உதவியவருக்கு நன்றி சொல்லுங்க... அதுதாங்க பண்பாடு.......

Nandri Kavithai-வாழ்க்கையில் நமக்கு பல விஷயங்களில் பலர் உதவி புரிகின்றனர். அவர்களுக்கு நாம் ஆத்மார்த்தமான நன்றி சொல்வதுதாங்க தமிழர் பண்பாடு.... நன்றி சொல்லுங்க...


Nandri Kavithai-வாழ்க்கையில் நாம் தினந்தோறும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்.எந்த ஒரு வேலைக்கும் மற்றவர்களின் உதவி இல்லாமல் இவ்வுலகில் எந்த வேலைகளும் முடியாது. பலருடைய ஒத்துழைப்பு இருப்பதால்தான் பல செயல்கள் இங்கு நடந்துகொண்டிருக்கின்றன.ஆனால் நம்மில் பலர் இக்கட்டான நேரத்தில் உதவினால் கூட வாயைத்திறந்து நன்றிங்க என்பதை சொல்ல மறந்துவிடுகிறார்கள். அது எப்படிங்க.. இப்படி கனத்த இதயத்தோடு அவர்களால் வாழ முடியுது... ரோட்டில் வாகனத்தில் செல்கிறோம்... ஒரு பொருள் கீழே விழுந்துவிடுகிறது. பின்னாடி வருபவரோ அல்லது ரோட்டில் சைடில் நிற்பவரோ ஏங்க...ஏங்க... அப்படினு சத்தம்போட்டு நம்மை திரும்பி பார்க்க வைப்பாங்க... நம்மாளு என்ன பண்ணுவார் தெரியுமா? வண்டியை திருப்பி எடுத்துக்கொண்டு வந்து அவருடைய பொருளை மட்டும் கவனமாக எடுத்துக்கொண்டு(சுயநலம்) மறுபடியும் நேரே சென்று விடுவார். கூப்பிட்டவர்தான் பல்ப் வாங்கி கொள்வார். இது எப்படி இருக்கு? இப்படித்தான் பல பேரு இருக்காங்க இந்த உலகத்துலே...சுயநலம் பெருகி போச்சுன்னா நன்றியாவது ... சொல்றதாவது....

இந்த பண்புகள் அனைத்தும் ஒருத்தர் சொல்லித்தரவேண்டும் என்ற அவசியம் இல்லைங்க,. அவர்களுக்காகவே ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். தமிழக கலாச்சாரத்தில் நன்றி என்பது கட்டாயம் உண்டுங்க..அக்காலத்தில் எல்லாமே இருந்திச்சுங்க... எல்லாம் ஸ்மார்ட் போன் வந்ததினால் பலபேருக்கு மூளையே சரிவர வேலை செய்யுதான்னுதான் சந்தேகமா இருக்குதுங்க... அடிமையாகிப்போய்விட்டதால் (ஸ்மார்ட்போனுக்கு) என்ன செய்கிறோம் என்பதே பலருக்கு தெரிவதில்லை. அவ்வளவு ஈர்ப்பு அந்த உயிரில்லாத செல்போன் மேல். ஆனால் உண்மையில் உதவுபவர்களிடம் கூட பேச நேரம் இவர்களுக்குஇருக்காது போல.

தப்பா நினைச்சுக்காதிங்க... சொல்லப்போனால் இந்த பண்பாடு கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாமே சிறுவயது முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள்சொல்லிக்கொடுத்தாகனும்ங்க... ஆனால் அக்காலத்தில் இவையெல்லாம் நல்லபடியாத்தான் போய்ட்டு இருந்ததுங்க...திடீர்னு மாணவர்களை ஆசிரியர்கள்அ டிக்ககூடாது என்ற சட்டம் போட்டதில் இருந்து அவர்களுக்கும் நமக்கு எதுக்கடா வம்புன்னு பாடத்தினை மட்டும் சொல்லித்தர விருப்பப்படறாங்க... இதனால்தாங்க நன்றி மறந்து போனது.

அதேபோல் மரியாதைங்க... எத்தனை இளவயசுகள் உங்களை மரியாதையா கூப்பிடறாங்க.. பார்த்தீர்களா... வாங்க.. போங்க...ன்னு பேசமாட்டாங்க.. மொட்டையா பேசறாங்க... இதுதான் பள்ளியில் சொல்லி தர்றாங்களா.,.ன்னு நினைக்க தோணுதுங்க... என்னத்தைச் சொல்ல...இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நாய்கூட நன்றியுடன் வாலை ஆட்டுதுங்க.. ஆனால் மனுஷனுங்க... தலையை கூட ஆட்டாமாஇருப்பது கொஞ்சம் மனசுக்கு கஷ்டந்தானுங்கோ...இனிமேலாவது நன்றி சொல்லி பழகுங்க......

ஆனா சில பேரு நன்றியை எதிர்பார்த்து உதவி செய்வதில்லைங்க. அவர்களுடைய பழக்க தோஷம் நாமாக போய் கேட்கா விட்டாலும் அவர்களாகவே இக்கட்டான நேரத்தில் ஓடோடி வந்து நமக்கு உதவி செய்வாங்க. அவங்களுக்கு நாம் காலம் முழுக்க நன்றி சொல்லணும்ங்க.அதுவும் நமக்காக நம் பாரத தேசத்தின் எல்லைகளில் வெயில், மழை என்று பாராமல் 24 மணிநேரமும் பாதுகாப்பு படையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு நாம் ஆயுள் முழுக்க கடமைப்பட்டுள்ளோம்ங்க.தங்களுடைய இளமைக்காலத்தினை அனுபவிக்காமல் நமக்காக இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நம் தோழர்களான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நன்றி சொல்லுங்க.. அதேபோல் கொரோனா காலத்தில் நாம் வெளியில் செல்லவே அச்சப்பட்ட போது நம்முடைய சிகிச்சைக்காக மருத்துவம் பார்த்த அத்தனை நல் இதயங்களுக்கும் நீங்கள் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லிக்கொண்டே இருக்கணும்ங்க.. அவங்க இல்லாவிட்டால் நாம் இல்லைங்க.. அந்த அளவுக்கு அவர்கள் என்னதான் ஊழியர்களாக இருந்தாலும் தானும் ஒரு மனிதன்தான் நமக்கும்இந்நோய் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு என்று பயப்படாமல் நமக்காக சேவை செய்தவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கோம்ங்க. அதேபோல் இதனால் உயிரிழந்தவர்களுக்கும் நம் நன்றியும் அனுதாபங்களையும் கட்டாயம் இத்தருணத்தில் சொல்லணும்ங்க.....

வலி தந்த உளிகளுக்கு நன்றி... நீங்கள் இல்லைஎன்றால் கல்லாகவே இருந்திருப்பேன்...

பெற்ற உதவிக்கு நன்றி மறக்காதேசெய்த உதவிக்கு நன்றி எதிர்பார்க்காதே

வாழ்க்கையில்பல பேருக்கு நன்றி சொல்.. சில பேருக்கு மிகவும் நன்றி சொல்.. பலர் உனக்கு பாடம் கற்பிக்க வந்தவர்கள்.. சிலர் பாடமாகவே வந்தவர்கள்..

யார்குறை சொன்னாலும் அவருக்கு நன்றிசொல்லுங்கள். தன் வேலையைவிட நம்மீது கவனம்வைத்து கண்டுபிடித்ததுக்கு நன்றி சொல்லவேண்டாமா

நன்றி மறப்பது நன்றன்று நன்றி கெட்ட மனிதர்களை அன்றே மறப்பது நன்று

யாருக்கும் தெரியாது என்றென்னி நீ செய்யும் ஒவ்வொரு தவறையும் ஏதோ ஒரு கண் கவனித்துக்கொண்டுதான்இருக்கும் உலகத்துக்கு ஆயிரம் கண்கள்...

நாய்க்கு இல்லை ஆறாவது அறிவு ஆனால் அதற்கு உண்டு நன்றி உணர்வு பகுத்தறிவு உள்ள நம்மில் பலருக்கும் என்னவோ சிறிதும்இல்லை அந்த நன்றி உணர்வு

நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதிஇழக்காதே உன் உதவியை மனிதர்கள் மறந்து போகலாம்.. தெய்வம் மறப்பதில்லை..

வீழ்ந்துவிட்டேன் என்று சிரித்துவிடாதே... வீழ்ந்ததே எழுவதற்கு தான்.நீ உன் பாதையில் ஓடிக்கொண்டே இரு... விமர்சிப்பவன் விமர்சித்து விட்டு போகட்டும். அவன் வேலையை அவன் பார்க்கிறான். நம் வேலையை நாம் பார்ப்போம்..க

குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்..ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கிகொள்வதற்கு அவர்கள்தான் உளி கொடுக்கின்றனர்.

நான் செய்த பிழைகள் நான் சரி என்றுநினைக்கும் வரைதவறாக தெரியவில்லைபிழைகள் நிறைய செய்தபோதிலும் என்னை பிரியாமல் இருந்த உறவேநன்றி!

அறியாமை எனும்இருளகற்றி ஆய்வுபொறியால் அறிவொளியும்ஏற்றி செறிவாகபுள்ளியியல் கற்பிக்கும்பேராசான் சீலரேஉள்ளத்தால் உமக்கு நன்றி.

எனக்கு என் பிள்ளை எடுத்ததுக்கெல்லாம்சொல்லிடுவான் நன்றிஎனக்குள் ஓர் ஏக்கம்நம் தந்தைக்கு எத்தனை முறைநான் சொல்லியிருப்போம் நன்றி!

பெத்ததுக்கு நன்றியென்றுபிள்ளை சொல்வதா தந்ததுக்கு நன்றியென்றுபக்தன் சொல்வதாகுறைசொல்லாமல் வாழ்வதுதான்பெரிய நன்றியேகூருகெட்ட உலகுக்கிதுதெரிய வில்லையே!

ஞாபகத்தில் என்னை வைத்திராவிடிலும்முழுவதும் மறக்காமல் இருக்கிறாயே.உன் அன்புக்கு நன்றி நண்பா.

கேட்காமல் கிடைத்த கடன்வட்டியில்லா கடன்பாசத்தை பணத்திற்கு பதிலாக பரிமாற்றம் செய்த கடன்திருப்பி அளிக்கும் வாய்ப்புக்காககாத்திருக்கும் கடன்நன்றிகடன்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story