முருங்கை கீரை சூப் பயன்கள் தமிழில்..

Murungai Keerai Soup Benefits in Tamil
மருத்துவ குணம் நிறைந்த மரங்ககளில் முருங்கையும் ஒன்று. இதன் காய்களை உணவுகளில் அன்றாட பயன்டுத்தலாம். இதன் இலைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளது.
முருங்கை இலை சூப் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் . முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும்.
இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும்.
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. இளம் முருங்கை இலைகளை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நெய்யோடு முருங்கை இலை சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை குடிக்கலாம்

முருங்கைக் கீரை சூப் செய்யத் தேவையான பொருட்கள்:-
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 5
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
முருங்கைக் கீரை சூப் செய்முறை:-
முதலில் கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு முருங்கை இலையில் உள்ள காம்புகளை நன்றாக ஆய்ந்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றில் தண்ணீர் விட்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தீ மூட்டி, பாத்திரம் சூடாகிய பின்னர், அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும், அதோடு முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்போது அவை சேர்ந்து நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடத்திற்குகாய்ச்சவும். 2 டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரும் வரை அவ்வாறு செய்ய வேண்டும்.
இந்த சூப்பை கொஞ்சம் இளம்சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. காரம் அதிகம் சேர்ப்பர்வர்களாக இருந்தால், சிறிதளவு மிளகுத் தூள், வெள்ளைப் பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu