New Year's Resolutions- ஆரோக்கியமான வாழ்விற்கான புத்தாண்டு தீர்மானங்கள் - சீக்கிரம் ரெடி பண்ணுங்க!

New Years Resolutions- ஆரோக்கியமான வாழ்விற்கான புத்தாண்டு தீர்மானங்கள் - சீக்கிரம் ரெடி பண்ணுங்க!
X

New Year's Resolutions- உங்களுடைய புத்தாண்டு தீர்மானங்கள் குறித்து விரைவில் முடிவெடுங்கள் (கோப்பு படம்)

New Year's Resolutions - இன்னும் சில தினங்களில் 2024ம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நீங்கள் என்னென்ன தீர்மானங்கள் செய்யப் போகிறீர்கள் என்பதை விரைவில் முடிவு செய்யுங்கள்.

New Year's Resolutions- ஆரோக்கியமான வாழ்விற்கான புத்தாண்டு தீர்மானங்களை இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறிக்கொாள்ள 2024 புத்தாண்டு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

புதிய வருடப்பிறப்பு நெருங்கிவிட்டதால் வழக்கம் போல இந்தாண்டு சொதப்பிவிட்டோம் வரும் ஆண்டில் ஆவது தீர்மானங்கள் எடுத்து உடல்எடையை குறைக்கவோ அல்லது உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிவெடுத்திருப்போம். தீர்மானம் எடுத்துவிட்டோமே என்பதற்காக இரண்டு நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வோம் அதன் பிறகு சோம்பேறி தனத்தால் விட்டுவிடுவோம். ஆனால் இந்தாண்டு அப்படி நடக்காமல் இருக்க சில குறிப்புகளை வழங்குகிறோம்.


சரியான திட்டமிடல்

இந்தாண்டு பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டுவதற்கு பதிலாக சரியாக திட்டமிட்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த ஆரம்பியுங்கள். நீங்கள் ஒரே நாளில் ஜிம் ஆர்வலராக மாறிவிட வேண்டாம். அதற்கு பதிலாக தினமும் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.

இதை உங்களுக்குள்ளேயே வாக்குறுதியாக எடுத்துக் கொண்டு காப்பாற்றுங்கள். மதிய உணவு அல்லது இரவு உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். தொடர்ச்சியாக இதைப் பின்பற்றுவது எப்படி என கண்டறியுங்கள். இதன் தொடக்கத்தில் நீங்கள் ஒரு கிலோ கொழுப்பை மட்டுமே இழக்க முடியும்.

மிகப்பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் எனில் அதற்கு சிறிய தொடக்கங்கள் தேவை. அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என தீர்மானங்கள் எடுத்து நாம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் சாக்குபோக்கு. ஒவ்வொரு முறையும் சாக்குபோக்கு சொல்லி தீர்மானங்களை முறையாக பின்பற்றத் தவறிவிடுகிறோம்.

உடற்பயிற்சி முக்கியம்

சாக்கு சொல்லுவதை நிறுத்திவிட்டு தெளிவாகத் திட்டமிடுங்கள். நேரமின்மை பிரச்சினை ஏற்பட்டு மாலைநேர உடற்பயிற்சி சவாலானதாக இருந்தால் குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொள்ள சீக்கிரம் எழுந்திடவும். பலர் அதிகாலை நான்கு மணி அல்லது ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்சிக்கு செல்வதை பார்த்திருப்போம். இவை அனைத்திற்குமே திட்டமிடல் தான் காரணம்.

இன்று வேலை அதிகமாக இருக்கிறது நாம் நிச்சயம் சோர்வடைவோம் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் என நினைப்பதற்கு பதிலாக காலையிலேயே உணவைத் தயாரித்துவிடுங்கள். இதற்கு அட்டவணை ஒன்றை தயாரித்து முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டால் சாக்குபோக்கு சொல்வதை தவிர்த்து விடலாம்.


நண்பர்களிடம் பேசுங்கள்

உங்களின் முயற்சிகளை ஆதரிக்கும் நபர்களிடம் பழகுங்கள். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கு உதவிடும். ஆன்லைன் நண்பர்களும் இதற்கு உதவிகரமாக இருக்கலாம். அதே நேரம் உங்கள் குடும்பத்தினருடம் ஆதரவு கேளுங்கள். உங்களுடைய சுற்றுச்சுழல் சவால் அளிக்கும் வகையில் மாற்றி அதைத் திறம்பட சந்திப்பதற்கு திட்டமிட்டால் மாற்றங்கள் எளிதாகிவிடும்.

தீய பழக்கங்கள் கைவிடுங்கள்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அவ்வாறு உங்கள் குடும்பமும் இருக்க வேண்டுமென்றால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மது புகை போன்ற பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். தீயபழக்கத்தால் நம் மனதும் உடலும் மிகவும் பாதிப்படைகிறது. தீயப்பழக்கத்தால் நமது செல்வமும் குறைந்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் குறைகிறது.

உங்களுடைய தீயப்பழக்கத்தால் குடும்பத்தினர்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். நீங்கள் புகை பிடித்தால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகிலிருப்பவருக்கும் கேன்சர் போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இந்தப் புத்தாண்டில் தீயப்பழக்கத்தை விட்டொழிப்போம். நம் குடும்பத்தின் நன்மைக்காகப் பாடுபடுவோம்.


நம்முடைய தீயப்பழக்கத்திற்காகச் செலவு செய்யும் தொகையை நம் பிள்ளைகளுக்காகவோ அல்லது நமது எதிர்காலத் திட்டத்திற்கோ சேமித்து வைக்கலாமே. மது புகை போன்றவற்றை மறப்பது சில நாட்கள் கடினமாக இருப்பினும் அதை அறவே தவிர்த்து புத்தாண்டில் சிறந்த மனிதராய் மாறுவோம். மது புகையை விடுங்க மகிழ்ச்சியோடு இருங்க.

புத்தகங்கள் வாசித்தல்

புத்தகம் வாசிப்பது மிகச்சிறந்த பழக்கமாகும். நமது வாழ்க்கையை மேம்படுத்துவற்காக வாசிக்கலாம். நிறைய பேர் புத்தகத்திற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதற்கு விரும்புவதில்லை. புத்தகத்திற்கு மாற்றாக இணையத்தை பயன்படுத்தலாம் என பலர் நினைக்கிறார்கள்.

நாம் நினைப்பதை போல புத்தகம் படிப்பதால் வருகிற பயன்கள் இணையத்தின் மூலம் கிடைக்காது என்பதுதான் உண்மை. நல்ல நூல்களை படிப்பதற்காக செலவிடும் பணத்தையும் நேரத்தையும் செலவாக கருதக்கூடாது.


இன்று பெரும்பாலான மக்கள் தினமும் பல மணிநேரங்களை தேவையில்லாமல் மொபைல் மற்றும் சமூகவலைத்தளங்களில் செலவிடுகிறார்கள். இப்படி இருக்கும் போது தினமும் புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை படிப்பதால் நேரம் வீணாக போகப்போவதில்லை.

ஆகவே தினமும் சில நிமிடங்கள் சில பக்கங்களையாவது வாசிக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கலாம்.

மொபைல் பயன்பாட்டை குறைத்தல்

நாம் வாழ்க்கையில் எங்களுடைய இலக்குகளை அடையவிடாமல் கவனச்சிதறலை ஏற்படுத்துவதில் மொபைலின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. தேவையில்லாமல் மொபைல் பயன்படுத்துவதை எப்போது தவிர்க்கிறோமா அப்போதுதான் நம்முடைய இலக்குகளிற்காக உழைப்பதற்கு அதிகமான நேரத்தை ஒதுக்க முடியும்.

புதிய வருடத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக இலக்குகளை நிர்ணயம் செய்திருப்போம். அவற்றைய அடைய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் மொபைல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம்.

ஒரு நாளில் சமூக வலைத்தளங்கள், மொபைல் பயன்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். மற்ற நேரங்களில் குறிப்பாக உங்களுக்கான வேலையை செய்துகொண்டிக்கும் போது, கற்றுக்கொண்டிருக்கும் போது மொபைலை தவிர்த்தே ஆக வேண்டும்.

மொபைல் பயன்பாட்டை குறைத்து உங்களுக்கான நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள புதிய வருடத்திற்கான தீர்மானத்தை மேற்கொள்ளலாம்.

தினமும் நேரத்தை திட்டமிடுதல்

பெரும்பாலான மனிதர்களிடம் இன்றைய நாளில் நீங்கள் என்ன வேலைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கான பதில் இருக்காது. நேரம் எப்படி அழைத்துச்செல்கிறதோ அதே போக்கில் எந்த திட்டமும் இல்லாமல் நாளை கடந்து செல்பவர்கள்தான் அதிகம்.

தனக்கான இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஒருவருக்கு ஒரு நாளில் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டம் இருக்க வேண்டும். அப்படி நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் ஒரு நாளில் என்ன செய்ய நினைக்கிறோமோ அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கலாம். நேர விரயத்தை தவிர்க்கலாம். வேலைகளை பிற்போடுவதை தவிர்க்கலாம்.

ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது போல நமக்கான அன்றைய நாளிற்கான நேரத்திட்டம் தயாரிப்பதற்காக சில நிமிடங்களை ஒவ்வொரு நாளும் ஒதுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக எடுக்கலாம்.


தியானத்தில் ஈடுபாடு

தியானம் என்பது ஆன்மீகம் சார்ந்த செயற்பாடு என்று நிறைய மனிதர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் தியானம் செய்வதை ஆன்மீகம் சார்ந்த செயற்பாடாக கருதக்கூடாது.

நமது மனநிலையை ஒருநிலைப்படுத்தி சீர்ப்படுத்துவதற்கான சிறந்த மருந்து தியானம் ஆகும். தியானம் செய்வதன் மூலமாக நமது மன உணர்வுகளை சீராக வைத்திருக்க முடியும். ஒரு வேலையில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி செய்வதை போல தியானம் செய்வதை போல மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தியானம் செய்யலாம்.

தியானம் செய்வதற்கான சிறந்த நேரம் காலை நேரம். தினமும் தியானம் செய்வதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் எனவும் நாம் தீர்மானம் எடுக்கலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!