அம்மா...அம்மா...அம்மா.... தாயில்லாமல் நானில்லை....படிங்க...

அம்மா...அம்மா...அம்மா....  தாயில்லாமல் நானில்லை....படிங்க...
X
mothers day quotes in tamil-அம்மா...அம்மா...அம்மா.... தாயில்லாமல் நானில்லை....படிங்க...

mothers day quotes in tamil

உலகில் ஜனிக்கும் எந்த ஒரு மனித உயிருக்கும் தாய் என்பவள் தான் முதல் அறிமுகம். அவள் பார்த்து நம் உறவுகளை கை காட்டினால்தான் நமக்கு உலகமே தெரிய வரும். அந்த வகையில் அம்மா என்பவர்தான் நமது முதல் ஆசான்...

1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்.இது உச்சரிப்பாக U.S. விடுமுறை தின சட்ட உருவாக்க அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க ஒன்றிய அதிபர் உட்ரோ வில்சன் அவர்களாலும், அமெரிக்க ஒன்றிய காங்கிரஸ் அறிவிப்புக்களினாலும்மற்றும் பிற அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் அவர்களின் அறிவிப்புகளின் மூலமும் பயன்படுத்தப்பட்டது.

mothers day quotes in tamil

mothers day quotes in tamil

அன்னையர் தினத்தினைப் பொறுத்தவரை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நம்மை இந்த உலக்குக்கு அறிமுகப்படுத்திய அன்னையின் திருநாள்.எதுவுமே உலகில்இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாத போது தான் பலருக்கும்தெரிகிறது. அம்மா இல்லாதபோதுதான் அம்மாவின் தியாகங்கள் நமக்கு தெரிகிறது.இருக்கும்போது எவரும் கண் டுகொள்வதில்லை. வயதான காலத்திலும் தன் பிள்ளை, தன் மகள் என்று ஓய்வில்லாமல் உழைத்தாலும் அவர்களுடைய உண்மையான அர்ப்பணிப்பை எவருமே ஆதரிப்பதில்லை. ஏன்.. அன்பான கனிவான வார்த்தைகள் கூட பேசுவதில்லை. அவரை இழந்த பின் தான் மற்றவர்களுக்குஅருமையே தெரிகிறது. வீடே வெறிச்சோடிவிடும்... அந்த ஒரு ஜூவன் இல்லாமல்...

mothers day quotes in tamil

mothers day quotes in tamil

தாயின் சிறப்புகள்....

*மற்ற உறவுகளைப்போல் போலி பாசம் இல்லாத ஆத்மா

*தன் பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்யும் ஜூவன் அம்மாதான்...

*வீட்டில் உள்ளவர்கள் அனைரும் உணவருந்திய பின் இருக்கும் மீதியை உண்டு வாழும் வாழ்ந்த தியாகச் செம்மல்

*எந்த சூழ்நிலையிலும் தன் வீட்டின் மரியாதையை விட்டுக்கொடுக்காத சுயமரியாதை மிக்க ஆத்மா

*பேரன், பெயர்த்திகளை காக்கும் காவல் தெய்வம்

*மருமகளையும் மகள் போல் பாவிக்கும் ஆத்மாக்கள்...அம்மா.. அம்மா... அம்மா...வின் வாசகங்கள்..

அம்மா ! மறுமுறை உந்தன் கருவறை வேண்டும் முழுவதும் துறந்து முழுமையாக உன்னில் சங்கமம் ஆக மறுபடி என்னை மடியினில் சுமப்பாயா?

வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே.

தன் குழந்தையின் வாழ்க்கை வளர தன்னையே வருத்தி கொள்ளும் தாயாரும் உண்டு

என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா.

இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை.

அம்மாவுக்கொரு கடிதம் உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால் தானோ எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் அழைக்கிறேன் உன்னையே "அம்மா " என்று.

மின்னல் மின்னும்போது அம்மாவைக் கட்டி அணைக்கும் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது, அம்மா அதைவிடப் பெரிய சக்தி என்று.

இறந்தாலும், பிள்ளைகளை நினைக்கும் இதயம், அம்மாவின் இதயம் மட்டுமே

உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் "ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா".

அன்பும் அக்கறை அரவணைப்பும் பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையானவாழும் கடவுள் அம்மா.

உலகில் தேடி தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்... தாயின் .

mothers day quotes in tamil

mothers day quotes in tamil

மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை.

ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்......

அம்மா அன்று நம் தொப்புள் கொடியை அறுத்தது நம் உறவை பிரிக்க அல்ல அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்.

முடியாத பாசம் உனக்காக அழும் விழிகள் நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை "அம்மா ".

படைத்தவன் கடவுள் என்றாள் என் தாயே எனக்கு முதல் கடவுள் நீதான்.

100 எலும்புகள் உடையும் அளவு மரண வலி *பிரசவ வலி* அதை தாங்கிய தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை தாங்க முடிவதில்லை.

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்..!!

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தந்த தெய்வம் அம்மா !

எந்த திசையிலும் உன் முகமே என்னை அரவணைத்திட பார்த்திடுதே அன்னை உந்தன்மடி சாய்ந்து கிடந்திட நூறு ஜென்மம் வந்து ஏங்குகின்றேன் நித்தம் நித்தம் உந்தன் அன்பை பெற்றுவிட ஏழு ஜென்மம் எனக்கு வேண்டும் என்பேன்.

குளிரோடு கோடை வரும் மாரி மழையும் வரும் மாறி மாறி வரும் காலநிலை யாவும் மாற்றமின்றி தொடரும் தாயன்பு.

ஆயிரம் உறவுகள் அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா.

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…

நான் உன்னைபார்த்த பின்புதான் என் வாழ்க்கையை வாழ தொடங்கினேன்.

எது நாள் வரை உனக்காக காத்திருந்திருக்கிறேன்…

மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை,அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது…

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒருநல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்… அதுவே

நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…!!

விரும்பிய போது விரும்பினேன் என்பதை விட வெறுத்த பிறகும் விரும்பினேன் என்பதே உண்மை…

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.

தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு… குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது…!

ஒரு தாய் ஐந்து குழந்தைகளையும் வளர்த்து விடுவாள்…!

ஆனால் ஐந்து குழந்தைகளும் சேர்ந்து ஒரு தாயை காப்பாற்றுவது கடினம்…!!!

உயிர் தந்து உதிரம் பெருக்கிஆணோ, பெண்ணோ உருவறியாமல்உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவைநினைக்கும் போதே மனம் கசியும்விழியோரம் கண்ணீர் பெருகும்

mothers day quotes in tamil

mothers day quotes in tamil

ஒவ்வொரு முறையும் என்தாயுடன்கோவிலுக்கு செல்லும் போதுகோவில் சிலையிடம் காட்டிவிட்டுவருகிறேன் என்கடவுளை!

என் வாழ்க்கையில்எனக்கு கிடைத்த ஒரே வரம்என் அம்மா உனக்கு.

கருப்பை காதலோடு சுமக்கிறாள்!வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்!மறு பிறவி எடுத்து உனக்குஉயிர் தருகிறாள் அம்மா!

பூமி நம்மை தாங்கும் முன்னேகருவில் நம்மை தாங்கியஅன்னைக்கு என் இனியஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வெறுப்பு, பிடிவாதம், கோவம் என தன்பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்புமட்டுமே ஆத்மா

காற்றே இல்லாமல் சுவாசித்தேன்கண்கள் இல்லாமல் ரசித்தேன்கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்என் அன்னையின் கருவறையில் மட்டும் .

படைத்தவன் கடவுள் என்றல்என் தாயே எனக்கு முதல் கடவுள்.

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்ஆனால் ஒரு நாளும் தன்னைபற்றிகவலைப்படாத என் தாய்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story