வாரா வாரம் கானாங்கெளுத்தி சாப்பிட்டா, காலம் முழுக்க கவலை இல்லை Mackerel fish in Tamil
Indian Mackerel Fish in Tamil
Indian Mackerel Fish in Tamil
பொதுவாக மீன் இறைச்சி என்பது புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக ஆகும். அவற்றில் உயர்தர புரதம் நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட ஒரு மீன் என்றால் கெளுத்தி மீன் என்று சொல்லலாம். இந்த மீன் இறைச்சியில் குறைந்த கலோரி உள்ளடக்கம் இருப்பதன் காரணமாக, எடை இழக்க விரும்புவோர் அல்லது குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்புவோருக்கு இது சரியான தேர்வாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.
இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இது பல நன்மைகளை வாரி வழங்கும்.
கானாங்கெளுத்தி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
இதய நோய்களை தவிர்க்கலாம்
கானாங்கெளுத்தி மீனில் ஒமோக-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளதால், இது இதய நோய்களைத் தடுக்கும். இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறையும்.
சர்க்கரை நோய் அபாயம் குறையும்
கானாங்கெளுத்தியில் அதிக அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
இரத்த அழுத்தம் சீராக இருக்கும்
இந்த மீனில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், உயர் இரத்த அழுத்தம் சீராக கானாங்கெளுத்தி மீனை அடிக்கடி சாப்பிடுங்கள்.
மூட்டு பிரச்சனைகள் தீரும்
கானாங்கெளுத்தியில் மூட்டு பிரச்சனைகளைத் தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அடிக்கடி உட்கொண்டு வர, மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
அதிக புரதம்
இந்த மீனில் அதிக புரதம் உள்ளத்தால், உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் அளிக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், எடை குறைப்பதற்கு சிறந்த உணவு. மதிய உணவிற்கு இதை எடுத்துக்கொண்டாலும், உங்களுக்கு சோம்பல் அல்லது தூக்க கலக்கம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.
பாதுகாப்பு தகவல்
கானாங்கெளுத்தியின் சதை விரைவாக கெட்டுவிடக் கூடியது என்பதால் இது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே முறையாகப் பதப்படுத்திய மீன்களைத் தவிர மற்ற மீன்களைப் பிடித்த நாளன்றே உண்டுவிட வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu