ருசியான போஹா நகெட்ஸ் செய்வது எப்படி?
Poha Nuggets Recipe- போஹா நகெட்ஸ் ரெசிப்பி ( கோப்பு படம்)
Poha Nuggets Recipe- மழைக்காலம் என்றாலே நம்மில் பலருக்கும் ஒரு கப் சூடான டீயுடன் மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் சாப்பிட பிடிக்கும். மாலை வேளையில் பள்ளி முடிந்து குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வரும்போது அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கவே பல தாய்மார்கள் விரும்புவார்கள்.
அந்த வரிசையில் மழைக்காலத்தில் சூடான டீயுடன் சேர்த்து சாப்பிடும் ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகை போஹா நகெட்ஸ். அதை ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான போஹா நகெட்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
ஒரு கப் அவல்
2 வேக வைத்த உருளைக்கிழங்கு
அரை கப் வெங்காயம்
அரை கப் பொடியாக நறுக்கிய கேப்சிகம்
கால் கப் வேகவைத்த பச்சை பட்டாணி
இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை
அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
அரை டேபிள்ஸ்பூன் டிரை மேங்கோ பவுடர்
கால் டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
1/4 டேபிள் ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
ரெண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
தேவையான அளவு உப்பு
இரண்டு டேபிள் ஸ்பூன் சோள மாவு
நாலு டேபிள் ஸ்பூன் பிரட் கிரம்ஸ்
2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
சுவையான ஆரோக்கியமான போஹா நகெட்ஸ் செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்த அவலை தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் அவலை தனியாக மாற்றி வைக்கலாம். இதனை தொடர்ந்து வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இத்துடன் நாம் ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இதில் வெங்காயம் குடைமிளகாய் பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனை அடுத்து டிரை மேங்கோ பவுடர் மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு அதே கிண்ணத்தில் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது நாம் பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய பகுதிகளை எடுத்து உருளைக்கிழங்கு வடிவில் சிறிதாக உருட்டிக் கொள்ளுங்கள். இப்போது இந்த சிறிய உருண்டைகளை ஒரு பிளேட்டில் தனியாக வைக்கவும். பிறகு கான்பிளவர் கலவையை ரெடி செய்ய ஒரு கிண்ணத்தில் கால் கப் தண்ணீர் கான்பிளவர் மாவை சேர்த்து கலக்க வேண்டும். இப்போது நாம் எடுத்து வாய்த்த வைத்த சிறிய உருண்டைகளை இந்த கான்பிளவர் கலவையில் நன்றாக முக்கி எடுத்து பிரட் தூள்களில் பிரட்டி எடுக்கவும்.
இதற்குப் பிறகு ஒரு சிறிய கடாயில் தேவையான அளவு ஆலிவ் வெண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடான பிறகு இந்த உருண்டைகளை கடாயில் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான அவல் நகெட்ஸ் ரெடி. இதனை தக்காளி கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu