இரவு உணவாக எதை சாப்பிட வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க..

இரவு உணவாக எதை சாப்பிட வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க..
Dinner Ideas for Tonight in Tamil-இரவு உணவு என்பது, அன்றைய நாளுக்கான நிம்மதியான உறக்கத்தையும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பையும் வழங்குகிறது.

Dinner Ideas for Tonight in Tamil-உணவு எப்போதும் சாப்பிடக்கூடிய ஒன்றுதானே, அதற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதுபோன்ற எண்ணங்கள் தான் தவறான உணவுப் பழக்கங்களுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. அதற்காக நாம் உணவுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.

உணவு தினமும் சாப்பிடக் கூடிய ஒன்று தான் என்பதால், அது மிகவும் எளிதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாம் சாப்பிடும் நேரத்தில் செய்யும் தவறுகள், எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. மற்ற வேலைகளுக்கும் நேரம் ஒதுக்கியது போக சாப்பாட்டுக்கு நேரம் ஒதுக்குகிறோம். இதனால் உணவு உட்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மாறுபாடு காண்கிறது.

சாப்பிடும்போதும் சரி, சாப்பாட்டுக்கு முன்பும் சரி, அவை இரண்டுக்குமான இடைவெளியைப் பொறுத்து தான் ஆரோக்கியம் நம் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் உணவும் அதை உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்

காலையில் சாப்பிடுவது அன்றைய நாளுக்கான ஆற்றலை முடிவு செய்கிறது. அதேபோன்று இரவு உணவு என்பது, அன்றைய நாளுக்கான நிம்மதியான உறக்கத்தையும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பையும் வழங்குகிறது.

முடிந்தவரையில் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்திடுங்கள். அதையடுத்து இரண்டு மணிநேரம் இடைவெளி எடுத்துக் கொண்டு உறங்கச் செல்லுங்கள். இரவு 10 மணிக்கு மேல் இரவு உணவு சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், பிற்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது. இரவு உணவு எப்போதும் இலகுவாக இருப்பது அவசியம்.

கீழ்க்கண்ட உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்

இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிடாமல் எளிதான உணவுகளை எடுத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அதே மாதிரி இரவு நேரங்களில் காபி போன்றவற்றை பருகக் கூடாது. ஏனெனில் காபி போன்றவை உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தராது. நீங்கள் சரியாக தூங்கா விட்டால் எல்லாவிதமான நோய்களும் வர வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரங்களில் உங்க தூக்கத்தில் கவனமாக இருப்பது மிக மிக அவசியம்.

இரவு நேரங்களில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

இரவு நேரங்களில் கடினமான உணவுகளை வயிறு முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் எளிதாக செரிமானம் ஆகும்.

சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல.. தயிருக்கு பதிலாக நீங்கள் மோர் குடித்து வரலாம். ஏனெனில் தயிர் உடலில் கபத்தை அதிகரித்து சளித்தொல்லையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது

இரவில் அதிகம் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு, பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை இரவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

இரவில் உங்களுக்கு பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள். இரவு நேரங்களில் குளிர்ந்த பாலை குடிக்க வேண்டாம். பாலை குடிப்பதற்கு முன்பு நன்றாக கொதிக்க வைத்து சூடுபடுத்திக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்புள்ள பால் உங்களுக்கு எளிதாக செரிக்க உதவி செய்யும். இந்த பாலுடன் சிறுதளவு இஞ்சி மற்றும் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் சக்திவாய்ந்த ஆதாரமாக இருப்பதால், வாழைப்பழங்கள் உங்கள் தசைகள் ஓய்வெடுக்கவும், மெலடோனின் அளவை கணிசமாக அதிகரிக்கவும் அனுமதிக்கின்றன, மேலும் நிதானமாகவும் படுக்கைக்கு தயாராகவும் உணர உதவுகிறது.

பாதாம் மற்றும் வால்நட்ஸ்

நீங்கள் நன்றாக தூங்க உதவும் சிறந்த உணவுகளில் பாதாம் ஒன்றாகும். பாதாமில் கால்சியம் நிறைந்துள்ளது, இது உடலை அமைதிப்படுத்தவும், தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. மூளைக்கு டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை தூக்கத்தைத் தூண்டும் மெலடோனினாக மாற்றுவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில அக்ரூட் பருப்புகள் மெலடோனின் ஒரு சிறந்த மூலத்தை விட அதிகமாக உள்ளது,

இரவு 7 மணிக்கு மேல் உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். இரவில் சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

ஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்னை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்களும் காரமான குழம்பு வகைகளும், துரித உணவு ரகங்களும் இரவு உணவில் வேண்டாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story