இயற்கையான நீம் சோப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
Making Neem Soap at Home- நீம் சோப்பு தயாரித்தல் ( கோப்பு படம்)
Making Neem Soap at Home- உலகிலேயே சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட மரமாக வேப்பமரம் அறியப்படுகிறது. பேஸ்ட், பல் பொடி வருவதற்கு முன்பாக வேப்பங்குச்சியில் பல் துலக்குவது தமிழர்களின் வழக்கமாக இருந்துள்ளது. அம்மை போட்டிருந்தால் பாதிக்கப்பட்ட நபரை சுற்றி வேப்ப இலைகளை வைப்போம். இப்படி பல்வேறு வகைகளில் நன்மை தரும் வேப்ப மரத்தில் அதன் இலைகளைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சோப் தயாரிப்பது என பார்க்கலாம்.
இந்த சோப்பை பயன்படுத்தி தினமும் குளித்து வந்தால் சரும பாதிப்பு ஏற்படாது. முகப்பரு, கரும்புள்ளி, தோல் அரிப்பு, சரும ஒவ்வாமை, தேமல் ஆகிய பிரச்னைகளில் இருந்து விடுபட இயற்கை முறையில் தயாரிப்படும் வேப்பிலை சோப் பயன்படுத்தவும். வேப்பிலை மட்டுமின்றி கூடுதலாக சில பொருட்களையும் இதில் சேர்ப்போம். இந்த சோப் பயன்படுத்தி குளிக்கும் போது இயற்கையாகவே தோலில் இருந்து இறந்த செல்கள் அகற்றப்படும். மேலும் தோல் பளபளக்கும். இயற்கையான வேப்பிலை (Neem) சோப் தயாரிக்கலாம்.
வேப்பிலை சோப் தயாரிக்க தேவையானவை
வேப்ப மர இலை
கற்றாழை சோப் பேஸ்
தண்ணீர்
குளிக்கும் மஞ்சள்
குப்பைமேனி இலை
வேப்பிலை சோப் செய்முறை
வேப்பிலை சோப் தயாரிப்பதற்கு பிரெஷ் ஆன வேப்ப மரத்து இலைகளை எடுத்துக் கொள்ளவும். இரண்டு கைப்பிடி அளவிற்கு வேப்பிலையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அடுத்ததாக இதில் குப்பைமேனி இலைகள் போடவும். குப்பைமேனி இலை கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடையில் இருந்து குப்பைமேனி படவுர் வாங்கி அதிலிருந்து ஒரு ஸ்பூன் பயன்படுத்தவும்.
குப்பைமேனி இலை புண்களை குணமாக்கும் பண்பு கொண்டது. இப்போது அரை டீஸ்பூன் குளிக்கும் மஞ்சள் சேர்க்கவும்.
50 மில்லி லிட்டர் அளவிற்கு வேப்பிலை சாறு கிடைக்கும்.
கற்றாழை சோப் ஃபேஸ் ஆன்லைனில் இருந்து வாங்கிக் கொள்ளவும். ஒரு சில கடைகளிலும் கிடைக்கும்.
200 கிராம் கற்றாழை சோப் ஃபேஸ்-ஐ சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் போட்டு உருக்கவும். அதாவது ஒரு பாத்திரத்திற்குள் தண்ணீர் நிரப்பி நன்கு கொதிக்க விட்டு அதற்குள் இந்த கற்றாழை சோப் ஃபேஸ் பாத்திரத்தை வைத்தால் உருகிவிடும்.
மீதமான சூட்டில் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு சூடாக இருக்கும் போதே மருந்து கடையில் கிடைக்கும் வைட்டமின் E மாத்திரையை உள்ளே போடவும்.
வட்டமான, சதுரமான எவர் சில்வர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி தேவையான சைஸிற்கு ஊற்றவும்.
12 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள். இயற்கையான வேப்பிலை சோப் ரெடி. மீதம் உள்ள சோப்பை டிஸ்யூ பேப்பரில் சுற்றி வைக்கவும்.
வேப்பிலை சோப் பயன்கள்
வேப்பிலை ஒரு நல்ல கிருமி நாசினி ஆகும். வேப்பிலை இயற்கையாகவே நறுமணம் கொடுக்கும். இது உடலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கும். சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வையும் கொடுக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu