காயம் பட்ட இதயத்திற்கு இதமளிக்கும் காதல் தோல்வி கவிதைகள்..

Kathal Tholvi Kavithai
Kathal Tholvi Kavithai
காதல் தோல்வி என்பது சினிமா பாடலில் வருவது போல,
பாக்கப் போனா மனுசனுக்கு
பஸ்டு தோல்வி காதல் தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமை எல்லாம்
பஸ்டு காணும் தோல்வி தான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
என சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால் காயம்பட்ட மனம் அதிலிருந்து மீண்டு வருவது கொஞ்சம் கடினம் தான்
ஆண் கவியை வெல்ல வந்த பெண்கவியே பாடலில் வருவது போல,
ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
இதில் உண்மையான காதல் எது என்பது முடிவு செய்ய முடியாதது. எனவே, காதலில் தோல்வி என்றால்
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா
என்ற பாடல் வரிகளுக்கேற்ப மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்
இருந்தாலும், சோகமான மனதிற்கு மருந்திடுவது போல சில காதல் தோல்வி தத்துவங்கள்
காதலில் தோற்ற
ஒவ்வொரு இதயம்
தீயில் கருகிய இதயம்
மீண்டும் துடிக்க விரும்பாது
ஜோடியாக நடந்து
திரிந்த செருப்பில் ஒன்று
அறுந்துவிட்டால்
மற்ற செருப்பு நிலை....?
மூச்சை நிறுத்தினால்.
மட்டுமே மரணம் இல்லை
நீ பேச்சை நிறுத்தினாலும்
மரணம் தான்......!
என்னை பிடிக்கவில்லை
என சொல்லியிருந்தால்
விலகியிருப்பேன்
பிடித்திருக்கு என்றால்
காதலித்திருப்பேன்
மௌனமாய் இருந்து
நடுரோட்டில் விட்டுவிட்டாயே

தூக்கத்தில் கூட
கண்ணில் ஓரமாய்
சிறு துளிகள் வழிகிறது
கனவில் கூடவா என்னை வதைக்கிறாய்......?
உனக்கு கொடுக்க என்னிடம் ஏராளமான காதல் உள்ளது
ஆனால், நீ கொடுக்கும் வலியினால் சிந்த கண்ணீர் தான்
என்னிடம் இல்லை..
உயிர் கூட சில நொடிகளில் என்னை விட்டு அகன்று விடும் ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது என்றுமே ஆறாத் தழும்பாக அலை பாய்கிறது என் உணர்வுகளில்.
என்னை உனக்காக மாற்றியதும் நீ தான் இன்று மனம் மாறி என்னை விட்டு பிரிந்து செல்வதும் நீ தான்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu