உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பாரம்பரிய உணவுக்கு மாறுங்க..

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? பாரம்பரிய உணவுக்கு மாறுங்க..
X
Permanent Weight Loss Tips in Tamil-இன்று பெரும்பாலான இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் உடல் பருமன் பிரச்சினைக்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களே.

Permanent Weight Loss Tips in Tamil

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இன்று பெரும்பாலான இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் ஒன்று தான் உடல் பருமன். இதற்கு வாழும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களே முதன்மையான காரணங்களாகும்.

சில சமயங்களில் மரபணுக்கள் மற்றும் மருத்துவ பிரச்சனைகளும் உடல் பருமனுக்கு காரணங்களாக இருக்கின்றன. எப்போது ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.

இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க பலர் பல கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையைக் குறைக்க நினைப்பார்கள். இப்படியெல்லாம் செய்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, கடுமையான உடல் நல குறைவால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதை குறைப்பது சரியான வழி அல்ல. முக்கியமான கூறுகளைத் தவறவிடாமல் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதை உறுதிசெய்ய வேண்டும்

காலையில் இஞ்சி,

கடும்பகல் சுக்கு,

மாலையில் கடுக்கா‌ய்

மண்டலம் தின்றால்

கோலை ஊன்றி குறுகி நடப்பவன்

கோலை வீசி குலுக்கி நடப்பனே என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

நமது சமையலறை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. இது கூடுதல் கிலோவை எந்த நேரத்திலும் குறைக்க உதவும். இந்த மசாலாப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன, நீங்கள் சந்தைகளில் தேட வேண்டியதில்லை.

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. இவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என பார்ப்போம்.

காலையில் சுக்கு

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும். இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிடம் அப்பிடியே வைத்தீர்கள் என்றால் அடியில் வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிந்த நீரை மட்டும் எடுத்து குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும். ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும்

இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல ரத்த அழுத்தம் சரியாயிரும்.

கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க

இப்போது சுக்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அந்த பொடியை ஒரு ஸ்பூன் நண்பகலில் சாப்பிட்டால், ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும்

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

சுக்கை மட்டும் சாப்பிட கடினமாக இருந்தால், அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் சேர்த்து கொதிக்க வைத்து டீ போட்டு சாப்பிடுங்கள்

மாலையில் கடுக்கா‌ய்.

கடுக்காய் பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்,

ரெண்டு ஸ்பூன் கடுக்கா‌ய் பொடியை போட்டு தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. கொஞ்சம் துவர்ப்பாகத்தான் இருக்கும். சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம்.

உணவில் சேர்க்க வேண்டிய மசாலாப் பொருட்கள்

சீரகம்

கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை சூடாக்கி, அதிகபட்ச பலன்களைப் பெறலாம்.

உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான வேலைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம், எடை இழப்பு என்கிற இலக்கை எளிதில் எட்டி விடலாம்.

மஞ்சள்

மஞ்சள் எந்த உணவிலும் ஒரு முக்கிய மூலப்பொருள். இது உங்கள் உணவில் சுவை மற்றும் நிறத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மஞ்சளில் குர்குமின் இருப்பதால், உடல் வீக்கம் முதல் எடை இழப்பு வரை சோதனை செய்யப்படுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. நீங்கள் காலையில் மஞ்சள் தேநீர் அருந்தலாம் அல்லது தேனுடன் கலந்து நன்மைகளைப் பெறலாம்

பெருஞ்சீரகம்

வெந்தயம் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு நன்மைகளுடன் பெயர் பெற்ற ஒன்றாக உள்ளது. பெருஞ்சீரகம் பொதுவாக இரவு உணவிற்குப் பிறகு உட்கொள்ளப்படுகிறது, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

பெருஞ்சீரகம் ஒரு இயற்கை டையூரிடிக் ஆகும், இது உங்கள் பசி வேதனையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை அதிசயங்களைச் செய்யக்கூடியது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பி காணப்படுகிறது.இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனால், கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது.

காலையில் மஞ்சள், இஞ்சி, சீரகம் அல்லது பெருஞ்சீரகம் தேநீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியைச் சேர்ப்பதன் மூலம், இலவங்கப்பட்டை எண்ணற்ற ஆரோக்கிய அதிசயங்களைச் செய்யும்.

எலுமிச்சை மற்றும் தேன் கலவை உடலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலின் இதர செயல்பாட்டையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். அதுவும் மிகவும் சிம்பிளான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தாலே, உடல் எடையைக் குறைக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story