காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்..

Love Kavithai Tamil
Love Kavithai Tamil
மனித உணர்வுகளில் முக்கியமானது காதல். அன்பின் அடிப்படையில் தோன்றும் காதல், இளையோரிடம் மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும். நான்கு கண்களும் இரண்டு மனங்களும், கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் காதல். இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது.
காதல் பற்றி கண்ணதாசன் ஒரு நீண்ட விளக்கமே கொடுத்துள்ளார்
தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாட தான்வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!
காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.
இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.
காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!
அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது,
சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்...
நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.
கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!
கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.
நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.
படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.
இவை தான் காதல் பற்றி கண்ணதாசன் கூறிய விளக்கம்
காதல் வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். இதோ காதலிப்பவர்களின் கவிதைகள் உங்களுக்காக
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்...
விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது...
உன் அழகான நினைவுகள்...
நான் எப்போது உன்னை
நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே என்னை மறந்தேன்!
உன்னிடம் என் காதலை
சொல்லவும் மறந்தேன்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்...
பதில் நானும் தரும் முன்பே...
கனவாகி கலைந்தாய்...!
நீ நடந்த பாதைகளில் நான் நடக்கிறேன்.
காதல் தான் ஒன்று சேரவில்லை.
கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்
உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் கவிதை எழுதுகிறேன்.
கேட்பவர்கள் அதனை
கிறுக்கல் என்கிறார்கள்
யாரும் வரப்போவதில்லை என தெரிந்தும்
யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறது இதயம்
உலகின் தொன்மையான மொழி காதல் மொழி தான்.
அவள் கண்களில் என்னிடம் உரைப்பதைக் கூட
தடுமாற்றம் இல்லாமல் எளிதாக இதயத்துக்கு புரிகிறதே!
காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்
கற்பனையிலிருந்தவள்
கண்ணெதிரே தோன்றவும்
சொப்பனமோ என்றெண்ணியது
மனம்
என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளை விடவா
உலகில் கூர்மையான
ஆயுதம் இருக்கப்போகிறது?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu