mokka jokes ஏங்க...வாய்விட்டு சிரிங்க... நோய் விட்டுப் போகும்....
mokka ஜோக்ஸ்
இந்த காலத்துல கல்லுாரி பசங்க முதல் சின்ன சின்ன வகுப்புகள் படிக்கும்வரை உள்ள அனைவரிடமும் பேமஸ் எது தெரியுங்களா -? மொக்க ஜோக்ஸ் மற்றும் கடி ஜோக்ஸ் தாங்க...இதெல்லாம் யாருமே எழுதி வைச்சு வரதில்லைங்க ஒரு சில பசங்க இருக்காங்க.. அவங்க சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஜோக்ஸ் ரெடிசெய்வதில் வல்லவனா இருப்பாங்க. அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து பல நகைச்சுவைகளை தினந்தோறும் எதிர்பார்க்கலாம். அதுவும் கல்லுாரி பசங்க கிட்ட சொல்லவே வேணாம் போங்க...அவ்வளவும் கடி ஜோக்தான். அதுவும் கரண்ட்ஜோக்தான்னா பார்த்துக்குங்களேன்.. இதில் என்னா ஒரு விசேஷம்னு கேட்டா சொல்றவன் அப்படியே சிரிக்காம இதைச் சொல்லும்போதுதான் நமக்கே சுவாரஸ்யமாக கேட்க தோ௧ம்.
mokka jokes
mokka jokes
வாழ்க்கையில்எப்பவுமேநெருக்கடியாகவேவாழக்கூடாதுங்க..ஒருசிலபொழுதுபோக்குகளும்இருக்கணுங்க...இல்லாவிட்டால் நம்பளை எல்லாம் நோய் கொண்டுபோயிடுங்க.. அதுக்கு பேருதாங்க நகைச்சுவை...
நாகரிக வாழ்க்கையில இப்ப யாருக்குமே 24 மணிநேரம் போதலைங்க.. காரணம் டென்ஷன்.. டென்ஷன்..டென்ஷன்.. முன்பெல்லாம் ஆபீசில், பள்ளிகளில் வேலை செய்யறாங்கனா அவங்க வேலையை அங்க மட்டும்பாத்துட்டு வந்துடுவாங்க..இங்க வீட்டில குடும்பத்தினரோடு சந்தோஷமா இருப்பாங்க..
ஆனா...இப்ப எல்லாம் அப்படி இருக்க முடியலீங்கோ... பின்னிப் பெடல் எடுக்குதுங்க.. வேலை.. விடுமுறை நாட்களிலும் வீட்டிற்கு கொண்டு வந்து ஹோம் ஒர்க் செய்யறாங்க.. அது எந்த டிபார்ட்மென்டாக இருந்தாலும் சரிங்க.. .நிலைமை இப்போ இப்படித்தான். இதுபோல் எப்போதும் நெருக்கடியான மனநிலையில் இருப்பவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் மனவியல் மருந்துதாங்க காமெடி ,நகைச்சுவை எல்லாமே...
mokka jokes
mokka jokes
சினிமாவில் ஏங்க காமெடி வைக்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? ... எப்ப பார்த்தாலும் கதாநாயகன், பாட்டு, சண்டைன்னு இருந்தா உங்களுக்கு போரடிச்சு போயிடும்.. அதுக்காக உங்க நெருக்கடியான மனநிலையில் இருந்து உங்களை மாத்தணுமே அதுக்குத்தாங்க...நம்ம அண்ணன்கள் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம், கோவை சரளா எல்லாமே வந்ததுங்கோ...
சினிமாவில் மட்டுமில்லிங்க...இப்ப பத்திரிகைகளிலும், சோஷியல்மீடியாக்களுமே காமெடி ஜோக்ஸ்களை பதிவிட்டுபகிர்ந்துக்கிறாங்க...
அதனை கொஞ்சம் பார்ப்போமா.... பார்ப்போம்...
mokka jokes
mokka jokes
ஒரு சில காமெடி நடிகர்களை முதன் முதலா படத்தில் காட்டும்போதே தியேட்டருக்குள் உள்ளே இருப்பவர்கள் சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அந்த வகையில் இந்த இடத்தினை முதலில் பிடித்தவர் நாகேஷ்தான். இவருமைய காமெடி பற்றி நாம் சொல்லவே தேவையில்லைங்க. அவர பார்த்தாவே நமக்கு சிரிப்பு வந்துடும். இருந்தாலும் அவர் காமெடி டயலாக்கை பேசுவார் அது அவருடைய கூடுதல் சிறப்பு எ ன்று கூட சொல்லலாம்.
mokka jokes
அந்த காலத்துல சிரிப்பின் மூலம் பலசிந்தனைக் கருத்துகளை தன் சொந்த நடையில் அள்ளித் தெளித்தவர் யார் தெரியுமா? என்.எஸ். கிருஷ்ணன் -மதுரம் ஜோடி தாங்க.. அவ்வளவும் அர்த்தமுள்ள வரிகளாகவே இருக்கும். தற்காலத்தில் நடக்க வேண்டிய விஷயங்களை அவர்கள் அந்த காலத்தில் பாடிவிட்டு சென்றது நமக்கு இன்று வரை புல்லரிக்கிறது.
mokka jokes
mokka jokes
mokka jokes
mokka jokes
mokka jokes
இதுபோல் நாம்அன்றாடம் பேசும் பேச்சில் நகைச்சுவை கலந்து தானாகவே வரும். இறுகிய முகத்தோடு இருந்தால் இறப்பு உன் அருகில். அதனால் வாய்விட்டு சிரிச்சு பாருங்க..உங்களை அந்த காலன் காலதாமதத்தோடு அழைப்பான். அந்த வகையில் மற்ற உயிர்களில் இல்லாத விஷயத்தினை இறைவன் நமக்கு கொடுத்துள்ளான். அந்தக் கொடைதான் சிரிப்பு... சிரிச்சுக்கிட்டே இருங்க... உங்க ஆரோக்மயானது கூடும். ....
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu