Meal Maker Paneer Gravy - மீல் மேக்கரும் பன்னீரும் இருந்தால், அடுத்த 10 நிமிஷத்துல சப்பாத்திக்கு கிரேவி ரெடி!

Meal Maker Paneer Gravy- மீல்மேக்கர், பன்னீர் கிரேவி செய்வது எப்படி எனத் தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)
Meal Maker Paneer Gravy- இரவு வேளையில் வீடுகளில், பெண்கள் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்கிறார்கள். அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வது பலருக்கும் சலித்து போகும். அதற்கு மாற்றாக சற்று ஸ்பெஷலாக, வீட்டில் உள்ளோருக்கு ஏதாவது செய்து கொடுக்க நினைப்பவர்கள் இதை செய்து தரலாம். உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், பன்னீரும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவியை செய்யுங்கள். அசத்துங்கள்.
இந்த மீல் மேக்கர் பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். ஒரு பெரிய வெங்காயம் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல ஒரு சூப்பரான சட்னியை ரெடி பண்ணலாம்.
நீங்கள் மீல் மேக்கர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள, கீழே மீல் மேக்கர் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 100 கிராம்
* பன்னீர் - 50 கிராம்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தேங்காய் - 4 பெரிய துண்டுகள்
* முந்திரி - 2-3
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், மீல் மேக்கரைப் போட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, முந்திரி, தேங்காய் மற்றும் சிறிது நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன்பின் அதில் மீல் மேக்கர் மற்றும் பன்னீர் தண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மீல் மேக்கர் பன்னீர் கிரேவி தயார். பிறகு என்ன, சப்பாத்தி செய்து சைடு டிஷ் ஆக வைத்து ரசித்து, ருசித்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் சுவையில் அசந்து போய் சமைத்தவர்களை பாராட்டி தள்ளி விடுவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu