மானுடப் பிறவிகளை மகிழ்விக்கும் மாடுகளுக்கு பொங்கல் திருவிழா

Mattu Pongal Quotes in Tamil
X

Mattu Pongal Quotes in Tamil

Mattu Pongal Quotes in Tamil-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்இரண்டாவது நாள் மாட்டுப்பொங்கல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Mattu Pongal Quotes in Tamil

தமிழகத்தினைப்பொறுத்தவரை பொங்கல் பண்டிகையானது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்த நிலையில் எந்த பண்டிகைகளும் கொண்டாடக்கூடாது என தடை இருந்தது.இந்த ஆண்டினைப்பொறுத்தவரை கொரோனா பரவலானது கட்டுக்குள் இருப்பதால் அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு இதனை கொண்டாட அனுமதி அளித்துள்ளதால் இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையானது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே துவங்கிவிட்டது என்று கூட சொல்லலாம்.

பொங்கல் பண்டிகை என்றாலே வெளியூர்களில் வேலை நிமித்தமாக வசிப்போர், படிக்கும் மாணவர்கள், தொலைதுார உறவுகள் அனைத்தும் தாம் நிரந்தரமாக வசிக்கும் கிராம, மற்றும் நகரங்களுக்கு படையெடுப்பது வழக்கம். காரணம் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைப்பதால் அனைவரும் கிளம்பி வந்துவிடுவர். உறவுகள்,நட்புகளை வருடம் ஒரு முறை காணும் நோக்கிலும்பலர் வருவர்.

முதல் நாள் போகி, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் உழவனின் நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு திருவிழாவான மாட்டுப்பொங்கல்.அன்றைய தினம் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை நன்கு குளிப்பாட்டி அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதுதான் மாட்டுப்பொங்கல்.

பசுக்களையும், காளைகளையும் நன்கு குளிப்பாட்டி கொம்புகளை சீவி புது வர்ணம் பூசுவர். பின்னர் மஞ்சள், விபூதி. குங்குமம் இடுவர். புத்தம்புது மணிகள் அணிவிப்பது வழக்கம். மேலும் தாம்புக்கயிறு,மூக்கணாங்கயிறு உள்ளிட்டவைகளும் புதியதாக அன்று மாடுகளுக்கு மாற்றப்படும். பின்னர் உழவும் வயல்களிலோ அல்லது தொழுவத்திலோ தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு இறைவனுக்கு படைப்பது வழக்கம்.

வருடந்தோறும் உழவுப்பணிகளுக்காக உபஉழவுக்கருவிகள்உபயோகப்படுத்தப்படும் உழவுக்கருவிகளை வரிசையாக சுத்தம் செய்து வைப்பர். பின்னர் இதனை உரிய முறையில் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு பூஜை நடக்கும் இடத்தில் வரிசையாக அடுக்கி வைப்பர். மேலும் தோட்டத்தில் விளைந்த பச்சை பயறுகளை வைத்தும். ஒரு வாழை இலையில் தேங்காய், பழம், நாட்டுச்சர்க்கரை உட்பட அனைத்தும் வரிசையாக அடுக்கி வைப்பர். மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் அன்றுபொங்கல் புது பானையில் வைத்து அதனை நைவேத்தியம் செய்தபின் மாடுகளுக்கும் அன்று பொங்கல் , பழம் உள்ளிட்டவைகளை உணவாக கொடுப்பது வழக்கம்.

மாட்டுப்பொங்கலன்று பல்வேறு விளையாட்டுபோட்டிகள் நடந்தாலும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்றது.அதுவும் மதுரை அலங்கா நல்லுார் ஜல்லிக்கட்டினைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது தமிழகத்திற்கே கிடைத்தபெருமையாகும்.

மாட்டுப்பொங்கலுக்கான ஒரு சில வாசகஙகள் தமிழில் இதோ....

