Mudakathan Keerai: முடக்கு வாதத்தை அறுக்கும் முடக்கத்தான் கீரை

Mudakathan Keerai: முடக்கு வாதத்தை அறுக்கும் முடக்கத்தான் கீரை
X

முடக்கத்தான் கீரை 

சிலருக்கு காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் மூட்டுகளில் அதிக வலி இருக்கும் இதற்கு சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான்: முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, முடக்கத்தை அறுப்பது என்ற அர்த்தம் வரும் வகையில இதுக்கு பேர் வச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்.

தேடிப்போன மூலிகை காலில் சிக்கியது என்பது போல இவை பெரும்பாலும் சாலையோரங்களிலும், ஆற்றோரங்களிலும் பரவலாக களைபோல வளர்ந்து இருப்பதைக் காணலாம். இது சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் நம்மை அண்டாது.

சிலருக்கு காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் மூட்டுகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும்.


பொதுவாக வாத நோய்கள் அதிகமா வரும் காலம் குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கு.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா உள்ளது. முடக்கத்தான் கீரையை அரைத்து சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


மூல நோய்:

மலச்சிக்கல் மற்றும் மூல வியாதி வந்தவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வநர மூல நோய் விரைவில் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனைகள்:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக முடக்கத்தான் செயல்படுகிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு

இந்த முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயிற்றில் பூசி வர கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

மூட்டு வலி:

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் வாதத் தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில் னைத்து எல்லா மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.

தலைவலி:

ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நல்லா கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.

பொடுகு தொல்லை:

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் முடக்கத்தான் இலைகள் சேர்த்த எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து தோசையாகவும் துவையலாகவும் சாப்பிடலாம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!