திருமண வாழ்த்துகளும் அன்பும் ...பரிமாற்றங்களும்

திருமண வாழ்த்துகளும்   அன்பும் ...பரிமாற்றங்களும்
X
Invitation Quotes For Wedding in Tamil-திருமண வாழ்த்துகளும் அன்பும் ...பரிமாற்றங்களும்


Invitation Quotes For Wedding in Tamil-கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு....திருமணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,,, ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தினை பண்ணலாம் என்பன போன்ற சொற்றொடர்கள் அனைத்தும் திருமண சம்பந்தமாக சமூகத்தில் அன்றும்இன்றும் உலா வரக்கூடியவை.

திருமண பந்தம் என்பது சாதாரணமானது அல்ல. மாப்பிள்ளை, பெண் வீட்டார் முதலில் ஜாதகத்தில் துவக்கி பொருந்தியவுடன் பத்திரிகை அடிப்பது, மற்ற செலவினங்களை யார் கவனிப்பது என்பது உள்ளிட்டது வரை முதல் சந்திப்பில் பேசி முடிக்கின்றனர். பத்திரிகைகளில் எந்தெந்த உறவினர்கள் பெயரை இருவீட்டாரும் போடுவது என்பது குறித்து டிஸ்கஷன் நடக்கும். அப்போது திருமண பத்திரிகைகளில் வாழ்த்து கவிதை ஒன்று பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்கும் என யாராவது ஒருவர் முன்மொழியும் பட்சத்தில் அவர்கள் உறவினரோ ,நண்பரோ தயார் செய்த வாழ்த்துக்கவிதை அந்த பத்திரிகையில் பிரசுரமாகும். இது அனைத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கும்போது இக்கவிதை வெகுபிரபலமாகிவிடும்.

அதுவும் காதல் திருமணம் பெற்றோர்களுடன் சம்மதத்தின் பேரில் நடக்கிறது என்றால் சொல்லவே வேண்டாம் போங்க... ஜமாய்ச்சிடுவாங்க... நண்பர்கள். அவர்களுடைய திருமணத்தின் போது பத்திரிகையில் ஒரு கவிதை இருக்கும்.அதுமட்டும் அல்லாமல் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குறைந்த பட்சம் ஆயிரம் பிரதிகளை பிரிண்ட் செய்து அதனுடன் ஒரு சாக்லேட் இணைத்து திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு மணம் முடிந்த பின்னர் அளிப்பார்கள். இதுதான் தற்போதைய ட்ரெண்டாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்புறம் நண்பர்கள் அனைவரும் தம்பதியினருக்கு அளிக்கும் கிப்ட் பெரிதாக இருக்கும்.ஆனால் பிரிக்க பிரிக்க பேப்பர்களாகவே வரும் கடைசியில் ஆளுக்கொரு 5 ஸ்டார் சாக்லேட் மட்டுமே உள்ளிருக்கும்.. அப்படின்னா... வாழ்க்கை சாக்லேட் போல் இனிமையா இருக்குமாங்க....

திருமண வாழ்த்துக்களின் வாசகங்கள் இதோ....

வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலில் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுசோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன். இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.

கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்

நம் திருமண நாளில் என் மனதும் உன் மனதும் இடமாற்றம் செய்யப்பட்டதை உலகிற்கே காட்டவே இந்த மாலை பரிமாற்றம்...!

மெட்டி அணிவித்து உன்னை எனக்குள் கட்டிப்போட்டு கொண்டேன்

நம் பயணிக்க இருக்கும் வாழ்வில் எதிர் கொள்ள இருக்கும் துன்பம் என்னை கடந்தே உன்னை நெருங்க வேண்டும் என்பதற்கே உன் கரம் பற்றி அக்னி வலம் வருகிறேன் நான்

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்.....

பல தேவதைகள் கூடி வாழ்த்து சொல்ல பதுமை அவள் மணமேடை ஏற பூ மழையாய் மகிழ்ச்சி பொழிய காதல் கணவனுடன் கை கோர்க்க உன் வாழ்வில் என்றும் இன்பம் திளைக்க என் உயிர் தோழிக்கு மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்

அன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்...! மனமாற வாழ்த்துகிறோம்...

நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தீர்கள் என்பது பற்றி அல்ல.' நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…

நான் உன்னைபார்த்த பின்புதான் என் வாழ்க்கையை வாழ தொடங்கினேன்.

எது நாள் வரை உனக்காக காத்திருந்திருக்கிறேன்…

மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை,அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது…

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒருநல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்… அதுவே

நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…

திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கை கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்

நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்ககையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்

கருத்தொருமித்த தம்பதியராய்... சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்... ஊர் போற்ற உறவும் போற்ற... இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே... உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற வாழ்த்துகிறோம்

என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து வாழ்க்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்

ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள். செல்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும்

அவன் பயணமும் ஒன்றாகும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.... நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... என் அன்பான வாழ்த்துக்கள்...!

மஞ்சள் குங்குமம், மயக்கும் மலர்மணம்... கொஞ்சும் குழந்தையோடு, குலைவாழையென குலம் செழிக்க... நெஞ்சம் நிறைய, கொஞ்சம் குறையா குணம் கொண்டு... இப்பிரபஞ்சம் காணா எம்மன்பு சகோதரனே! வாசம் குறையா, வனப்பு குறையா அன்பு மலர்ந்திட வீசும் தென்றலாய், விடியல் வெளிச்சமாய்.... என்றும் உம் விழியில் சுமந்திடும் உம் ஒவ்வோர் உயர்விலும் உற்றாறோடு உறுதுணையாய் எப்போதும் நாங்கள்! மனதோடு உறவாடி நிறைகுடமாய் நீடூழி வாழ...

நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டு வந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில் அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று

மிகப்பெரிய பூஞ்சோலை ஒன்று சில மலர்களை கையில் வைத்திருக்கிறது ..... நீ என்னுடன் பூபந்து விளையாடுகிறாய் !!!

காலமெல்லாம் - ஆம் உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம், அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்....

இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்கள்

இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

வெட்கங்கள் ஊமை மொழியாகும், ஆசைகள் உணர்வின் மொழியாகும், பாஷைகள் இதழின் மொழியாகும், காதல் திருமணத்தின் மொழியாகும்

பால் நிலவும் பகல் சூரியனும் நல் சொந்தங்களும் இனிய நட்புகளும் இணைந்து மகிழ்ந்து வாழ்த்தும்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

மௌனங்களாலும் வார்த்தைகள் மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில் அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்த்திட இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..

வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த... இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி வந்த என் உயிரே இந்நாளில் நான் என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்...... உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக....!

அன்பை சுமக்கும் நீயும் அழகை சுமக்கும் அவளும் இணையும் திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள் மீது போடுகின்றோம்.... வாழ்க வளமுடன்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
தகவல் தொழில்நுட்பம் அதாவது ஐடி வேலை எப்படி வாங்கலாம்னு பாக்கலாம்