மாணவமணிகளே! உங்களுக்கான பொன்மொழிகள்

Tamil Quotes For Students
X

Tamil Quotes For Students

Tamil Quotes For Students-மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க யதார்த்தமான எதிர்பார்ப்புகளை உருவாக்குவதும், எதைச் சாதிக்க முடியும் என்பதில் யதார்த்தமாக இருப்பதும் இன்றியமையாதது.

Tamil Quotes For Students

ஒரு காரியத்தை செய்ய முயலும் போது அதனை ஊக்கத்தோடு செய்தால் , அதில் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்களைத் தேடி வரும். அதுவும் மாணவப் பருவத்தில் ஊக்கமும் உற்சாகமும் அளித்தால், அது அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை பயக்கும்.

எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து என்று நாலடியார் செய்யுள் கூறுகிறது. இந்த பதிவில் மாணவர்களுக்கான பொன்மொழிகளை அளித்துள்ளோம்


ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்

பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும்.

லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி.

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது.

எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.

நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!

உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே

பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்படவேண்டும் - பிளாட்டோ

கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது. -அரிஸ்டாடில்

கல்வி என்பது வெறுமனே ஒரு வாளியை நிரப்பும் விஷயமல்ல, அது நெருப்பை பற்ற வைக்கும் விஷயம் போன்றது

கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று, அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்

கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story