நெஞ்சினிலே நினைவு முகம்: காதல் வலி வாசகங்கள் Love pain quotes in Tamil

நெஞ்சினிலே நினைவு முகம்: காதல் வலி வாசகங்கள் Love pain quotes in Tamil
X

காதல் வலி

Love Pain Quotes in Tamil-தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லை என்று தெரிவித்துவிட்ட பின்பும், அவர் மீது ஆழமான காதலை கொண்டிருப்பது ஒருவரது வாழ்வில் வலி ஏற்படுத்த கூடியது

Love Pain Quotes in Tamil-காதலிப்பது எவ்வளவு சுகமோ அதை விட பான் மடங்கு வலி தருவது காதல் தோல்வி. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, காதல் தரும் சோகமும் சோகமும் ஒன்று தான். காதல் தோல்வியில் தவிக்கும் ஒருவருக்கு நட்பே ஆறுதல். ஒரு கவிஞர் கூறியது போல, காதல் ஒருவழி பாதை பயணம், அதில் நுழைவது என்பது சுலபம். பிரிந்திட நினைப்பது பாவம், காதல் ஆற்றிட முடியா காயம் என்பது போல,

காதல் பிரிவில் தவிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்க சில வாசகங்கள்

உன் பெயரை காதலித்தேன்..

உன் வார்த்தைகளை காதலித்தேன்..

உன் நம்பிக்கையை காதலித்தேன்..

இன்று நீ என்னுடன் இல்லை

உன் பிரிவை கூட காதலிக்கிறேன்.!


காதல் தோல்வியை கொடுக்கும் போது தான்

எத்தனையோ பேர் அருகில் இருந்தும்

தனிமையில் சூழ்ந்து விடுகிறோம்..

இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பிறப்பு இறப்பு வரை

பிரிவில் தான் முடிகிறது

காதல் மட்டுமே

பிரிந்தும் பிரிய முடியாத

வலியாய் தொடர்கிறது


பிரிவதென்பது எவ்வளவு வலி நிறைந்ததோ

அதை விட வலி நிறைந்தது..

எனை விட்டு பிரியாதே என கெஞ்சுவது.

அன்பின் வெளிப்பாடு

அதிகம் காட்டியதால்

அநாதையாக நிற்கிறேன்..

பாசம் வைத்ததன் விளைவு

சோகத்தை பகிர்ந்து கொள்ள

யாருமின்றி தனிமையில் வாடுகிறேன்.


சுவாசித்த காற்றையும்

நேசித்த காதலையும்

எப்போதும் மறக்க முடியாது.

அப்படி மறந்தால் அது

மரணமாக தான் இருக்கும்

நீ தந்த வலிகளை இனிமையாக்க

உன் நினைவுகள் மட்டும்

போதுமாக இருக்கின்றது

அன்பு எவ்வளவு அழகானது

என்பதை உன்னிடம் தான்

அறிந்தேன். அதே அன்பு

எவ்வளவு வலிகளை தரும்

என்பதையும் உன்னிடம்

தான் உணர்ந்தேன்.

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்

அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த

கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்

கோரிய வரமும் கிடைக்கவில்லை

நீ என்னை காதலித்து

ஏமாற்றி விட்டாய் என்று

ஒரு போதும் சொல்ல மாட்டேன்..

காதலித்து இருந்தால் ஏமாற்றி

இருக்கமாட்டாய்..!



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story