Mushroom Masala - கோழிக்கறி ருசியை மிஞ்சும் காளான் மிளகு மசாலா சாப்பிடலாமா?

Mushroom Masala - கோழிக்கறி ருசியை மிஞ்சும் காளான் மிளகு மசாலா சாப்பிடலாமா?
X

Mushroom Masala - சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த காளான் மிளகு மசாலா (கோப்பு படம்)

Mushroom Masala - கோழிக்கறிதான் பலருக்கும் பிடித்தமான ருசியான அசைவ உணவாக இருக்கிறது. அதன் சுவையை மிஞ்சும் காளான் மிளகு மசாலா சைவப் பிரியர்களுக்கு மிக பிடித்ததாக இருக்கிறது.

Mushroom Masala - சைவப் பிரியர்களுக்கு உற்சாகத்தை அள்ளி கொடுக்கும் காளான் மிளகு மசாலா செய்வது எப்படி என தெரிந்துக் கொள்ளலாம்.

அசைவம் சாப்பிடுவர்களுக்கு கோழி மிளகு கறியின் மீது தனி காதல் இருக்கும். இதற்கு கோழி கறியில் சேர்க்கப்படும் மிளகு முக்கிய காரணமாகும். அது கோழிக் கறியை ருசியாகவும் காரசாரமாகவும் மாற்றிடும். இதை ருசிக்க முடியாத சைவப் பிரியர்களுக்கு உருவாக்கப்பட்டதே காளான் மிளகு மசாலாவாகும். கோழிக்கு பதிலாக காளான் பயன்படுத்தி கோழி மிளகு கறி செய்முறையை அப்படியே பின்பற்ற போகிறோம். இதை மசாலாவாக அல்லது சிறிது தண்ணீர் ஊற்றி கிரேவி போல தயாரிக்கலாம். தோசை, பூரி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் சாதத்துடன் பிரட்டி சாப்பிடவும் மிக ருசியாக இருக்கும்.


இதை சமைத்த பிறகு சாப்பிட்டு பாருங்கள் கோழி மிளகு கறியை விட காளான் மிளகு மசாலா பத்து மடங்கு டேஸ்ட் அதிகமாக இருக்கும்.

காளான் மிளகு மசாலா செய்யத் தேவையானவை

காளான் - ஒரு பாக்கெட்

கடலெண்ணெய்

வெங்காயம்

தக்காளி

இஞ்சி பூண்டு விழுது

தனியா தூள்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

உப்பு

தண்ணீர்

சோம்பு

கறிவேப்பிலை

குறிப்பு

நீங்கள் கடையில் வாங்கும் காளான் மிகப்பெரிதாக இருந்தால் அதை நான்காக வெட்டவும். காளான் சிறிதாக இருந்தால் அதை இரண்டாக வெட்டினால் போதும். காளானை பயன்படுத்தும் முன் தண்ணீரில் நன்கு கழுவி விடுங்கள்.

காளான் மசாலாவுக்கு உரிய சுவை கிடைக்க மிளகு மற்றும் சோம்பு மிக்ஸிங் தேவை. மிக்ஸியில் 30 கிராம் மிளகு மற்றும் பத்து கிராம் சோம்பு சேர்த்து அரைத்து விடவும்.

காளான் மிளகு மசாலா செய்முறை

முதலாவதாக கடாயில் 15 ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பொடிதாக நறுக்கிய நான்கு வெங்காயங்களை போடவும். கடலெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துங்கள்.

வெங்காயம் பொன்னிறத்திற்கு மாறியவுடன் ஆறு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

இஞ்சி பூண்டு சேர்த்த பிறகு வெங்காயம் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும்

பச்சை வாடை பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளிகளை நறுக்கி கடாயில் போடவும்

தற்போது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் தனியா தூள் சேர்க்கவும்

இதன் பிறகு காளான் மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்க்கவும்


மசாலாப் பொருட்களை நன்று மிக்ஸ் செய்துவிட்டு நிறம் மாறும் போது ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்

தற்போது கொஞ்சம் கறிவேப்பிலையை போடவும்

நாம் சேர்த்த தனியா தூள், மஞ்சள் தூள், தக்காளியின் பச்சை வாடை போவதற்கு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஆகும்.

அனைத்தும் நன்றாக வெந்த பிறகு எண்ணெய் பிரிந்து வரும். மசாலா தயாராகி விட்டது என நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக வெட்டி வைத்திருக்கும் காளானை சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குள் காளான் நன்றாக வெந்து சுருங்கிவிடும்.

இறுதியாக மிக்ஸியில் அரைத்த மிளகு - சோம்பு பவுடரை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கினால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.

Tags

Next Story
ai in future agriculture