Most Google searched Recipes-2023 ல் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 ரெசிபியின் லிஸ்ட்!

Most Google searched Recipes -கூகுளில் தேடப்பட்ட டாப் 10 ரெசிபியின் லிஸ்ட் (கோப்பு படம்)
Most Google searched Recipes -2023 ல் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 ரெசிபியின் லிஸ்ட்!
ஒரு நாளில் ஒவ்வொரு ஒரு வினாடியும் 99,000 கேள்விகளோடு கூகுளில் தேடுதல் ஈடுபடுகின்றோம் என கூகுள் அறிக்கை தெரிவிக்கின்றது
கூகுள்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானது. ஏதாவது தலைப்பைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா? கூகுளில் தேடு கட்டாயம் கிடைத்துவிடும் என்ற வார்த்தையை நம்மில் பலர் அடிக்கடி உபயோகிப்போம். அந்தளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இணைந்துவிட்டது கூகுள். ஒரு நாளில் ஒவ்வொரு வினாடியும் 99,000 கேள்விகளோடு கூகுளில் தேடுதல் ஈடுபடுகின்றோம் என கூகுள் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்நிலையில் நடப்பாண்டில் அதாவது 2023 ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபி குறித்த வருடாந்திர அறிக்கையை கூகுள் வெளியிட்டுள்ளது. இதோ அதன் முழு விபரம் இங்கே..
மாங்காய் ஊறுகாய் செய்முறை:
மாங்காய் எந்த பருவக்காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவுப்பொருள்களில் ஒன்று. என்ன ருசியாக சமைத்தாலும் ஊறுகாய் இருக்கா? என தான் கேட்போம். அப்படிப்பட்ட ஊறுகாயை ருசியாகவும், பலநாள்கள் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்வது? என்பது பலருக்கு தெரியாது. இந்நிலையில் தான் கூகுளின் உதவியை நாடியுள்ளனர் இந்திய மக்கள்.
இதனால் தான் மாங்காய் ஊறுகாய் செய்முறை குறித்த தேடல் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மாங்காய் ஊறுகாயின் ருசியை அறிந்தவர்கள் இதை திரும்பவும் ருசிப்பார்கள் என்பதற்கு, இந்த ரெசிபியின் தேடல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது தான் சான்று.
செக்ஸ் ஆன் தி பீச் ரெசிபி:
விடுமுறை நாள்களில் கடற்கரையில் நேரத்தைச் செலவிடுவது என்பது பலருக்கும் பிடித்த விஷயம். அதுவும் அங்குள்ள பானங்களை அருந்துவது என்பது தனி ருசி தான். இதில் முக்கியமானது தான் ஓட்கா, ஆரஞ்சு ஜுஸ், பீச் ஸ்னாப்ஸ் மற்றும் நெல்லிச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் செக்ஸ் ஆன் தி பீச் ரெசிபி. கூகுளின் தேடல் 2023 பட்டியலில், ரெசிபி நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளது.
பஞ்சாமிர்த செய்முறை:
இந்தியாவில் உள்ள புனித தலங்களி்ல் வழங்கப்படும் பிரசாதம் தான் பஞ்சாமிர்தம். பால், தயிர்,நெய், தேன் மற்றும் சர்க்கரை, பழங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் இதை வீடுகளில் எப்படி செய்ய வேண்டும்? என்ற தேடல் இந்தாண்டு அதிகமாக இருந்துள்ளது. இதனால் தான் கூகுள் தேடலில் இந்திய அளவில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.
விரத நாள்களில் தெய்வங்களுக்குப் படைத்து நாமும் சாப்பிடும் போது நாள் முழுவதும் சுறுசுறுப்பகவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
ஹகுசாய் செய்முறை:
ஊறுகாய் ரெசிபி தான் ஹகுசாய் என்பது. ஆனால் ஜப்பானிய செய்முறையில் முட்டைக்கோஸ், கேரட், கோஷர் உப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படும் வித்தியாசமான ரெசிபியை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர். இதனால் தான் கூகுள் தேடலில் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது பெய்ஜிங்கிற்கு அருகில் தோன்றியது மற்றும் கிழக்கு ஆசிய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபியாகும்.
தனியா பஞ்சிரி செய்முறை:
பண்டிகை மற்றும் விரதத்தின் போது ஒரு பிரபலமான ரெசிபி தான் தனியா பஞ்சிரி. வறுத்த மல்லித் தூள் , துருவிய தேங்காய், சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் உலர் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ரெசிபியின் தேடல் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது.
கரஞ்சி செய்முறை:
தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் இனிப்புகளுக்குத் தனி இடம் உள்ளது. இதனால் தான் மாவு, ரவை மற்றும் நெய் , நட்ஸ் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கரஞ்சியை எப்படி செய்ய வேண்டும் என மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.
கூகுள் தேடலில் இந்த ரெசிபி 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.
திருவாதிரை களி செய்முறை:
தமிழர்களின் உணவு முறையில் முக்கியமானது திருவாதிரை களி. கடவுளுக்கு பிரசாதமாகப் படைக்கும் இந்த ரெசிபியை எப்படி செய்ய வேண்டும் என்று அதிகளவில் மக்கள் தேடியுள்ளனர். இதனால் தான் இந்திய அளவில் கூகுள் தேடலில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய், பருப்புகள் மற்றும தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு ரெசிபி தான் திருவாதிரை களி.
உகாதி பச்சடி செய்முறை:
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பண்டிகைக்காலங்களில் செய்யப்படும் ரெசிபி தான் உகாதி பச்சடி.
அறு சுவைகளின் கலவையோடு செய்யப்படும் இந்த ரெசிபியை மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியதால், இந்திய அளவில் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது.
கொழுக்கட்டை செய்முறை:
விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாள்களில் மக்கள் விரும்பி செய்யும் ரெசிபி தான் கொழுக்கட்டை. அரிசி மாவு, வெல்லம், பொரிகடலை சேர்த்து தயார் செய்யப்படும் இந்த ரெசிபியை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.
கூகுள் தேடலில் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது கொழுக்கட்டை ரெசிபி.
ரவா லட்டு செய்முறை:
பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளில் செய்யப்படும் ரெசிபி தான் ரவா லட்டு. எளிமையாக செய்யப்படும் இந்த ரெசிபியை இணையத்தில் அதிகளவில் மக்கள் தேடியுள்ளனர். இந்திய அளவில் இந்த ரெசிபியின் தேடல் 10 வது இடத்தைப் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu