மனம் விட்டு பேசுங்கள்..அன்பு பெருகும்..அன்னை தெரசா..

Annai Teresa Quotes Tamil
X

Annai Teresa Quotes Tamil

Annai Teresa Quotes Tamil-இந்தியாவில் சமூக சேவையால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் அன்னை தெரேசா. இவரின்துாய்மையான சேவையால் இவருக்கு பாரத ரத்னா விருதை அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

Annai Teresa Quotes Tamil

அன்னை தெரேசா இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்குகிறார். (கோப்பு படம்)

அன்னை தெரேசா 1910 ம்ஆண்டு ஆகஸ்ட் 26 ம்தேதி பிறந்தார்.அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார் .45வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

பாரத ரத்னா விருது

1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்....

புன்னகையே அன்பின் சின்னம்...அதுவே நாம் பிறருக்கு கொடுக்கும்அழகிய பரிசு.

இறக்கத்தான் பிறந்தோம்.. அதுவரை இரக்கத்தோடுஇருப்போம்..

அழகு என்பது முகத்தைப்பார்த்து தீர்மானிப்பது அல்ல .உண்மையான மனதைப்பார்த்து தீர்மானிப்பதே உண்மையான அழகு இதை புரிந்துகொள்ளாதவன் மனிதனே இல்லை..

என்னால் முடிந்தது உங்களால் முடியாமல் இருக்கக்கூடும்.. உங்களால் முடிந்தது என்னால் முடியாமல் இருக்கக்கூடும். நாம் நினைத்தால் முடியாததும் முடியக்கூடும்..

அன்பை மட்டும் கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்..

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்க..

கண்ணுக்கு தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை...

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்(பு)பைச் சொற்களால் விளக்கவும் முடியாது.. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு.

கண்ணுக்கு தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை..

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டுமே அன்னையாக முடியும் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னையாகலாம்.

அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்..

அன்பை மட்டுமே கடனாக கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் திரும்ப தரும்.

இருகைகூப்பி இறைவனை வணங்குவதை விட ஒரு கைநீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.

வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை .

வெறுப்பை யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும்.

மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.

வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.

நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.

எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடுவதில்லை. எனவே, பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.

மனம் விட்டு பேசுங்கள், அன்பு பெருகும்.

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.

இந்த உலகில் நாம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எப்படி அன்பைச் செலுத்த முடியும்?

உங்கள் வெற்றி என்பது, என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, உங்கள் கனவை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.

பகைமையை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள். பிறரின் தவறை நீங்கள் மன்னித்தால் இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பான்.

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.

திறமை மலைகளையே நகர்த்தும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் மீது உனக்கு அன்பு செலுத்த நேரம் இருக்காது.

என்னால் முடியாதது உங்களால் முடியும் உங்களால் முடியாதது என்னால் முடியும் இருவரும் இணைந்தால் எல்லாம் முடியும்.

பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து பாருங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார்.

நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.


இல்லத்தில் தங்கியுள்ள சிறுவனுக்கு அன்பால் உணவு ஊட்டும் அன்னை தெரேசா.(கோப்பு படம்)

சக மனிதருக்கு உதவுவது ஆண்டவனுக்கு உதவுவதாகும். எனவே எச்சமயத்தாரும் ஏழைகளுக்கு உதவத் தயங்கக்கூடாது.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை!

அன்பு செலுத்துங்கள் காலம் மிக குறைவாக இருக்கிறது.

ஒரு செயலைச் செய்வது வெற்றியல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு