வாழ்க்கையை சந்தோஷமா வாழக் கத்துக்கோங்க.... மகிழ்ச்சியாக...
meaningful life quotes in tamil வாழ்க்கையை நன்கு வாழ்ந்து பார்த்தவர்களுக்கே வாழ்வின் அருமை பெருமை புரியும்... ரசிச்சு வாழக் கத்துக்கோங்க... வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ....
HIGHLIGHTS
meaningful life quotes in tamil
வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் உங்க மனசு சோர்வடையவே கூடாது. மனசு சோர்வடைந்தால் அவ்வளவுதான் எல்லாமே போயே போச்சு. எப்படி குளத்து நீரில் அசுத்தங்கள் அதிகம் தேங்கினால் ஆபத்து. ஆற்று நீர் போல் நீங்க ஓடிக்கிட்டே இருக்கணும். எங்காவது தேங்கினீர்கள் என்றால் உங்கள் ஆரோக்யத்துக்குத்தான் பாதிப்பு வரும். எனவே வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
வாழ்ந்தவர்கள் கோடி மறைந்தவர்கள் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் என்ற சினிமா பாடலை நினைத்து பாருங்கள்..வருவதும் போவதும் நம் கையில் இல்லை.எல்லாம் அவன் செயல் என்று அவன் மேல் பாரத்தினைப் போட்டுவிட்டுதான் வண்டியை ஓட்ட வேண்டும்.முன்பெல்லாம் வாழ்வில் நாம் நாமாக வேலை செய்தோம். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப புரட்சியால் தினந்தோறும் மெஷின்களின் மூலம் (கம்ப்யூட்டர்) வேலை பார்க்கிறோம். இதனால் நமக்கு நாம் சந்தோஷமாக வேலைக்கு சென்றால் கூட அது பண்ணும் மக்கரில் நமக்கு மன உளைச்சல்தான் அதிகரிக்கிறது. என்ன செய்ய? . அதுவும் வாடிக்கையாளர்களுக்காக வேலை செய்வது என்றால் வருவோர் போவோரிடமும் நாம் தான் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் நாம் வாயை மூடிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
கம்ப்யூட்டர் வந்ததும் வந்தது யாரும் ஒழுங்கா வேலை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நாம் ஆளாவோம். என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. எனவே நாம் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ பொறுமையை இக்காலத்தில் அதிகம் சம்பாதித்து வைத்துக்கொண்டால்தான் இதுபோன்ற நேரங்களில் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.தினந்தோறும் காலை முதல் இரவு வரை டென்ஷன்..டென்ஷன்... கணவன் மனைவியிடம் பேச முடிவதில்லை. மனைவி கணவனுடன் பேசமுடிவதில்லை. குடும்பத்தில் தினம் என்ன நடக்கிறது என்பதே ஒரு சிலருக்கு தெரிவதில்லை. காரணம் காலை போனால் இரவு மீண்டும் காலை போனால் இரவு இது ஒரு தொடர்கதையாகிவிட்டதால் வீட்டில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
இதுபோல் டென்ஷனான நேரத்தில் நாம் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க...
*தினந்தோறும் காலை, மாலை என இருவேளையிலும் தியானம் பண்ணுங்க...உங்க மனசு லேசாயிடும்..
*மற்றவர்களிடம் பழகும்போது பார்த்து பழகுங்க...இதுசுயநல வாத உலகமாகிவிட்டது.
*முடிந்தவரை கடன் வாங்காதீர்கள்.. அவசியம் தேவையென்றால் குறைந்த வட்டிக்கு வாங்கலாம்..
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
*யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க...தெரிந்தவர்களைத் தவிர்த்து...
*வேளா, வேளைக்கு சாப்பிட வேண்டும் என்பதால் சாப்பிடாதீங்க.. பசித்தால் புசியுங்க...
*40 வயதாகிவிட்டதா? எண்ணெயில் செய்யும் உணவுகளை தானாக குறைச்சிடுங்க..
