முளைக்கட்டிய தானியங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Nutrients in sprouted grains- முளைக்கட்டிய தானியங்களில் நிறைந்த ஊட்டச்சத்துகள் இருக்கிறது. (கோப்பு படம்)
Nutrients in sprouted grains- முளைக்கட்டிய சிறுதானியங்களில் உள்ள நன்மைகள் ஏராளம். நாம் ஓய்வான நேரங்களில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம். இதற்கு பதில் அந்த நேரங்களில் முளைக்கட்டிய சிறு தானியங்களை சாப்பிட்டால் அதில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கியத்தை நாம் எளிதில் பெறலாம்.
பழைமையை மறந்து புதுமை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட் ஸ்நாக்ஸ் என்று நம் வாழ்க்கை நடைமுறையை மாற்றிக் கொண்டதால்தான் இன்று மருத்துவமனை வாசல் படியை மிதிக்க வேண்டிய சூழ்நிலை. சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும், அதில் என்னென்ன பலன்கள் உண்டு என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
முளைக்கட்டிய தானியங்களை உண்ணும்போது 50 - 50 ரூல் பின்பற்ற வேண்டும். பாதி சாப்பாடு, பாதி முளைக்கட்டிய தானியம் என்ற அளவில் அதை உண்ண வேண்டும். உணவு மட்டும் இல்லாமல் வெறுமனே தானியம் உண்ண வேண்டும் என நினைத்தால் வேக வைத்து உண்ணுங்கள். முளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது என்பது முக்கியம்.
அதைப்போலவே, அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னை இருப்பவர்களும், கருத்தரித்த பெண்களும், வயதானவர்களும் முளைக்கட்டிய தானியங்களை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது. அவர்கள் முளைக்கட்டிய தானியங்களை அப்படியே எடுத்து கொள்ளக் கூடாது.
முளைக்கட்டிய கொள்ளு உண்பதால் உடலில் இருக்கும் வெப்பம் தணியும். இது நம்முடைய தொப்பையை நன்கு கரைத்து உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும்.
முளைக்கட்டிய கம்பு நம்முடைய உடலுக்கு வலு கொடுக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடிருந்தால் தினமும் கம்பு சாப்பிடலாம்.
முளைக்கட்டிய பச்சைப்பயறு உண்பதால் சருமம் பளபளப்பாகும். நினைவாற்றல் அதிகமாகி மறதி நோய் குறையும். இந்த தானியம் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தாக இருக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம் பெண்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் நல்லது. சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து உண்ணலாம். நாள்தோறும் ஒரு கப் உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இது பெண்களுடைய கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதல் பிரச்னைகளை சுகப்படுத்தும்.
முளைக்கட்டிய உளுந்தை சாப்பிட்டால் புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். நோய் பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்களுக்கு உடல் பலத்தை இது கூட்டும். எனவே, இனிமேல் உங்களது அன்றாட உணவில் இதையும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu