Love Failure Quotes in Tamil காதல் ஒருமுறை தான் வரும். அந்த ஒன்று எது என்பதே கேள்வி.

காதல் தோல்வி - மாதிரி படம்
காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும்.
அது மிகப்பெரிய வலியாக காதலர்கள் உணர்கிறார்கள். காதல் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சிலர் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். அது தவறான செயல் என்பதைக் கூட அறிவதற்கு அவர்களின் மனம் இடம் தருவதில்லை. காதல் தோல்வி என்பது காதல் கைகூடவில்லை என்பதே. ஆனால், மனதுக்குள் உதித்த காதல் சாகவில்லையே. அப்படியே தான் இருக்கும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
காத்திருக்கும் போது தெரிவதில்லை. கடந்து போகும் காலங்கள் ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது. காத்திருந்த காலங்கள்..
நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும்..
நம்ம இல்லாம சந்தோஷமா இருப்பாங்கன்னா... விலகியும் போகலாம், விட்டும் போகலாம். தப்பே இல்ல. போகட்டும் விடுங்க..
நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்.
இந்த ஏமாற்றத்திற்கும் வலிக்கும் காரணம் நான் அன்று உனக்காக என்னை மாற்றிக் கொண்டது மட்டுமே..
தனிமையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள் இறுதி வரை உன்னிடம் வர மாட்டார்கள்..
நாம் பிறருக்கு தேவை என்றால் கண்டுகொள்ளப்படுகிறோம், கவனிக்கப்படுகிறோம் அதுவே தேவையில்லை என்றால் காயப்படுத்தப்படுகிறோம்
வேண்டும்போது கிடைக்காத காதலும் வேண்டாத போது கிடைக்கும் காதலும் உயிரற்றதுதான்
சில நினைவுகள் நம்மை அழ வைக்கும் சிலருடைய நினைவுகள் அழ மட்டுமே வைக்கும்.
காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் அழ வைக்கும்.
உலகில் ஒருவருடைய அன்பிற்கு அடிமையாகி விடாதீர்கள். இங்கு யாருடைய அன்பும் நிரந்தரம் அல்ல
விஷத்தின் ருசி. காதல் பிரிவில் தெரியும்
பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே
மறக்க முடியாத நாட்களும் உண்டு. மறக்க கூடாத நாட்களும் உண்டு
இழந்து விட்டேன் என்பதை விட, தவற விட்டேன் என்பதே உண்மை
நீ யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ. அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உதாசீனம் செய்வார்கள்
சிலரின் இரக்கமில்லா துரோகமே, பலரின் உறக்கம் இல்லா இரவுக்குக் காரணம்
நிறைவேறாத கனவுகளில் என் காதலும் ஒன்று
சில நாள் பேசாமல் இருந்து பார். பல பேர் காணாமல் போய்விடுவர்
காதல் எல்லோரையும் வாழ வைத்தது. என்னை மட்டும் ஏன் அழவைக்கிறது?
பாரமாய் இருப்பதை விட, கொஞ்சம் தூரமாய் இருப்பதே மேல்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu