கோடைக் காலம் நெருங்கியாச்சு! முலாம்பழம் சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

Musk Melon Fruit in Tamil
X

Musk Melon Fruit in Tamil

Musk Melon Fruit in Tamil-அதிக நீர்ச் சத்து உள்ள பழங்களில் முலாம்பழம் அல்லது கிர்ணிபழம் உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Musk Melon Fruit in Tamil-கோடைக் காலம் நெருங்கிவிட்டது. இந்த காலங்களில் அதிக நீர்ச் சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பழங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பழமாக முலாம்பழம் அல்லது கிர்ணிபழம் உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழம் பெரும்பாலும் கோடைக் காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது.

கோடைக்காலத்தில் உட்கொள்ள ஏற்ற பழ வகைகளில் கிர்ணி பழத்திற்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத பழம் , உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்களிடையே மிகவும் பிரபலமானது. இது அழகான சருமமும் கிடைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவைகள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்மபடுத்த உதவுகிறது.

வைட்டமின் சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை இந்த பழத்தில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த வைட்டமின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டவும் உதவுகிறது. இதனால் நமது உடலில் நோய் தொற்று ஏற்படாமல் இது எதிர்த்துப் போராடுகிறது.

சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கிர்ணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. கண் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

இவற்றில் மிகமிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.

கிர்ணி பழ ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்று கோளாறுகளை குறைக்க முடியும்.

இந்த பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். எனவே இந்த பழத்தை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் போது, உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பழம் பெரிதும் உதவுகிறது.

இதில் நிறைந்துள்ள ஆக்ஸிகைன் எனப்படும் சத்து சிறுநீரக கோளாறு மற்றும் கற்களை குணப்படுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சிறுநீரகத்தில் பிரச்சனை வருவதற்கு காரணம் நமது உடலில் குறைந்த அளவில் நீர்ச்சத்து காணப்படுவதே. இந்தப் பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த நமக்கு உதவுகிறது.

மாதவிடாய் கால கட்டங்களில் சில பெண்களுக்கு அதிகமான தசை பிடிப்புகள் ஏற்படும். இதனால் இவர்களுக்கு அன்றாட வேலைகளை சரிவர செய்வதில் சிறிது சிரமம் ஏற்படுகிறது. இந்த பழத்தில் நிரம்பி இருக்கும் அண்டிகோகுலன்ட் பண்புகள், கட்டிகளைக் கரைய செய்து தசைப்பிடிப்புகளை சரி செய்கிறது.

எச்சரிக்கை

கிர்ணி பழத்தை வெட்டிய உடனே சாப்பிட்டுவிட வேண்டும். வெட்டிய பிறகு அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால், அதன் ஊட்டச்சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும். இதனால், உடலுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும். எனவே, அதை தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story