விவசாயிகளின் தோழனாய், வீரத்தின் அடையாளமாக திகழும் மாடுகளுக்கு இன்று பொங்கல்திருவிழா...

மனிதர்களுக்கு தோள்கொடுப்பதோடு பால் கொடுத்து உதவும் கோமாதாக்களுக்கு இன்று பொங்கல் திருவிழா

தமிழர்களின் பாரம்பரியமானது இவ்வுலகம் உள்ளவரை பின்பற்றப்படும்.... அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்....

உழவர்களின் உற்ற நண்பனைக் கவுரவிக்கும்அற்புத திருவிழா... மாட்டுப்பொங்கல்.... வாழ்த்துகள்

காளையோடு காளை போட்டி எக்காளை வென்றாலும் வெற்றி எங்களுக்குதான்....மாடுபிடிவீரர்களின் கூற்று அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்...

உற்றார்,உறவுகள் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்... வாழ்த்துங்கள் .... வணங்குவோம்...

வீரத்தமிழர்களுக்கு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்...

ஏர்முனைக்கு இணை இங்கு எதுவும் இல்லைஉழவுகளின் உறவுகளுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்..

இல்லந்தோறும் இன்பம் செழிக்க...இன்று ஒரு நாள்மட்டுமே ஓய்வு...மாடுகளுக்கு.... வாழ்த்துகள்...

வீரம் நிறைந்த மண்ணில் சாகசம் காட்டும் மாடுபிடிவீரர்களான செறிவுத்தமிழர்களுக்கு வாழ்த்துகள்...

இன்று ஒரு நாள் மட்டுந்தான் எங்களுக்குரெஸ்ட்அனைவருக்கும் வாழ்த்துகளும் அன்புகளும்....

அப்பா...இன்னி்க்காவது நம்பளை விட்டாங்கல்ல..அதுபோதும்... நல்லா துாங்கலாம்... வாழ்த்துகள்..

நாங்கஇன்னிக்கு ஒரு நாள் மட்டுந்தான் குளித்துகுஷியா இருப்போம்... ரெஸ்ட் எடுப்போமே....

எங்கள் கொம்புகளில் இன்று மட்டுமே பளபளக்கும்புது கயிறுடன் காட்சியளிக்கும் நன்னாள் எங்களுக்கு...

காலம் முழுக்க உழைக்கும் உழவர்கள் எங்களைகொண்டாடும் நாள் இந்த இனிய திருவிழா நாள்..

பல வகைகளில் நாங்கள் உதவுகிறோம் உழவர்களுக்குஅவர்கள் எங்களுக்கு மரியாதை செலுத்தும் நன்னாள் இது..

எங்களுடைய பொருள்...எதுவும் உங்களுக்கு உபயோகம் இல்லாமல் இருக்காது.... மாட்டுப்பொங்கலில் மாடுகள்..

ஏ...யாருப்பா நா...ரெடி... நீங்க எல்லாம் ரெடியா...இன்னும்கொஞ்ச நேரத்தில வெளியே வர்றேன்...

திமில்களுடன் மல்லுக்கட்டும் வீரர்களையும் உதறித் தள்ளும் எங்கள் உறவுகளுக்கு இன்று ஜல்லிக்கட்டு...

ஒரு நாள் ஓய்விலும் நாங்கள் பால் சப்ளை தர்றோம்.. பாருங்க... மானுட பிறவிகளே மறந்துடாதீங்க... எங்களை..

உழவர்களின் தோழர்களை கொண்டாடும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்...

காலம் முழுக்க .. பால் தரும் கோமாதாவுக்கு உள்ளங்கனிந்த மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்..

மானுட பிறவிக்கு இறைவனின் அருட்கொடைதான் மாடுகள்.... அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்...

பாரம்பரிய நாட்டு மாடுகளைப் போற்றுவோம்...வணங்குவோம்... மாட்டுப்பொங்கல் வாழ்த்துக


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story