குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில் தயாரிக்கலாம்

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவினை காய்கறி, பழங்களில் இருந்து எப்படி தயாரிக்கலாம் என இத்தொடரில் பார்க்கலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில் தயாரிக்கலாம்
X

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு தயாரிப்பது எப்படி என்பதை இந்த தொடரில் காணலாம்.


குழந்தைகளை காய்கறி, பழங்கள் சாப்பிட வைப்பது என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு சவாலான ஒரு காரியமாக இருக்கிறது. அவற்றை மால்ட் என சொல்லப்படும் சத்துமாவு வடிவில் பாலில் கலந்து கொடுக்கலாம். அது ஒரு எளிதான விஷயம். அதன் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களின் முழுமையான சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.


பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள் கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல் தயார் செய்து கொடுத்தால், குழந்தைகள் அதனை விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள்.

இந்த மால்ட் வகைகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விற்பனையும் செய்யலாம்.இது பெண்களுக்கு லாபகரமான ஒரு குடும்ப சுய தொழிலாகவும் இருக்கும். மால்ட் வகைகளின் அடிப்படை தயாரிப்பு முறை ஒன்றுதான்.


இந்த தொடரில் பீட்ரூட் மால்ட் செய்முறையை முதலில் காண்போம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் அரை கிலோ

நாட்டு சர்க்கரை அரை கிலோ (ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்)

பாதாம் 100 கிராம்

முந்திரி 5 கிராம்

ஏலக்காய் 6

செய்முறை

பாதாம் பருப்பை சூடான நீரில் போட்டு நான்கு முதல் ஐந்து நொடிகள் கழித்து வெளியே எடுக்கவும். பின்பு அவற்றின் மேல் தோலை நீக்க வேண்டும். அடுப்பில் வானலியை வைத்து அதில் பாதாமை கொட்டி மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் முந்திரியை சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும். சில நொடிகள் கழித்து அதில் ஏலக்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கலாம்.

இவற்றை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் அகன்ற இரும்பு வானலியை வைத்து அது சூடானதும் அதில் பீட்ரூட் விழுது மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை அல்வா பதத்துக்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கலவை கட்டியாகி மேலே தெறிக்க தொடங்கும் .அப்போது அடுப்பை சிறிதளவு தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பீட்ரூட் கலவை சுருண்டு ஒட்டாமல் வரும்போது அதில் பாதாம் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு மின்விசிறி காற்றில் பீட்ரூட் கலவையை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றி சிறிய கட்டிகள் உடன் குருணை போல இருக்கும். அதை சிறிது சிறிதாக மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும் .இந்த பொடியை காற்று போகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து தேவையான போது பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

பீட்ரூட் மால்ட் பொடியை சூடான பாலில் கலந்து பருகலாம். குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்தும் சுவைக்கலாம். முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து அவர்களின் பின்னோட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிய அளவில் சந்தைப்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை அதிகரிக்கலாம். சந்தைப்படுத்தும் முன்பு எப். எஸ்.எஸ். ஏ.ஐ போன்ற சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது நல்லது.

Updated On: 22 March 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
  5. அரசியல்
    டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
  6. துறையூர்
    திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
  7. டாக்டர் சார்
    Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
  9. லைஃப்ஸ்டைல்
    Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
  10. அவினாசி
    அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...