Mesha Rasi Palan Tomorrow மேஷ ராசியினருக்கான நாளைய பலன்கள் என்னென்ன ?....படிங்க...

Mesha Rasi Palan Tomorrow  மேஷ ராசியினருக்கான நாளைய  பலன்கள் என்னென்ன ?....படிங்க...
X
Mesha Rasi Palan Tomorrow மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தலைமை பொறுப்பில் பெரிய அளவில் இருப்பார்கள்.எந்தவித பிரச்னைகளையும்,சவால்களையும் தைரியமாக கையாளுவார்கள்.மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் அதிகம்.

Mesha Rasi Palan Tomorrow

ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டிதான்...அதுவே இறுதி முடிவு அல்ல. நம் வாழ்க்கைக்கான ஒரு கைடுலைன் ஜோதிடம். அதிர்ஷ்டத்தால் அள்ளி கொட்டும் என ராசிபலனில் போட்டிருந்தால் உழைக்காமல் இருந்தால் கொட்டுமா? ....உழைக்க வேண்டும்...உழைப்பு இல்லாமல் உலகில் ஒன்றுமே இல்லை. எல்லா தொழிலுக்கும் அடிப்படை உழைப்புதான் என்பதை எவர் நம்புகிறாரோ அவரே வாழ்க்கையில் உன்னத நிலையினை அடைவார்கள்.

ராசி,நட்சத்திரம், ஜாதகம் போன்றவைகள் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு குழந்தை பிறந்ததும் அதன் தேதி,நேரம்,ராசி,நட்சத்திரம் குறித்து வைத்து ஜாதகம் எழுதிவிடுவார்கள்…மொத்தம் 12 ராசிகள் இருக்கிறது அதில் முதன்மையானது மேஷம், நாம் மேஷ ராசியில் பிறந்திருக்கலாமோ என்று பலர் ஏங்குவர்..ஏன் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள்.மேஷ ராசியின் குணாதிசயங்கள் என்ன,ஏன் அதனை இவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி பார்த்துவிட்டு நாளைய அக்டோபர் 24 ந்தேதிக்கான பலன்களைப் பார்ப்போம். .

பொதுவாக 12 ராசிகளும்நீர்,நெருப்பு,நிலம்,காற்று,ஆகாயம் என்று பஞ்சபூதங்களை உள்ளடக்கியது.ஒவ்வொரு ராசிக்கும் பஞ்சபூதங்களின் குணாதிசயத்தில் ஏதோ ஒன்று இருக்கும்,அதுபோல் மேஷம்,சிம்மம்,தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்சபூதங்களின் ஒன்றான நெருப்பின் குணங்கள் இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தலைமை பொறுப்பில் பெரிய அளவில் இருப்பார்கள்.எந்தவித பிரச்னைகளையும்,சவால்களையும் தைரியமாக கையாளுவார்கள்.மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் அதிகம்.

Mesha Rasi Palan Tomorrow


மேஷ ராசிக்காரர்களிடம் நட்பு கொண்டால் பலவிதமான புதிய அனுபவங்களை நம் வாழ்வில் சந்திக்கலாம்.இந்த ராசியினர்க்கு உடலில் பல ஆற்றல்கள் இருக்கிறது.ஆனால் அது அவர்களின் சோம்பேறித் தனத்தால் வீணாகிறது.மேஷ ராசியினர்க்கு பிடிவாத குணம் அதிகம்.தான் விரும்பும் காரியத்தை முடிப்பதில் அதிக கவனமுடன் இருப்பார்கள்.

இவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.குறும்புத்தனத்தையே உருவமாக கொண்டவர்கள்.மேஷ ராசிகாரர்களுக்கு இயற்கையாகவே குழந்தை போல் குணம் கொண்டவர்கள்.

சாதாரண விஷயங்களை கூட வேடிக்கையான விஷயமாக மாற்றுவதில் திறன் கொண்டவர்கள்.மேஷ ராசியினரின் நகைச்சுவை தன்மையால் அவரை சுற்றி இருப்பவர்களை அனைத்து கவலையும் மறந்து மகிழ்ச்சி அடைய செய்வார்கள்

வரலாற்று கூறுப்படி,செவ்வாயை போரின் கடவுள் என்று கூறுவார்கள்.மேஷ ராசியினரை செவ்வாய் ஆளப்படுவதால் அவர்களுக்கு தைரியம் சற்று அதிகமாகவே இருக்கும்.இவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதனை முடிக்கும் வரை தன்னம்பிக்கையுடன் தைரியமாக போராடுவார்கள்.

பிரச்சனை என்று இவர்களை நம்பி வருவோரை சாகும் வரை தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்து காப்பாற்றும் குணம் படைத்தவர்கள்.மேஷ ராசியினர் எப்போதும் தாம் அமைதியானவர்கள் என்னும் உறுதிப்பாட்டை மனதில் கொண்டவர்கள்.

அக்டோபர் 24 ந்தேதிக்கான பலன்கள் என்ன?....

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் - ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். ஒரு காதலன் இன்று உங்களுக்கு ஏதாவது சொல்ல முடியும். அவர்கள் உங்களிடம் கோபப்படுவதற்கு முன்பு, அவர்கள் செய்த தவறை உணர்ந்து அவர்களை நம்புங்கள். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். பயணம் - பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

பரிகாரம் :- பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும், குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும்.

இன்று நீங்கள் தன்னிச்சையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளில் மகிழ்ச்சியடைவீர்கள்.


Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி