ஹெல்த் டிப்ஸ்: லிக்விட் டயட் எடுத்துக் கொள்ளலாமா?

ஹெல்த் டிப்ஸ்: லிக்விட் டயட் எடுத்துக் கொள்ளலாமா?
X

திரவ டயட் ( காட்சிப்படம் )

லிக்விட் டயட் எனப்படும் வெறும் திரவங்களை மட்டுமே சாப்பிடும் டயட் தற்காலிக நடவடிக்கையே தவிர நீண்ட கால ஊட்டச்சத்து நடவடிக்கை அல்ல.

பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாதாரண மக்களும் தன் உடலை கவர்ச்சியாக வைத்துக்கொள்ளவும், முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்வதற்கும், எடையைக் குறைக்கவும் ஆரோக்கியமற்ற டயட்டை பின்பற்றுகிறார்கள். அதிலும் குறிப்பாக லிக்விட் டயட் எனப்படும் வெறும் திரவங்களை மட்டுமே சாப்பிடும் டயட்.

டயட் என்பது எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் வயிற்றில் இருப்பது அல்ல. தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த முறையான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் டயட்.

கைகளுக்கு விரல்கள் எப்படி முக்கியமோ அதேபோல் நம் உடலுக்கு சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள உணவுகள், பால் இவை ஐந்தும் மிகவும் முக்கியம்.

சமீபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் 14 நாள்களாகத் தீவிர திரவ டயட்டில் இருந்திருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னை இருந்தது தெரியாமல் இந்த டயட் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திரவ டயட்டை குறுகிய கால இடைவெளியில் மூன்று, நான்கு முறை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

புரதச்சத்துகளுக்காக பருப்பு, சுண்டல், காளான் போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவப் பிரியர்கள் முட்டை, மீன், சிக்கன் போன்றவற்றைச் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலர் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகவும் புரதச்சத்து உணவுகளை மிகக் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் வெகு விரைவிலேயே எடை அதிகரிப்பு, உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. தீவிரமான டயட்டை மேற்கொள்வதற்கு முன்னதாகத் தன் உடலில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது தெரிந்திருக்க வேண்டும்.

உடல் பிரச்னைகளை அலட்சியம் செய்துவிட்டு, டயட்டை தீவிரமாகப் பின்பற்றினால் பல்வேறு தீமைகள் ஏற்படலாம். டயட் முறையைப் பின்பற்றும்போது ஊட்டச்சத்து ஆலோசகரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டும். நாமாகவே எந்த டயட்டையும் பின்பற்றக் கூடாது.

ஊட்டச்சத்து ஆலோசகரிடம் உடலில் பாதிப்புகள் இருப்பது தொடர்பான விவரங்களையும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற ஆலோசனைகளை ஊட்டச்சத்து ஆலோசகர் வழங்க முடியும்.

திரவ டயட் எடுப்பது சரியா, டயட்டை பின்பற்றுபவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு முழு திரவ உணவில் போதுமான புரதம் மற்றும் நார்ச்சத்து பெறுவது கடினம். எனவே இந்த உணவைப் பின்பற்றுபவர்கள், குறிப்பாக சில நாட்களுக்கு மேல் அவ்வாறு செய்தால், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும .

முழு திரவ உணவில், குறிப்பாக நீண்ட காலத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்களை பெறுவது மிகவும் கடினம். திரவ உணவுகளில் பொதுவாக வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, வைட்டமின் பி-12 மற்றும் தியாமின் ஆகியவை குறைவாக இருக்கும்.

திரவ டயட் பொதுவாக பெருங்குடல், சிறுகுடல் போன்ற வயிறு சம்பந்தமான அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்படும். அதுவும் ஒருசில நாட்களுக்கு மட்டுமே வழங்குவார்கள். மற்றவர்களுக்கு திரவ டயட் அவசியம் இல்லை.


பின்வரும் சூழ்நிலைகளில் முழு திரவ உணவைப் பின்பற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்:

  • கணைய அழற்சியிலிருந்து மீளும்போது
  • எடை இழப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திரவங்கள் மற்றும் மென்மையான உணவுகளுக்கு இடையில் ஒரு இடைநிலை நடவடிக்கையாக
  • பல் அல்லது வாய்வழியே மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்குப் பின், வலியைக் குறைக்க அல்லது அவரால் மெல்ல முடியாது என்பதால்
  • இரைப்பை குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது செரிமான நோயின் அறிகுறிகளைக் குறைக்க
  • பல பற்கள் இழப்பைத் தொடர்ந்து
  • வாய் அல்லது தாடையில் எலும்புகள் உடைந்த பிறகு

திரவ டயட்டின் மூலம் தண்ணீர்ச்சத்து அதிகரிக்கும்போது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் குறைந்துவிடும். புரதச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்றவை கிடைக்காமல் போகலாம். அதே போன்று சரியான அளவில் கலோரி மற்றும் கொழுப்புச்சத்தும் கிடைக்காது. அதனால், திரவ டயட்டை அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

திரவ டயட்டை எடுத்துக்கொள்ள விரும்பினால் வாரம் ஒருநாள் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். அப்படி திரவ டயட்டாக எடுத்துக்கொள்ளும்போது 400 மி.லி பாலில், பழங்களை அரைத்து அதில் சேர்த்து குடிக்கலாம், காய்கறிகளை சூப் வைத்து வடிகட்டாமல் சாப்பிடலாம். இதனால் திரவ டயட் எடுப்பதால் வரும் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.


திரவ டயட்டை ஒரு நாளைக்கு மேல் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் தேவையான கலோரிகள் கிடைக்காமல், உடலில் உள்ள தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்புகூட ஏற்படலாம்.

ஏற்கனவே இதயநோய் உள்ளவர்கள் திரவ டயட் எடுக்கும்போது அது இதயபாதிப்பை அதிகரிக்க வாய்ப்பாக அமையும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் திரவ டயட் எடுத்துக்கொண்டால், அது சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும் என்பதால் எடுத்துக்கொள்ளக் கூடாது.

டயட்டில் இருக்கும்போது மிதமான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மட்டுமே மேற்கொள்ள வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அதுவும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு