என்னைக் கலிதீர்த்தே ஏற்றம் புரிய வந்த கண்ணம்மா..

என்னைக் கலிதீர்த்தே ஏற்றம் புரிய வந்த கண்ணம்மா..
X
Sentimental Father Daughter Quotes in Tamil-உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவுதான் என்கின்றனர் பல அறிஞர்கள்.

Sentimental Father Daughter Quotes in Tamil

அப்பாக்களுக்கு எப்போதுமே மகள் தான் செல்லம். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

உண்மையில் டீன்ஏஜ் பெண்களுக்கு அம்மாவை விட அப்பாவின் பாசம் தான் அதிகம் தேவைப்படும். உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவுதான் என்கின்றனர் பல அறிஞர்கள்

ஒரு பெண் குழந்தைக்கு தன்னுடைய அப்பா தான் இந்த உலகின் முதல் சூப்பர் ஹீரோ. ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என திட்டமிடுவதில் அப்பாவின் பங்கு அளப்பரியது. மகளுக்கு வலிமை, சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்பிப்பதில் அவருக்கு ஈடு இணை இருக்க முடியாது.

தோழன்:

தங்களது வாழ்நாளில் நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே உறவு தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

அறிமுகம் :

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன் :

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

நண்பன் :

காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

ஆதர்ச நாயகன்

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

இந்த பதிவில் அப்பா மகள் உறவு குறித்த பொன்மொழிகளையும் கவிதைகளைமும் பார்க்கலாம்

எந்த பெண்ணும் அவளின்

கணவனுக்கு ராணியாக

இல்லாமல் இருக்கலாம்

ஆனால் நிச்சயம்

அவளின் தந்தைக்கு

இளவரசியாக இருப்பாள்

மகள் பிறந்ததும்

புதிதாய் நடைப்பழக

கற்றுக்கொள்கிறான்

ஒவ்வொரு தந்தையும்

அவளின் கைகளை பிடித்து

பெண்கள் தந்தையை

அதிகம் நேசிக்க காரணம்

எவ்வளவு அன்பு வைத்தாலும்

தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்

அவளின் தந்தை என்பதால்

ஆயிரம் உறவுகள்

நம் அருகில் இருந்து

நமக்கு ஆறுதல் சொல்லி

அணைத்தாலும்

அப்பாவின் அரவணைப்பில்

ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்

பெண்களுக்கு வாழ்வில்

ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்

அவளின் வாழ்நாள் முழுதும்

தன் அப்பாவின் உறவைப்போன்று

ஒரு உறவைப் பெறவே முடியாது

அவளில்லா நிறைவும் இல்லை

மகளில்லா மகிழ்வும் இல்லை

அவள் என்னை விட்டு பிரிந்து

அங்கே மருமகளாய் செல்கையிலே

மனம் ஏற்கா ஓர் விடையிங்கே

பிரியா விடை

தேவதையாய் ராட்சசியாய்

தாயாய் தங்கையாய்

தமக்கையாய் தோழியாய்

இருந்திடுவாள் பலவகையாய்

அவள் அவளாய்

ஆனந்தமாய் இருந்திடுவாள்

தந்தைக்கு மகளெனும் போதிலே

ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின்

மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின்

ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது

மகளை பெற்ற

தந்தைக்கு மட்டுமே தெரியும்

தன்னை பெற்ற அன்னையின்

மறுபிறவி மகள் என்று

ஆணிடம் அடம் பிடித்தால்

சாதித்துவிடலாம் என்பதை

பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே

அவர்களின் அப்பாதான்

பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்து, அவள் ஆழ் மனதை புரிந்துகொள்ள, அவள் தந்தையால் மட்டுமே முடியும்!

மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே

அப்பா கைக்குள் மகள் இல்லை! மகள் கைக்குள் தான் அப்பா! தொட்டிலில் தொடங்கும் இந்த பாசத்துக்கு வாழ்நாள் முழுவநும் மவுசு அதிகம் தான்

தந்தையின் கண்களில் கண்ணர் ஆனந்தமாய் ஊற்றெடுப்பது இரண்டு இடத்தில்! ஒன்று குழந்தையாய் அவளை கையில் ஏந்தும் போது. இரண்டு அவளை வேறொரு ஆடவன் கையில் கொடுக்கும் போது!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!