Morning Habits- காலையில் எழுந்தவுடன்... நீங்க இதை எல்லாம் செய்தால் உங்க லெவலே வேற!

Morning Habits- காலையில் எழுந்தவுடன்... நீங்க இதை எல்லாம் செய்தால் உங்க லெவலே வேற!
X
Morning Habits-  அதிகாலையில் நல்ல பழக்கங்களை கொண்டிருந்தால், வெற்றிகள் கைகூடும் 
Morning Habits- ஒருநாளின் துவக்கமான காலை நேரத்தை நீங்கள் மிக சிறப்பாக துவக்கினால் அந்த நாள் முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். வெற்றியை நோக்கிய பயணமாக அந்த நாள் அமையும்.

Morning Habits- காலையில் எழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் நிறைய உள்ளது. அவற்றை செய்தால் உங்கள் காலை மட்டுமல்ல வாழ்வும் அழகாகும்.

காலையில் நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வது உங்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் நல்லது. அது உங்களின் நாள் முழுமைக்கும் ஒரு நேர்மறையான எனர்ஜியை கொடுக்கும். எனவே காலையில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.


அதிகாலையில் எழுவது

உங்கள் உடலில் உட்புற கடிகாரத்தை நன்றாக செயல்படவைக்க வேண்டுமெனில், அதிகாலையில் எழுந்திருத்தல் நலம். தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். இது உங்களுக்கு உறக்கம் – விழிப்பு நடைமுறையை முறையாக பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக இரவில் நன்றாக உறங்கவும் வழிவகுக்கிறது. ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் இது நல்லது.

உங்களின் போனை தேடாதீர்கள்

காலையில் எழுந்தவுடனே போனை தேடுவது என்பது கூடாது. அதிகப்படியான திரை நேரம் என்பது உங்கள் உடலுக்கும், கண்ணுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். காலை எழுந்தவுடனே, காலையில் செய்ய வேண்டிய வேலையில் சிறிது கவனம் செலுத்துங்கள். காலையிலே போனை தவிர்த்தீர்கள் என்றால், எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாட்டை அது குறைக்கிறது.

தண்ணீர்

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள். இது உங்கள் உடல் நீர்ச்சத்துடன் திகழ உதவும். உங்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, இரவில் நீண்ட உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.


உடற்பயிற்சி

உடல் உடற்பயிற்சிகள் எதையாவது கட்டாயம் செய்யுங்கள். யோகா அல்லது உடல் பயிற்சிகள், ஜிம் பயிற்சிகள் என எதுவாக வேண்டுமானாலும் அந்த பயிற்சிகள் இருக்கலாம். நீங்கள் உடற்பயிற்சியை அதிகாலையிலேயே செய்யும்போது, அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு சக்தியையும் தருகிறது.

சுவாசம் மற்றும் தியானம்

சுவாசப்பயிற்சிகள் மற்றும் தியானங்கள் செய்தால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இது உங்கள் நாளை நல்ல நாளாக துவக்க உதவும்.

சத்தான காலை உணவு

உங்கள் நாளை சத்தான ஆரோக்கியமான காலை உணவுடன் துவங்குங்கள். அதில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் இருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கு போதிய சக்தியை வழங்குகிறது.


உங்கள் நாளை ஒருங்கிணையுங்கள்

அன்றைய நாளின் உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள். அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாருங்கள். இதை செய்தாலே உங்களுக்கு வேலைகள் ஓரளவு முடிந்துவிடும்.

நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்

அன்றைய நாளில் நீங்கள் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று யோசித்து அதற்கு நன்றியுடையவராக நடந்துகொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் இது நன்மை தரும். நேர்மறையான சிந்தனை கொண்டவர்களாக நாளை துவங்குங்கள்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு நல்லது

உங்களின் வளர்ச்சிக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். கற்றல், வாசிப்பு என உங்களுக்கென்று குறிக்கோள்களை வகுத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்.

சரும பராமரிப்பு

உங்கள் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் சருமத்தை பாதுகாக்க முகத்தை அடிக்கடி கழுவுவது, சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மற்றும் மாய்சுரைசர் உபயோகிப்பது என அனைத்தும் செய்யுங்கள். அது உங்கள் சருமத்துடன் உங்கள் நாளையும் பொலிவாக்கும்.


அதிகாலையை வெற்றி கொள்ளுங்கள்!

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக திகழ முடியும் என்கிறது ஆய்வு. உண்மையில் இது சாத்தியமா வாங்க தெரிஞ்சுக்கலாம். மேலும் அதிகாலை 5 மணிக்கு எழுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிஞ்சுக்கலாம்.

ஒரு மாதம் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்ளுஙககள்.

வாழ்க்கையில் சாதித்த பல மனிதர்கள் அதிகாலையில் எழும் பழக்கம் உடையவர்கள் என்று கூறுவதுண்டு. அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் எழுந்திருந்தால் அந்த நாள் நன்றாக தொடங்கும் என நம்பப்படுகிறது. அதிகாலையிலேயே எழுவது அந்த நாளில் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காபி மற்றும் உடற்பயிற்சி என உங்க நேரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இப்படி அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்க நீங்கள் சீக்கிரமே படுக்கைக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில் அதிகாலையில் எழும் குழந்தைகள் தாமதமாக எழும் குழந்தைகளை விட ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை கண்டறிந்தனர். அதிகாலையில் சூரியனின் பிரகாசமான ஒளியை காண்பது உங்க மன அழுத்தத்தை குறைக்கிறது என்றும் ஆன்டிடிரஸ்ஸன் மருந்துகளை விட இது பலமடங்கு வேலை செய்ய உதவுகிறது என்றும் கூறினர். அதிகாலையில் எழுந்திருக்கும் போது நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்வீர்கள். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் திகழ்வீர்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!