Love quotes in tamil- காதலர்களின் அன்பின் ஆழத்தை சொல்லும் காதல் கவிதைகள்

Love quotes in tamil- காதலர்களின் அன்பின் ஆழத்தை சொல்லும் காதல் கவிதைகள்
X

Love quotes in tamil- அன்பு செய்வதை தவிர, வாழ்வின் உன்னதம் வேறு எதுவுமில்லை என, அன்பை பரிமாறும் காதல் கவிதைகள் (மாதிரி படம்)

Love quotes in tamil- நேசிப்பதும், நேசிக்கப்படுவதுமே வாழ்வின் அடிப்படையாக இருந்து வருகிறது. அன்பின் அச்சாணியில் தான் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. நேசத்தின் உச்சமான காதலின் உன்னதத்தை சொல்லும் தமிழ் கவிதைகள் சில படிப்போம், ரசிப்போம்.

Love quotes in tamil- காதல் என்பது, இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அதிசய உணர்வு. அந்த உணர்வுக்கு மயங்காத மானுடரே இல்லை. அதை விரும்பாதவர்களும் இல்லை. பாசம், அன்பு போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்கும் இந்த காதல் யார் மீது வேண்டுமானாலும் மலரும். அந்த காதலை நீங்கள் நேசிப்பவரிடம் வெளிப்படுத்த பல வழிகள் இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் கவிதைகள். காதல் என்ற கவிதையை அழகாகவும், ஆழமாகவும் நீங்கள் நேசிப்பவரிடம் கூற இந்த கவிதைகளால் மட்டுமே முடியும். இதோ உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்த சில அழகான காதல் கவிதைகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு அனுப்பி உங்களுடைய காதலை தெரியப்படுத்துங்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி, காதலர் தினத்தன்று கவிஞர் வைரமுத்து, டிவிட்டரில் பதிவிட்ட கவிதை இது...

எந்த நிலையிலும் வரலாம்

எந்த வயதிலும் வரலாம்

அது ஒன்றல்ல,

ஒன்றிரண்டு மூன்று

நான்கென்று எண்ணிக்கை ஏறலாம்

ஆனால், என்னதான் அது என்ற

இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற

உடலின் தவிப்புக்கும்

இடைவெளியில் நேருகின்ற

துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்

அந்த

முதல் அனுபவம் வாழ்க!

- என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

வைரமுத்துவின் இந்த கவிதை பதிவு, இணையத்தில் வைரலானது.

பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இயற்கையின் உள்ளீடாக இன்றும் ஒவ்வொரு உயிரினத்திடமும் நிலைபெற்றுள்ளது காதல். அக்காதலை தனது வாழ்நாள் முழுவதும் கொண்டாடி தீர்த்தவர் பாரசீக கவிஞர் ரூமி. அவரைப் பொறுத்தவரை காதல்... இறைக் காதல், மானுடக் காதல், பிரபஞ்சக் காதல் என பல வடிவங்களை கொண்டவை. ரூமியின் கவிதையை வாசித்தல் என்பது காதலை வாசித்தலே. கவிஞர் ரூமி கூறுகிறார் காதல் ஒன்றே நிஜம்... அந்த வகையில் ரூமியின் காலத்தால் அழியாத ரூமின் சில காதல் கவிதைகளை காணலாம்:

முதல் காதல் கதையை

நான் கேட்டவுடன்

உன்னைத் தேடத்

துவங்கினேன்,

எவ்வளவு கண்மூடித்தனமானது அது

என்பது தெரியாமலே...

காதலர்கள்

இறுதியில் எங்கேனும்

சந்தித்துக் கொள்வதில்லை.

அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக

இருந்து வருகிறார்கள்

காலங்காலமாக...

***

உனை நீ

அறியும் வழக்கம்

உள்ளதா உனக்கு?

விவாதமும் வேண்டாம்

சாதுர்யமான பதிலும்

வேண்டாம் இங்கு...

மரணிப்போம் நாம்,

மரணித்தபடி

பதிலளிப்போம்

***

நீயொரு

உண்மையான மனிதனெனில்

எல்லாவற்றையும் பணயம் வை

காதலுக்காக.

இயலவில்லை எனில்

சென்றுவிடு இங்கிருந்து

அரைகுறை மனதிற்கு

அகண்டவெளி அகப்படாது.

பேரருளை நோக்கி

பயணிக்கத் தீர்மானித்த நீ

சிறுமைபடர்ந்த விடுதிகளில்

நெடுங்காலம்

இளைப்பாறிவிடுவது ஏன்?

***

எப்போதும்

மறைவிலிருந்து தலை நீட்டும்

காதலின் ரகசியம்

இதோ நானிருக்கிறேன் என!

***

காதலின் வழி

நுட்பமான விவாதமல்ல

பிரளயமே

அங்கு செல்வதற்காக

வாயில்

***

இரவில்,

சாளரத்தை திறந்து

நிலவை அழைப்பேன்

அதன் முகத்தை

என் முகத்தோடு

நெருக்கமாகப் பொருத்த

உயிர்மூச்சை எனக்கு வழங்க

மொழியெனும் வாசல் அடைபட்டு

காதலின் சாளரம் திறக்கட்டும்..

***

நிலவிற்கு வழி

வாசல் அல்ல

சாளரமே...

***

இப்போதும், எப்போதும் காதல் இன்று பூத்த மலர் போலவே, புதியதாக பொலிவாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் காதலர்கள் மறைந்தாலும், அன்பில் இருந்து மாறினாலும், காதல் தன்னை இன்னும் இளமையாகவே, வைத்திருக்கிறது. காதல், தினமும் பிறக்கிறது. காதலர்கள் மறைந்தாலும், காதல் மறைவதில்லை. மேலும், சில காதல் கவிதைகளை பார்ப்போம்.

துணை என்பது

என்னோடு நிற்பவன் அல்ல

எனக்காகவே நிற்பவன்!

**

மொழிகள் என்பதே

தேவையில்லை நம்முடைய

இதழ்கள் இரண்டும்

பேசிக் கொள்கையில்...

**

அன்பு யார் மீது

வேண்டுமானாலும்

காட்டமுடியும்,

ஆனால் கோபம்

உரிமை உள்ளவர்

இடத்தில் மட்டுமே

காட்டமுடியும்..

**

என் வாழ்வில்

எவ்வளவு துன்பம் வந்தாலும்

தாங்கிக் கொள்வேன்

ஆறுதல் கூற நீ துணையாய்

இருக்கும் போது..

**

அழகானவர்களை

பிடிக்கிறது என்பதை விட

பிடித்தவர்கள் தான்

அழகாய் தெரிகிறார்கள்

என்பதே உண்மை.

**

என்னை அழகாக்க

உன் நினைவு வேண்டும்.

என் வாழ்க்கையை அழகாக்க

நீ வேண்டும்...

**

நிஜமாய் மாறிய கனவு நீ

கனவிலும் இழக்க முடியாத உறவு நீ

நிஜத்திலும் கனவிலும்

நான் தேடும் அன்பு நீ!

**

காயங்களும்

மாயமாகும்

என்னருகில்

நீ இருந்தால்..

**

உன்னைத் தொட்டுத்

தழுவாமல் என் நாட்கள்

தொடரவும் தொடராது..

முடியவும் முடியாது...

**

நீயே கேட்டாலும்

விட்டு கொடுப்பதாக

இல்லை, உன் மீதான

என் காதலை!

--------------------

குறிப்பு; செய்தியில் இடம்பெற்றவை அனைத்தும் கோப்பு படங்கள்.

Tags

Next Story