காதல் என்பது கடவுள் போல! உணர தான் உருவம் இல்லை..

Feelings Kavithai in Tamil
X

Feelings Kavithai in Tamil

Feelings Kavithai in Tamil-திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்க்கும்போதும் சரி, காதல் கதைகளைப் படிக்கும் போதும் சரி இனம் புரியா ஒரு பரவசம் வந்து மனதை ஆட்கொள்கிறது.

Feelings Kavithai in Tamil

காதல் கடவுளைப் போல, பிரபஞ்ச ரகசியத்தைப் போல யாராலும் இதுதான் என்று முழுமையாக வரையறுத்து சொல்ல முடியாத ஒன்று. மனிதன் காட்டுவாசியாக இருந்து நாகரிக மனிதனாக மாறுவதற்கு காதல் மிக முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கவிஞர்கள் காதலை மாய்ந்த்து மாய்ந்து எழுதுகிறார்கள். இப்படி யார் யாரோ என்னென்ன விளக்கங்கள் தந்தாலும் கூட, காதல் ஏன் இத்தனை ரம்மியமாக இருக்கிறது?

காதல் கவிதைகள் மூலம், ஒரு நபர் தனது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும், பெரும்பாலான மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஒரு உறவை வலுப்படுத்துவது அல்லது பழைய அன்பிபை வலுப்படுத்துவது நல்லது.

இதோ உங்களுக்காக சில காதல் வரிகள்

ஒருமுறை கண்ணுக்குள் வந்துவிடு

உன்னை கண்ணுக்குள் புதைத்து

வைத்திருக்கிறேன் .....!!!

என்னால் உனக்கு கண்ணீர் வந்தால்

உனக்கும் சேர்த்து நானே அழுதுவிடுகிறேன்

என்றோ உனக்காக கிறுக்கியவை

இன்று படித்தாலும் எனக்கே நாணத்தை தருகிறது

அதீத காதலில் இத்தனை பைத்தியக்காரதனங்களா

உன்மீது எனக்கென்று

பேசிய நீ பேசாமல் இருப்பதுதான்

என் பிறப்பில் நான் கண்ட கடும் தண்டனை

ஒருவரை பேசாமல் கொல்ல

காதலால் மட்டுமே முடியும்

காதல் எல்லோருக்கும் ஒரே உணர்வைத்தான் ஏற்படுத்தும்

காதலர்கள் தம் எண்ணப்படி காதலை காயப்படுத்துகிறார்கள்

உன்னை பூக்களின் ராணி என

வர்ணித்தது தவறுதான்

விரைவாக வாடிவிட்டாய்

கண்ணே என்றதும் தப்புத்தான்

கண்ணீராய்வெளியேறுகிறாய்

என்னைவிட அழகானவன்

உனக்கு -கிடைக்கலாம்

என் போன்ற காதலன்

நிச்சயம் கிடைக்க மாட்டான்

பார்வையால் கொன்றது நீ.

ஆயுள் கைதி ஆனது நான்.

தவறு செய்தது நீ!

தண்டனை அனுபவிப்பது நான்

கண்களால் கடத்தி சென்றாய்.

வசியம் செய்து இதயம் தின்றாய்.

என் இதயம் உன்னிடம் அகதியாய்.

நான் உன் காதலிடம் கைதியாய்.

மரணமே வந்தாலும் உன்னை

மறக்காத இதயம் வேண்டும்.

மீண்டும் ஒரு பிறவி என்று

இருந்தால் அதிலும் நீ தான்

என் காதலாக வேண்டும்.

போதைப் பழக்கம் இல்லாத எனக்கு

தினம் தினம் போதையாகிறது.

உன் விழிகளை காணும் போது

தொலைதூர காதலில் அன்பு பாசத்தை காட்டிலும்

ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையே பெரியது

முகம் பார்த்து பேச ஆசையாக இருந்தாலும்

வரும் குறுஞ்செய்திகளை பார்த்து மனம் ஆறுதல் அடைகிறது

இவ்வளவு நாள் உனக்காக நான் காத்திருப்பது என்றேனும் ஒருநாள் உன்னை சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில் தான்

பிடித்தவர்கள் அருகிலேயே இருந்து விட்டால்

பிரிவின் வலியும் நினைவுகளின் அருமையும் தெரியாது

கண்கள் உன்னை பார்க்காமல் இருந்து விடும் ஆனால் என் இதயமோ உன்னை பற்றி நினைக்காமல் இருந்து விடாது

காலம் கனிந்திருந்தும்

கரம் சேர்க்க முடியாமல்

வெருண்ட தடங்கல்களை

வேரோடு அழிக்கும் வரை

சுகமான காதலுடன்

சுதந்திரமாய் காத்திருப்போம்..

ஒன்று சேரும் வரை

உன் மௌன சிறைகளின் கம்பிகளுக்கு நடுவில்

என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது..

ஒருமுறையேனு உற்றுபார்.

உன் காதலன் நான் இங்கு

கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story