Money saving strategies- பணத்தை சேமிக்க இத்தனை யுக்திகள் இருக்கிறதா? , இப்பவே தெரிஞ்சுக்குங்க ப்ரோ!

Money saving strategies- பணத்தை சேமிக்க இத்தனை யுக்திகள் இருக்கிறதா? , இப்பவே தெரிஞ்சுக்குங்க ப்ரோ!
X

Money saving strategies - பணம் சேமிப்பு யுக்திகள் குறித்த ஒரு பார்வை (கோப்பு படம்)

Money saving strategies- பணம் சம்பாதிப்பதை விட முக்கியமான விஷயம் அந்த பணத்தை சரியான முறையில் செலவு செய்வதும், குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதும்தான். பணத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Money saving strategies- பணத்தை சேமிப்பதற்கு பலரும் பலவிதமான முறைகளை கையாள்கிறார்கள். அத்தகைய சேமிப்பு முறைகள் திருப்திகரமான வகையில் பலன் அளிக்கிறதா என்பதையும் அவ்வப்போது ஆராய வேண்டும். குறுகியது, நீண்டகாலம் என நீங்கள் பணத்தை சேமிக்க தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் எதுவாகவும் இருக்கலாம். அதில் சில உத்திகளையும், சேமிப்புக்கான அணுகுமுறையில் சில மாற்றங்களையும் செய்யவேண்டியது அவசியமாகும். இதன் மூலம் சிறந்த முறையில் பணத்தை சேமித்து பயன்பெற முடியும்.

வைப்புநிதி திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் நீண்டகால சேமிப்புக்குப் பதிலாக, குறுகிய கால சேமிப்பு வரம்பை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது வைப்புநிதி மற்றும் அதற்கான வட்டித்தொகையை விரைவில் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்த திட்டங்களில் முதல் 3 வருடங்களுக்கு மட்டுமே வட்டித் தொகைக்கான சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


குறுகியகால சேமிப்பு இலக்கை தேர்ந்தெடுப்பது அவசியமானது. ஒரு வருட காலத்துக்குள் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயுங்கள். அதற்கான சேமிப்பு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்துக்கு, தொடர் வைப்புநிதி திட்டத்தை வருடங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல், மாதங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இது குறுகிய காலத்தில் உங்களுக்குத் தேவையான தொகையை எளிதில் சேமிக்க உதவியாக இருக்கும்.

உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் சேமிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு விகிதத்தை நிர்ணயித்து அதை தவறாமல் கடைப்பிடியுங்கள். குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். இதன் மூலம் சேமிப்பை பற்றிய தெளிவு கிடைக்கும். உங்களுடைய சேமிப்பு இலக்கை எளிதாக அடையவும் முடியும்.


சேமிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எத்தகைய சூழ்நிலையிலும் எடுத்து செலவழிக்காதீர்கள். சரியான முறையில் பட்ஜெட் போட்டு அதை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

சேமிப்புக்கு என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கை வைத்திருங்கள். சேமிப்புக்காக நீங்கள் ஒதுக்கும் எல்லா தொகையையும் இந்தக் கணக்கில் செலுத்துங்கள். இதில் இருந்து உங்களுடைய வெவ்வேறு சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

உங்களுடைய மாதாந்திர மற்றும் வருடாந்திர சேமிப்பு திட்டங்களுக்கு, வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் செலுத்தப்படும் முறையை தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் சேமிப்பு தவணைகள் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும்.


நிலையான மாத வருமானம் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது நீண்ட காலத்தின் அடிப்படையில் நல்ல சேமிப்பு முறையாகும். பல பெண்கள் பணத்தை சேமிப்பதற்கு சீட்டு கட்டும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் நிறுவனம் நம்பகமானதா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அதைப்பற்றிய முடிவை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
ai in future agriculture