*தினந்தோறும் 45 நிமிஷம் நடைப்பயிற்சி கட்டாயமாக்கிக்கோங்க..
*உடற்பயிற்சி, உடலுழைப்பை தேடிச் செய்யுங்க...
*ஸ்மார்ட் போன் என்பது நம் தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துங்க... அதிக நேரம் பார்த்தால் கண்ணிற்கு ஆபத்து
*வருமானத்தில் 10 சதவீதத்தினை எதிர்காலத்துக்காக சேமிக்க பழகுங்க..
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
*தேவையில்லாத எந்த விஷயத்திலும் தானாக போய் மூக்கை நுழைக்காதீங்க..
*தெருவில் இருவர் சண்டைபோட்டால் கூட நாம் நல்லது என போய் விலக்கி விட்டால் அந்த அடி நமக்குதான் விழுகிறது...உஷாராயிருங்க..
*உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள தினந்தோறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் அன்பாய் நாலு வார்த்தை பேசுங்க...கட்டாயமாக...
*இந்த வாழ்க்கையினை இறைவன்தான் நமக்கு கொடுத்துள்ளான். என்பதால் தினந்தோறும் ஒரு நிமிஷமாவது இறைவனை மனதில் நினையுங்க...
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
*வாரம் ஒருமுறை ஏதாவது ஒருநாளில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று கொஞ்ச நேரம் அமர்ந்துட்டு வாங்க..
*எந்த விஷயமானாலும் தள்ளிப்போடாதீங்க...உடனுக்குடன் முடிவு எடுங்க...
*பருவத்தே பயிர் செய் என்பது போல் அப்போதைக்கப்போது வேலையை முடிங்க..
*கடன் வாங்காதீங்க...கடன் கொடுக்காதீங்க.... நிம்மதியாய்இருக்கலாம்..
இதுபோல் வாழ்க்கையின் யதார்த்தத்தினை புரிந்துகொண்டு வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தின் நிதி வரவு செலவுகளை அட்லீஸ்ட் கணவன் பார்த்தால் மனைவியிடமும், மனைவி பார்த்தால் கணவனிடமும் சொல்லி வையுங்க...தனி நபர் மட்டும் ஆபரேட் செய்வது என்றும் ஆபத்து. நிதி சம்பந்தமான விஷயங்கள் குடும்பத்தில் இரண்டு பேருக்கு தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
வாழ்க்கையில் முடிந்தவரை நாம் வருடத்தில் ஏதாவது ஒரு நாளில் தான தர்மங்களைச் செய்யலாம். அந்த புண்ணியங்கள் அனைத்தும் நம் பிள்ளைகளைப் போய் சேரும் என்பதால் பிறந்த நாள், கல்யாண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் என வரும்போது ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லம் சென்று ஒரு வேளை உணவளியுங்க.உங்களை ஆசிர்வதிப்பாங்க.. உலகத்திலே சிறந்த தானம் என்ன தெரியுமா? அன்னதானம்தாங்க..
meaningful life quotes in tamil
meaningful life quotes in tamil
அப்படி ஏன் சொல்றாங்க தெரியுமா? அதுக்கு ஒரு கதை உண்டு. அதாவது மனிதனின் மனத்தினை திருப்திப்படுத்தும் ஒரே செயல் என்ன தெரியுமா? உணவளிப்பது மட்டுமே. காரணம் மற்ற எது கொடுத்தாலும் அவர்களுடைய மனசானது திருப்தியடையாது. மற்ற பொருட்கள் மேல் ஆசைப்படும். ஆகையால் ஒரு ஜாண் வயிற்றில் நாம் உணவளித்தது நிரம்பிவிட்டால் அவர் எவ்வளவு ஆசைப்பட்டாலும் அதனை ஏற்காது. காரணம் புல்லாகிவிட்டதே. இதுவே அந்த தாத்பர்யம் .எனவே முடிந்தவரை உணவளியுங்கள் இல்லாதோர்க்கு.