பிரிவின் துயரம்: நிஜவாழ்க்கையை விட்டு அகலா நினைவுகள்
பிரிதல்
Pirivu Quotes in Tamil-மனத்துக்குப் பிடித்த யாராயினும் உடனேயே இருக்கும் போது தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும், அவர்களைப் பிரிந்து வாடும்போது வருத்தும் உடல் மெலிவையும், அன்பும் ஈரமும் உள்ளத்தில் உள்ள எவராயினும் சரி… அனுபவித்திருப்போம்!
இலக்கியமும் அப்படியே. அறமும் பொருளும் படைத்துக் காட்டிய வள்ளுவர் இன்பத்தை இறுதியில் வைத்து, உள்ளத்தின் தன்மையைக் காட்டுகிறார். "பிரிவாற்றாமை' என்பதை வைத்து, ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்
இந்த பதிவில் பிரிவு பற்றிய வாசகங்களை உங்களுக்காக அளிக்கிறோம்
இங்கே ரசிப்பதற்கு
ஆயிரம் இருந்தாலும்
ஏனோ உன் நினைவுகள்
வந்து போகிறது அனுதினம்.
பெண்கள் மட்டுமல்ல
ஆண்களும் ஓர் உயிரை
கடைசி வரை சுமக்கிறார்கள்.
முதல் தோல்வி தந்த காதலியை.
கண்ணுக்குள் நிறைந்தது கண்ணீர் ஆனதே..
நெஞ்சுக்குள் இருந்தது தீயாய் எரிந்ததே...
உன்னைவிட்டு நானிங்கு வாழ்வதெங்கே?
என்னை விட்டு தொலைவில் நீ போனதெங்கே?
நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்
பாரமாக ஒருவரின் அருகில்
இருப்பதை விட.. அவர்களை
விட்டு தூரமாக விலகி
இருந்து விடுங்கள்
காதல் ஒன்று உருவாகும் போது
அதன் பின்னால் பிரிவு ஒன்று
ஒளிந்திருக்கும்
பழகி வந்த புதிய சுகம்
பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ
பருவம் என்றொரு கை அணைத்தால்
பாசம் என்றொரு கை தடுக்கும்
பழகு என்றொரு மனம் சொன்னால்
விலகு என்றொரு முகம் சொல்லும்
தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை தம்பி
தைரியம்தான் வேண்டும் காலம் வரும் வரை
நீ தூரம் சென்று கொண்டே இருக்கிறாய், உன் நினைவுகள் மட்டும் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
நீ இன்பத்தில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும், பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்று நினைக்காதே! நீ நினைத்தவுடனே ஓடி வர, நானிருக்கிறேன்! இப்படிக்கு கண்ணீர்!
நீ விரும்பியதாலோ என்னவோ, இந்த மெளனமே என் வாழ்க்கை என்றாகிவிட்டது... உன்னை பிரிந்தபின்!
உன்னால் முடியும் என்றால், முடியும் என்னாலும்! கடந்து செல்கிறேன், கனவுகள் யாவும் கலைந்திட, உன்னையும், உன் நினைவுகளயும்
அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்! அதில் பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை!
பிரிந்த பின்னரும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே, சில உறவுகளின் பிரிவுகள் நிரந்தரமாக தொடர காரணம்!
இரவாகி போன என் இதயத்தில் வெளிச்சமாக வந்த மெழுகுவர்த்தி நீ
வெளிச்சமாக வந்த நீ உருகி உருகி மீண்டும் என் இதயத்தை இரவாக்கி விடாதே
இமைகள் பிரிவது பார்வைக்காக.
இதழ்கள் விரிவது மலருக்காக.
கதவுகள் திறப்பது தென்றலுக்காக.
நான் பிரிவது எதற்காக?
விரல் இடையில் நழுவிச் செல்லும் நீர் போல நமக்கே தெரியாமல் சில உறவுகள் நழுவிச் செல்கிறது.
ஒருவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் இறந்தால் அவர்களுக்கு இறப்பு கிடையாது வெறும் எண்ணிக்கை தான்.
நிராகரிப்பு இதனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இதன் வலியும் வேதனையும். அது மரணத்தை விட கொடியது.
எதையோ தேடி வானத்தில் வட்டமிட்ட படி பறக்கும் பருந்தைப் போல் உன் நினைவுகள் என்னை சுற்றி சுற்றியே.
எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும் சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது.
அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.
மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது.
இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே வலி எப்படி இருக்கும் என்பதையே உணர்த்தி விடுகிறது வாழ்க்கை.
அவளும், நானும் பிரிந்து நீண்ட தூரம் வந்துவிட்டாலும் நாங்கள் விட்டுவந்த காதல் மட்டும் இன்னும் அதே இடத்தில் நிற்கிறது. அதற்கு என்றைக்குமே தோல்வியில்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu