எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே நிம்மதியைத் தரும்.... படிச்சு பாருங்க..

Nandri Ketta Ulagam Quotes
X

Nandri Ketta Ulagam Quotes

Nandri Ketta Ulagam Quotes-உறவுகள் ஒரு தொடர்கதை... ஆமாங்க... உறவுகள் நாம்இருக்கும் வரை தொடர்கதைதான். இக்கட்டான நேரத்தில் உறவுகள் உதவ வேண்டும்...உபத்திரவம் செய்ய கூடாது....

Nandri Ketta Ulagam Quotes

வாழ்க்கை என்பது ஆத்மார்த்தமானது. ரசிச்சு ருசிச்சு வாழ கற்றுக்கொள்ளவேண்டும். உங்களை நீங்களே நம்புங்கள் முதலில். பிறகுதான் நாம் மற்றவர்களை நம்ப முடியும். உறவுகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. வசதி வாய்ப்பினைப் பொறுத்து உறவுகள் மனிதனுக்குமனிதன் வேறுபடுகின்றன.ஒவ்வொரு குடும்பத்தின் உறவுகளும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஆனால் சமீப காலங்களில் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் உறவுகள்தான் அதிகம் காணப்படுகிறது. எதனையும் வெளிப்படையாக எந்த உறவுகளிடமும் பேச முடியவில்லை. அப்படி பேசி விட்டால் நம் குடும்பத்திற்குள்ளேயே பிரச்னையை துவங்க ஆரம்பித்துவிடுகிறது. எப்படி? உறவுகளிடம் சொல்லிய விஷயத்தினை அவர்கள் இவர்களுக்கு பகிர்ந்து விடுவதால் வரும் பிரச்னைகள்தான். யாரைத்தான் நம்புவதுஇக்காலத்தில்?

பெரும்பாலான உறவினர்கள் வீட்டுவிசேஷம் என்று அழைத்தால் மட்டுமே ஆஜராகி அட்டென்டன்ஸ் போடுபவர்கள் உண்டு. இடையில் என்ன நடந்தாலும் எந்த பேச்சுவார்த்தைகளும் இருப்பதில்லை. ஏன் உடன்பிறந்த சகோதரர்களின் குடும்பத்தில், சகோதரிகள் குடும்பத்தில் கூட இதே நிலைதான். ஏதாவது பேசினால் பணம் கடன் கேட்டுவிடுவார்களோ? என்ற பயமா-? என்னவென்று தெரியவில்லை. மனிதாபிமானம் மலிந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். போன் பேசுவதைக்கூட கணக்கு பார்க்கும் இந்த உறவுகள் நமக்கு தேவைதானா? என்று யோசிக்கவேண்டியுள்ளது. எல்லா உறவுகளையும்இப்படி சொல்லி விட முடியாது. ஆத்மார்த்தமாக உதவி செய்யும் உறவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது மைனாரிட்டிதான். உதவாத உறவுகள் தான் இங்கு மெஜாரிட்டி. கலகத்தினை இவ்வுறவுகள் தோற்றுவித்துவிடும்... இதுபோன்று பத்தவைக்கும் உறவுகளைத்தான் நன்றி கெட்ட உறவுகள் என்று கூட சொல்லலாம்.

கஷ்டம் என்ற போது உதவி செய்து மேலே வந்தவர்கள்இன்று உயர்ந்த பின் நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதற்கு பெயர் என்னங்க?- அதுதான் நன்றி கெட்ட உறவு....

இதனைப்பற்றிய அர்த்தமுள்ள வாசகங்களை பார்ப்போமா?

நன்றி கெட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் மற்றவர்களிடம் நன்றியை எதிர்பாராமல் நீங்கள் வாழ பழகிக் கொள்ளுங்கள்.

இன்றைய உலகம் நன்றிகளை புதைத்து விட்டு வாழும் மனிதர்களை கொண்டது.

நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே.. உன் உதவியை மனிதர்கள் மறந்தாலும் காலம் மறப்பதில்லை.!

தேவைக்கு பயன்படுத்தி விட்டு தேவை இல்லையெனில் தூக்கி எறியும் நன்றி கெட்ட உலகம் இது.. நன்றி மறந்த உலகத்தில் நன்றியை எதிர்பார்த்தால் உலகில் மிகப்பெரிய முட்டாள் நீ தான்.!

தேவை என்றால் பழகுவதும் தேவை முடிந்ததும் விலகுவதும்.. துன்பத்தில் உடன் இருந்தவருக்கே துன்பம் செய்வதும் மனிதனின் இயல்பு.!

செய்ததை சொல்லிக் காட்டுவது குற்றம் தான்.. ஆனால் நன்றியில்லாமல் மறந்து போவது பெரிய பெருங்குற்றமாகும்.!

அவரவர் தேவைக்கு மட்டும் தேடப்படுகிறோம்.. உறவுகள் என்ற போர்வையில்.!

நன்றி கெட்ட மனிதன் இறந்தால் அவன் உடலை அடக்கம் செய்யும் இவ்வுலகம் நன்றியுள்ள நாய் இறந்தால் அடக்கம் செய்வதில்லை.. நன்றி கெட்ட உலகம் இது.!

பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.. தற்பெருமை பேசுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.!

வலி தந்த உளிகளுக்கு நன்றி.. நீங்கள் இல்லை என்றால் கல்லாகவே இருந்திருப்பேன்.!

ஒவ்வொருவரும் நன்றாகவே நடிக்கிறார்கள் ஆனால் தனக்கு நடிக்கவே தெரியாதென்று சொல்லிக்கொள்கிறார்கள்… இதற்கு பெயர் தான் தன்னடக்கமோ..?

ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால் அவர் நன்மையே செய்தாலும் மனம் குறைகளை மட்டும் தான் தேடும்.. அவர் நல்லவராக இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்.!

நீ ஒருவரை பற்றி தவறான செய்திகளை கூறி அழிக்க நினைத்தால்.. உன்னை ஒருவன் மற்றொரு இடத்தில் மிக கேவலமாக சொல்லி அழித்து விடுவான்.. இயன்றவரை எவரை பற்றியும் புறங்கூறாமல் வாழ பழகிக் கொள்வோம்.

தேவை என்றால் வரும் உறவுகளையும் தேவையில்லாமல் வரும் உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க பழகிக்கொள்ளுங்கள் நிம்மதி உங்களை தேடி வரும்.

வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது.. அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படி பழக வேண்டும் எந்தளவுக்கு பழக வேண்டும் என்பது.

கஷ்டம் வந்தால் கண்டுகொள்ளாத நண்பனும் பணம் இருந்தால் பாசம் பொழியும் உறவும்.. இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான்..!

பிறரிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது அவருக்கு நன்மை செய்வதுதான். ஆனால் அதனினும் உயர்வானது அவரிடம் உள்ள நிறைகளைப் பாராட்டுவது.

இதயம் நில்லாமல் துடிக்காது.இன்பம், துன்பம் இல்லாமல் வாழ்க்கை இனிக்காது.

இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் எதிர்கொள் துவளாதே.சமநிலையில் நாம் இருந்தால் வாழ்ககை சுகம் தான்...!

நீ உன் பாதையில் ஓடிக்கொண்டே இரு.விமர்சிப்பவன் விமர்சித்து விட்டு போகட்டும்.

அவன் வேலையை அவன் பார்க்கிறான்.நம் வேலையை நாம் பார்ப்போம்...!

உன்னை வீழ்த்த நினைப்பவன்பயன்படுத்தும்ஆயுதம் உன் மனதை சிதைப்பது.நீ உன் மனதால் தெளிவாக இரு.உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது.

வாழ்க்கையில் வீழ்ந்தது இல்லைஎன்பது பெருமை இல்லை.வீழ்ந்தாலும் எழுந்தேன்என்பதே பெருமை.

யாருக்கும் தெரியாது என்றென்னிநீ செய்யும் ஒவ்வொரு தவறையும்எதோ ஒரு கண் கவனித்துக்

கொண்டு தான் இருக்கும்.உலகத்துக்கு ஆயிரம் கண்கள்...!

மற்றவர்கள் தட்டி கேட்க வில்லை என்பதற்காகஎந்த தவறும் சரி என்று ஆகி விடாது.

காலம் மாறும் காட்சிகள் மாறும்.உப்பு தின்னா தண்ணி குடித்து தான் ஆகனும்.தப்பு பன்னா தண்டனை அனுபவித்து தான் ஆகனும்.

வீழ்ந்து விட்டேன் என்று சிரித்து விடாதே.வீழ்ந்ததே எழுவதற்கு தான்.

கவலைகளை எல்லோரிடமும்கொட்டி குவித்து விட வேண்டாம்.அதன் மீது ஏறி நின்று வேடிக்கைப்பார்ப்பார்கள்..!

கடினமான பாதை தான்.அழகான இடங்களுக்குஅழைத்துச் செல்கின்றன..!!

சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட,மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.

இரக்கப்பட மனம் உண்டு.அறிவுரைக்க மனிதர்கள் உண்டு.கொடுக்கத்தான் யாரும் இல்லை...!

உதவ முடிந்தால் உதவிடுங்கள் பணத்தால் அல்லஊக்குவிக்கும் ஒரு வார்த்தையால்...!

வாழ்க்கையில் சந்தோஷம் என்பதுநாம் வாழும் இடத்தில் இல்லை.நாம் வாழும் விதத்தில் உள்ளது.

எதற்கும் தயாராக இருங்கள்.ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.அப்போது நஞ்சை கொடுத்தவனுக்கும்வஞ்சம் இல்லா அன்பை கொடுத்து மன்னித்து விடுங்கள்.

மன்னிப்பு தான் ஆக சிறந்த தண்டனை...!உணர்வுகளைச் சிதைக்கும்மனிதர்களுக்கு மத்தியில்.உடலைச் சிதைக்கும் மதுஎவ்வளவோ மேல்...!

படைத்த இறைவனுக்கு கூடநன்றி செலுத்த மறந்து விடும் உலகம் இது...!இறைவன் படைத்த மனிதன் செய்கின்றநல்லதுக்கு மட்டும் நன்றியாய் இருக்க வேண்டும்என்று நினைப்பது நம் தவறு தானே...!நன்றி கெட்ட உலகமடா...!

உனக்காக நான் வாழ்கிறேன் என்றுவாழ்வது வாழ்க்கை அல்லது.உன்னால் தான் நான் வாழ்கிறேன் என்றுமற்றவர் சொல்லும் படி வாழ்வது தான் வாழ்க்கை...!

பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.கடவுள் கூட காணிக்கைபோட்டால் தான்.காரியம் நடத்துவார் போலும்...!

கேரட் சரி இல்லை என்றால்கூடையில் வைக்காதீர்கள்.கேரக்டர் சரி இல்லை என்றால்கூடவே வைக்காதீர்கள்...!

போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம் இது.இதில் இன்பத்தையும் துன்பத்தையும்

வெற்றியையும் தோல்வியையும்சுமந்து செல்வது தான் வாழ்க்கை...!

குழந்தையா இருக்கும் போதுகண்ணு குட்டி என்று அழைத்தனர்.இப்போ எருமை மாடு என்று அழைக்கின்றனர்.இது தான் வாழ்க்கை... இவ்வளவு தான் வாழ்க்கை...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு