Monsoon diseases- மழைக்கால நோய்களை தவிர்க்க, இதை எல்லாம் பாலோ- அப் பண்ணுங்க...

Monsoon diseases- மழைக்கால நோய்களை தவிர்க்க, இதை எல்லாம் பாலோ- அப் பண்ணுங்க...
X

Monsoon diseases- மழைக்கால நோய்கள் வந்தால் செய்ய வேண்டியது என்னவென்று  தெரிந்துக்கொள்வோம் (மாதிரி படம்)

Monsoon diseases- மழைக்காலம் வந்துவிட்டாலே, பலவிதமான உடல் உபாதைகளும் வந்துவிடுகின்றன. அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Monsoon diseases, prevention- ஊரெங்கும் இருமல், சளி, காய்ச்சல்னு மக்கள் அவதிப்பட்டுட்டிருக்காங்க. `தனக்கு வந்தாத்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்...' இந்தப் பழமொழி சிலபேருக்குத் தெரிஞ்சிருக்கும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, மூச்சிரைப்புன்னு பிரச்சினை அணிவகுத்து நிக்குது. இது ரெண்டு நாள் இருந்தா பரவாயில்ல... அது ரயில் மாதிரி நீண்டுக்கிட்டே போனா என்னாகும்? நாம செய்யக்கூடிய வேலை எதுலயும் ஒரு ஈடுபாடு இல்லாம இருக்கும்.

மழையும், பனியும் மாத்தி மாத்தி பாடாப்படுத்துது. அதனால இந்த நாட்கள்ல நிலவக்கூடிய குளிர்ச்சியான சூழல்ல சளியோட ஆதிக்கம் அதிகமா இருக்கும். காரணம் நம்மோட வாழ்வியல்முறைதான். எல்லா காலங்கள்லயும் நாம ஒரேமாதிரி சாப்பிடுவோம். ஆனா, தண்ணி குடிக்கிறதுல மட்டும் நம்மளையும் அறியாம பழக்கத்தை மாத்திடுவோம்.


மழைக்காலத்துலயும் பனிக்காலத்துலயும் குளிர் அதிகமா இருக்கிறதால இயல்பாவே தண்ணி குடிக்கிறது குறைஞ்சிரும். அதனால தண்ணி குடிக்கிற விஷயத்துல கவனம் செலுத்தணும். பலபேர் வெந்நீர் குடிப்பாங்க. வழக்கமா குடிக்கிற பச்சத்தண்ணிய குடிச்சாலே போதும்.

சிலபேருக்கு எல்லா நேரமும் ஃபேன், ஏ.சி இல்லாம சிலபேருக்கு முடியாது. ஹை மோட்ல வைக்கிறது பலபேரோட வழக்கம். இதனால சளித்தொல்லை மட்டுமில்லாம வேற சில பிரச்சினைகளும் வரிசைகட்டி நிக்கும். முதல்ல ஜலதோஷம் வரத்தொடங்கும்போது சூடா தண்ணி குடிச்சா சரியாயிரும். ஆனா, அதையே தொடர்ந்து குடிக்கக்கூடாது.


மணத்தக்காளிக்கீரையை சூப் வச்சி குடிச்சா ஜலதோஷம் பிடிக்காது. ஆனா, சூப்பை சூடா குடிக்கணும். அதை ஆற வச்சி குடிச்சாலோ மணத்தக்காளி கீரையை கடைஞ்சி சாப்பிட்டாலோ சளி கட்டிரும்.

இருமல், ஜலதோஷம் வந்தா தக்காளி சூப் வச்சி குடிக்கலாம். ஒரு தக்காளி, மூணு பல் பூண்டு எடுத்து நசுக்கி தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி உப்பு சேர்த்து சூடா குடிக்கணும். தொண்டை கட்டிட்டு இருந்தா ஒரு கிராம்பை தீயில சுட்டு ஒரு கல் உப்பு சேர்த்து அப்படியே கடிச்சி சாப்பிடணும். இதை ஒருநாளைக்கு ரெண்டு, மூணு தடவை செஞ்சாலே நல்ல நிவாரணம் கிடைக்கும்.


துளசி, கற்பூரவள்ளி, தூதுவளையோட மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க வச்சி குடிக்கலாம். மதிய உணவுல தூதுவளை துவையல் செஞ்சி சாப்பிடலாம். சாய்ங்கால நேரங்கள்ல கற்பூரவள்ளி இலையை பஜ்ஜி செஞ்சி சாப்பிடலாம். அதோட சுக்கு, மல்லி, மிளகு சேர்த்து கொதிக்க வச்சி தேநீர் செஞ்சி குடிச்சா இந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிரும்.


சாய்ங்காலம் சுக்கு மல்லியை தட்டிப்போட்டு குடிக்கிறது தப்பில்லை. ஆனா, மேலே சொன்ன மத்த விஷயங்களை தினமும் தொடர்ந்து செய்யக்கூடாது. விருந்து மட்டுமில்ல... மருந்தும்கூட மூணு நாளைக்கு மேல சாப்பிடுறது சரியில்லை.

நீண்டநாள் பிரச்சினையா இருந்தா மட்டும் அதுக்கு தகுந்தமாதிரி சாப்பிடணும். ஆனா, மழைக்காலங்கள்ல அப்பப்போ இந்த மாதிரி சாப்பிட்டு வந்தா போதும். ஜலதோஷம், சளி பிடிச்சா சிலபேர் நொச்சி இலையை கொதிக்க வச்சி ஆவி பிடிப்பாங்க. இதையும் ரெண்டு மூணு நாள் செஞ்சா போதும். சிலபேர் நாள்கணக்குல செய்வாங்க. அப்படி செய்றது அதுவே எதிரா வேலைசெய்ய ஆரம்பிச்சிரும். அப்படி எல்லாம் செய்வதை கட்டாயம் தவிர்ப்பது முக்கியம். இந்த விஷயங்களை பாலோ - அப் செஞ்சாலே, மழைக்கால நோய்களை சமாளிச்சிடலாம் தானே?

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!