விடாமுயற்சியே வெற்றிக்கு வழி, நம்பி களத்துல இறங்குங்க.
Vidamuyarchi Quotes in Tamil
Vidamuyarchi Quotes in Tamil
ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில உத்வேகம் தேவைப்படுகிறது. உற்சாகத்துடன் செய்யப்படும் எந்த செயலும் வெற்றிகரமாக முடியும்.
ஊக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு உந்துதலாக அமைகிறது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். அதனை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே வெற்றிக்கனி கிட்டும்.
இதோ உங்களுக்காக ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றி பெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு.
சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.
தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.
நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல, ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.
உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.
அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.
கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.
தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.
உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்.
அமைதியாய் இருப்பவனை முட்டாள் என எண்ணிவிடாதே, பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற் படி தான்.
விதைத்தவன் உறங்கலாம். ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.
உங்கள் சொந்த கனவுகளை உருவாக்குங்கள், அல்லது வேறு யாராவது உங்களைக் கட்டியெழுப்புவார்கள்.
பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே.
எதிரி இல்லை என்றால் இன்னும் நீ இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்.
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே.
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய். வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்.
முதல் முயற்சி தோல்வி என்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்,தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.
பிரச்சனைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள், சிதைந்து போக மாட்டீர்கள்.
எப்போதும் தோல்வி அச்சத்தில் இருப்பதை விட, முயற்சி என்ற ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்.
மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு.
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.
மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று, உங்கள் உண்மையான உயரத்தை காட்டுவதே தன்னம்பிக்கை.
உன்னை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது.தோல்வியை வெல்லும் தகுதி,உனக்கு இல்லாமலா போய்விடும்.
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
எப்போதும் உன் அடையாளத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே
தேவைப்படும் பொழுது நீ தேடப்படுவாய். அதுவரை அமைதியாய் இரு.
உறுதியான முடிவும், முயற்சியும் இருந்தால் தான் அதன் பெயர் வெற்றி.
நடுங்கி நடுங்கி வாழ்ந்தால் நாடி இல்லாதவன் கூட உன்னை நசுக்கி விடுவான்
புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
இங்கு பாதைகள் வெற்றியை தீர்மானிப்பது இல்லை. பயணிப்பவன் முயற்சிகளே வெற்றியை தீர்மானிக்கிறது.
முயற்சி இருந்தால் செல்லும் பாதை எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்.
நேற்றைய உங்களையும், இன்றைய உங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும் வரை.
உன் வெற்றிக்கு வழி உன்னிடம் உள்ள முயற்சியில் தான் உள்ளது. பிறர் இடம் எதிர்பார்க்காதே.
தோல்வி எத்தனை முறை உதைத்தாலும் மீண்டு வர முடியும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உன் தாரக மந்திரமாக இருந்தால்.
நம்பிக்கை என்பது உன் கையில் இருக்கும் வரை, வெற்றி என்பது உன் கை தொடும் தூரம் தான்.
நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி, இன்றைய பொழுதை தொடங்குவோம். வெற்றி நமதே.
கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu