தளராத முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தா வாழ்க்கையில் முன்னேற்றமே....

Motivational Quotes in Tamil
X

Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil-பறவைகள் பலவிதம் என்பது போல் மனிதர்களில் பலவிதம்தான். ஒரு சிலர் தானாகவே திட்டமிட்டு செயலாற்றுவர். ஆனால் ஒரு சிலரை ஊக்கப்படுத்தினால் முன்னேறிக்கொண்டேயிருப்பார்கள்.

Motivational Quotes in Tamil

வாழ்க்கை என்பதே போராட்டந்தாங்க...ஒவ்வொருநாளும் பிரச்னைகள் என்பது வந்துகொண்டேதானிருக்கும். அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் ஆர்வம் இருக்க வேண்டுமே ஒழிய அதனைக் கண்டுஓடி ஒளிவது கூடாது.எந்த ஒரு விஷயத்திற்குமே முயற்சி முக்கியமுங்க.. முயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லைங்க... சாதாரணமா ஒரு இடத்துக்கு ஒரு குறிப்பிட்டநேரத்துக்கு கிளம்ப வேண்டும்எ ன்றால் கூட நாம் திட்டமிட்டு முயற்சி செய்து அந்த டைமுக்குள் போய்சேர முடியும். மெதுவாக எழுந்து மெதுவாக எல்லாம்செய்தபின் போவது என்பது அந்த நேரம் முடிந்துவிடும். ஆக எல்லாவற்றுக்குமே ஒரு முயற்சி என்பது அடிப்படை காரணியாக அமைந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

நீங்கள் முயற்சிசெய்யும்போது பல தடைகள் வரலாம். அதனை உரிய முறையில் எதிர்த்து தன்னம்பிக்கையுடன் போராடித்தான் நீங்க ஜெயிக்கணுமுங்க.வெற்றி என்பது அவ்வளவு ஈசியா கிடைச்சிடாதுங்க... பகீரதப்பிரயத்தனம் செஞ்சாதான் வெற்றி கிட்டும். சும்மா உட்கார்ந்தஇடத்தில் பிளான் போட்டீர்களானால் உங்க பிளானும் சேர்ந்து உட்கார்ந்துகொள்ளும்...உஷாருங்க..

நாம் மற்றவர்களிடம் வேறுபட்டு நிக்கணும்னா... வெறித்தனம் அதாவது வெற்றி என்பதைப் பெறவேண்டும்.. சாதிக்க வேண்டும்.. கொள்கை, லட்சியப் பிடிப்புகளோடு வாழ்ந்து காட்டவேண்டும் என்று உங்கள் மனதில் ஒரு வைராக்கியத்தினை வளர்த்துக்கொண்டால் யாரும், எதுவும் செய்யமுடியாதுங்கோ..

சும்மா மற்றவர்கள் உங்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருக்கணும்னு நீங்க நினைச்சீங்கன்னா உங்க வெற்றி தள்ளிப்போயிடுங்க.. சுயமா சிந்திச்சு செயல்பட்டால் வெற்றியானது உங்கள்காலடியிலவந்து விழுங்க... பார்த்து செய்யுங்க... மற்றவர்களோடு ஒப்புமை வாழ்க்கை வாழாதீங்க.. எப்படி பொருளுக்கு தரம்னு விளம்பரப்படுத்தறாங்களோ அதுபோல் உங்களுக்குன்னு ஒரு தரத்தை நீங்க உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்க பெயர் சொன்னால அதிர வேணாங்க... தரம் தெரியணும்..அவரா நல்ல உழைப்பாளி.. நேர்மையானவர்... நல்ல உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என வரிசையாக பாசிடிவ் எண்ணங்களோடுஉங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்டுங்க...காட்டணுமுங்க...

ஊக்கத்திற்கான வரிகள்இதோ உங்களுக்காக....

உனக்காக ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொள்அதில் மற்றவர்களையும் தொடரச் செய்... வெற்றி உனக

உன்னை எத்தனை பேர் கீழே தள்ளிவிட்டாலும் நீ உன் நம்பிக்கையால் கீழே விழாமல் இறுகப் பற்றிக்கொள்.

இருட்டுதான் வெளிச்சத்தை உருவாக்கியது..அதுபோல் உன் வாழ்க்கையின் இருள்களுக்கு நிச்சயம் ஒளி பிறக்கும்

சந்தேக பேயை விரட்டிவிடு... மகிழ்ச்சியை பொங்க விடு..நம்பிக்கையை பாக்கெட்டில் போடு...அப்புறம் பார்...

உன் வாழ்க்கையில் அவமானங்கள் எல்லாம் வெகுமானங்களே... கவலைப்படாதே... பக்குவப்படுவாய்..

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கும் மனவலிமையை பெற்றுக்கொள்... கஷ்டம் தீரும்..

உன்னை மற்றவர்களோடு வேறுபடுத்தி பார்க்காதே உனக்கு நீதான் ராஜா... மற்றவர்களெல்லாம் கூஜாதான்..

பலமுறை தோல்வி என்றால் உன் இலக்கு சரியில்லை.பாதையை மாற்றி பயணம் செய்...வெற்றி தானாக வரும்..

நம்பிக் கை வை... நிச்சயம் வெற்றிதான்...

வேதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கு...தன்னம்பிக்கை, துணிச்சல் இவையிரண்டும் இருந்தால்

உன்னை யார் எதிர்த்தாலும் நீ அசரமாட்டாய்....என்னால் முடியும் என்பவரோடு பழகுஎல்லாம் தெரியும் என்பவரிடமிருந்து விலகு...

நீ மனதில் உருவாக்கிய லட்சியத்தை அடையும்வரை முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதே....

நீ வாழ்வில் பட்ட அவமானங்களை என்றும் மறந்து விடாதே ... அது நினைப்பிலிருந்தால்தான் நீ மற்றஅவமானங்களில் இருந்து தப்பிக்க முடியும்..

முயற்சி...தன்னம்பிக்கை என்ற இரு கண்கள் இல்லாவிட்டால் நீ கண்பார்வையற்றவன்தான்...

தாழ்வு மனப்பான்மையை முதலில் தகர்த்தெறி...அது உன் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும்..

தனியொருவனாக நீ ஜெயிக்கவேண்டும் என்றால்உன்னிடம் யானை பலம் கொண்ட நம்பிக்கை வேண்டும்..

உனக்கு எதிரியே இல்லை என்றால் நீ இலக்கை நோக்கி பயணம் செய்யவில்லை என்றே அர்த்தம்..

நம்பிக்கை என்ற கதவின் திறவுகோல்தான்தன்னம்பிக்கை... அதுதான் திறக்கும்...

மனஉறுதியே வெற்றிக்கு வழி...உறுதிஇல்லாவிட்டால்உன் செயல்கள் சீர்குலைந்து விடும்.. உறுதியோடிரு...

முயற்சியில் தோல்வி என்றாலும் நீ பெற்றபயிற்சியில் அனுபவத்தினை கற்றாய்...

தன்னம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை காரணி....

உழைக்க தயங்காதே... வியர்வைத்துளிகள் சாதாரணமானவை அல்ல.... வெற்றி நிச்சயம்..

முயன்று பார் நிச்சயம் உன்னால் முடியும்..முடியவில்லை என விட்டுவிடாதே...

வானத்திற்கு அழகு கூட்டுவது வானவில்வாழ்க்கைக்கு அழகு கூட்டுவது நம்பிக்கை

தொடர் தோல்வி கண்டாலும் கலங்கி விடாதே...வெற்றிக்கு மிக அருகில் நீ நெருங்கிவிட்டாய்...

நம்பிக்கையும் திறமையும்தான் வெற்றிக்குவாழ்க்கையின் அடிப்படை காரணிகள்

என்னால்முடியும்...என்னால் முடியும்.. என சொல்லிக்கொண்டேயிரு... முடித்துவிடுவாய்...

வெற்றிகள் அனைத்தும் தன்னம்பிக்கை உள்ளவரிடத்தில்தான்போய் சேருகிறது.

ஆயிரம் தடைகள் வந்தாலும் கலங்கிவிடாதேஅடிமேல் அடி எடுத்து வை... ஆட்டம் நின்றுவிடும்..

உன்னை ஏளனமாக பேசியவர்களின் வாய்க்கு பூட்டுஉன் வெற்றிச்செய்தியே... முயற்சி செய்...முன்னேற்றம் கிட்டும்.

நேரத்தினை வீணாக்காதே... அது உன்னை தோற்கடித்துவிடும்... உழைக்க தயங்காதே...

என்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை

பாதைகளில் தடைகள்இருந்தால்அதை தகர்த்து விட்டு தான்செல்ல வேண்டும் என்றில்லைதவிர்த்து விட்டும்செல்லலாம்..

தோல்விக்கான காரணங்களைஆ ராய்ந்து அறி... அதுவே உன் வெற்றிக்கு வழி வகுக்கும் பாதை....

கடிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பதன் காரணம் உனக்கு தெரியுமா?... அது ஓய்வில்லாமல் உழைப்பதால்தான்..

முடியாத விஷயங்கள்...சிக்கலான பிரச்னைகளில்தான்வலிகளும்அதிகம்...சவாலாக சந்தியுங்கள்....

கடினமான இலக்குகளையும் நாம் வெல்லமுடியும்என்பதை நிர்ணயித்து நடை போடுங்க...

எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்!

எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!

அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!

முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!

சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!

நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்!

வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது!

உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி!

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்.

விரிக்காத சிறகுகள் பாரம்தான் பறவைக்குவிரித்தபின் உயர பறப்பது போல் நம் வாழ்க்கையும்

திட்டமிட்டால் உயர உயர போகலாம்...செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!

கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!

உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. "பலத்தை உறுதிப்படுத்து" பலவீனத்தை உள்ளடக்கு"

சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்!சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும்.

வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business