திராட்சை விதைகளில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்கலாமா?

Medicinal benefits of grape seeds- திராட்சை விதைகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் (கோப்பு படம்)
Medicinal benefits of grape seeds- திராட்சைப்பழத்துடன் அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம் விதைகளிலுள்ள சத்துக்கள்தான்.
வைட்டமின் E, C, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் போன்ற சத்துக்கள் இந்த திராட்சையில் உள்ளது. திராட்சை பழத்தை பொறுத்தவரை, பிரான்ஸ் நாட்டினர் இதை ஒயினாக பயன்படுத்துகிறார்கள்.
அதனால்தான், அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக இருக்கிறதாம். அந்த அளவுக்கு இதயத்துக்கு நன்மை தரக்கூடியது இந்த பழம். ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கிறது.
கருப்பை கோளாறு: பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறந்த பழம் இந்த திராட்சைதான். கருப்பை கோளாறுகள் இருந்தாலும்சரி, ஹீமோகுளோபின் பிரச்சனை இருந்தாலும்சரி, கருப்பு திராட்சை ஒன்றே போதும், ரத்த நாளங்கள் விரிவடைவதுடன், ரத்தசோகையும் தடுக்கப்படும்..
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறைந்து விடும். பெண்களின் மார்பகப்புற்றுநோய் செல்களை தடுக்கப்படுகிறது. மூப்பு காலங்களில், ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமலும் தடுக்கிறது.
ஆனால், திராட்சையை பயன்படுத்தும்போது, பலரும் விதைகளை பயன்படுத்துவதில்லை.. இந்த பழத்திலிருக்கும், வைட்டமின் E சத்தைவிட, திராட்சை விதையில் 50 விழுக்காடு அதிக சக்தி இருக்கிறதாம்.. வைட்டமின்-C சத்தைவிட 20 மடங்கு சக்தி கொண்டதாம்.. அதனால்தான், காயங்களையும், ரணங்களையும், குடல் புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றும் தன்மை, திராட்சை விதைகளுக்கு உண்டு.
அஜீரணம்: அஜீரணம் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு திராட்சையை விதையுடன் அரைத்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மந்த நிலை நீங்கும்.. நன்றாக பசி எடுக்கும். நினைவாற்றலை வளர்ப்பதால், இந்த திராட்சையை குழந்தைகளுக்கு நிறைய தர வேண்டும். உடல் பலவீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வலி வீக்கம் உள்ளவர்கள், இந்த திராட்சை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
திராட்சை விதைகளுடன் சேர்த்து அரைத்து ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.. முக்கியமாக, கண்ணில் புரை வளருவது தடுக்கப்படுகிறது..
விதைகள்: அதைவிட முக்கியமாக, இந்த விதையில் உள்ள முக்கிய உட்கூறுகள், புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.. மூலநோய் உள்ளவர்களுக்கு அதிக ரத்தப்போக்கை இருந்தால், அதனை இந்த திராட்சை விதைகள் கட்டுப்படுத்துகின்றன.. அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மையையும், இந்த விதைகள் தீர்க்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu