலும்பெரும்பான்மையான வகை மீன்கள் உணவிற்கு பயன்படுகிறது.

மேலும் இம் மீன் வகை உணவுகளை சாப்பிடுவோருக்கு உடல் ஆரோக்யத்திற்கான பல நன்மைகள் கிடைப்பதால் மீன் சாப்பிடுவோர் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு சிலர் எந்த வகை மீன் இதனால் நமக்கு என்ன ஆரோக்ய பயன் என தெரியாமல் சாப்பிடுவது நல்லதல்ல. முதலில் மீன்களில் எத்தனை வகைகள் உள்ளது, இதனால் நமக்கு என்ன பயன் என்பதை அனைவருமே படித்து தெரிந்து கொள்ள வேண்டும் இது மிக மிக அவசியமானதாகும்.

பொதுவாக வவ்வால் இன வகை மீன்களில் 3 வகையுண்டு.

1.கருப்பு வவ்வால் , 2.சாம்பல் நிற வவ்வால், 3.சில்வர் நிற வவ்வால்

தமிழகத்தில் இவ்வகை மீன்கள் இரு வகைகளாக மட்டும் பிரிக்கப்படுகிறது. அதாவது டார்க் கலர் கொண்டவை கருப்பு நிற வவ்வால் எனவும், வெள்ளைநிற வவ்வால் என இருவகைகளாகவே பிரிக்கப்படுகிறது.

அசைவ உணவுவகைகளில் இறைச்சிகளுக்கு அடுத்த இடத்தினை பிடிப்பது மீன்இறைச்சி. மீன்இறைச்சியில் அதிகமான சத்துகள், தாதுக்கள், மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. மேலும் டாக்டர்கள் கருவுற்ற பெண்களுக்கு அளிக்கும் பரிந்துரைகளில் மீன் சாப்பிடுபவர்கள் என்றால் அதனை அவ்வப்போது எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்துகின்றனர். இதனால் குழந்தையின் வளர்ச்சி நோய் எதிர்ப்புதிறன் ஆகியவையும் அதிகரிக்கிறது.

மேலும் இவ்வகை மீன்களில் ஒமேகா 3 வகை கொழுப்புகள் வைட்டமின் பி 12 சத்துள்ள வைட்டமின்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது.ஒரு சில மீன்களில் அதிக புரதசத்துகளும், ஒரு சிலவற்றில் குறைந்த அளவிலான புரதசத்துகளும் அடங்கியுள்ளது. மெலிந்த இறைச்சியில் அடிப்படை தாதுக்களான துத்தநாகம், பாஸ்பரஸ், சோடியம், சீலினியம், கால்சியம், ஆகியவை அடங்கியது.

100 கிராம் வவ்வால் மீனிலுள்ள சத்துகள் கிராம் , மி.கிராமில்

pomfret fish in tamil nameகலோரி-96,புரதம் 18 கிராம், கொழுப்பு-1.8 கிராம், ஸ்டார்ச்-0 கிராம், சுகர், பைபர்- 0 கிராம், இரும்பு- 2 மி.கி., பாஸ்பரஸ்-150 மி.கி, ஆகியவைகள் அடங்கியுள்ளது.வவ்வால் இன வகை மீன் உணவுகளை உண்போருக்கு இதய பாதுகாப்பினை அளிக்கிறது. அதாவது இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த பணியினை செய்கிறது. மேலும் ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

மேலும் எடைகுறைக்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற உணவுஆகும். வவ்வால் இன வகை மீன்களில் உள்ள தாதுக்களான செலீனியம், துத்தநாகம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், மற்றும் கால்சியம், இவை அனைத்தும் இந்த மீன்களில் உள்ளதால் நம் உடலுக்கு தேவையான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைபுரிகிறது.

மேலும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவரது உடம்பில் உள்ள இன்சுலினை கட்டுப்படுத்தவும் இவ்வகை உணவு பெரிதும் பயனளிக்கிறது.இந்த வகை மீன்கள் நல்ல சுவையான கடல் நீரில் வளர்கிறது. இந்தியாவில் அட்லாண்டிக், மற்றும் பசிபிக் கடலோர பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவைப்பொறுத்தமட்டில் இவை குஜராத், ஒடிசா, மஹாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது.

சில்வர் வவ்வால்

pomfret fish in tamil nameசில்வர் வவ்வாலின் சுவை பல மடங்கானது. அதுவும்வறுவல் செய்து சாப்பிடுவோருக்கு இது அ லாதியான சுவையை தரக்கூடியது. மேலும் இது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. சத்தான புரதங்களையும் குறைந்த அளவிலான கொழுப்பு அமிலங்களையும் கொண்டதாக விளங்குகிறது. இவ்வகை மீன்களில் நியாசின் மற்றும் விட்டமின் பி 12 ஆகியவைகளை உள்ளடக்கியது.

வெள்ளை வவ்வால்

நல்ல சுவை கொண்டது. மேலும் 27-28 செ.மீ வரை வளரக்கூடியது இதன் வளர்ச்சியானது 33 செ.மீ வரை வளரும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இவைகள் நன்கு உற்பத்தியாகும். இவ்வகை மீன்களிலும் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இவ்வகை மீன்களின் உணவு இதயத்துக்கு தேவையான பாதுகாப்பினை அளிப்பதோடு நல்ல பார்வையினையும் அளிக்கிறது. கருப்பு வவ்வால் இனத்தோடு ஒப்பிடுகையில் இதில் குறைந்த அளவிலான கொழுப்பை கொண்டது.

கருப்பு வவ்வால்

இவ்வகைமீன்களை அல்வா மீன் என்றழைக்கிறோம். மேலும் இவ்வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டது. மேலும் இந்த வகை மீனானது பெரியவகையைக் கொண்டதோடு நல்ல மெல்லிய வால் பகுதியையும் கொண்டது. இதனால் இதற்கு கருப்பு என பெயர் வந்தது.சாம்பல் நிற வவ்வால் இன வகை மீன்கள் வளைகுடா பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதன் வளர்ச்சி அதிகம் என்பதால் பெரிய தாக காணப்படும். இவ்வகை மீன்களை சாப்பிடுவோருக்கு நல்ல கண் பார்வை கிடைக்கும்.

இவ்வகை மீன்களின் உணவானது சாப்பிடுவோருக்கு இருதய பாதுகாப்பினை அளிக்கும். தோல் சம்பந்தமான நோய்களிலிருந்து விடுவிக்கிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Feb 2024 5:02 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு