Life Fact Quotes in Tamil-பிரச்னைகளை எதிர்த்து போராடுவதுதான் வாழ்க்கைங்க... ஓடி ஒளிவது அல்ல....
Life Fact Quotes in Tamil
Life Fact Quotes in Tamil
Life Quotes in Tamil With Images -இறைவனின் படைப்பில் மனிதன் ஒரு ஆறறிவு படைத்த உயிரினம். பேசும் கலை இவர்களுக்கு உண்டு. ஆனால் ஐந்தறிவு பெற்ற உயிரினங்களுக்கு பேசும் ஆற்றல் இல்லை. பேச்சாற்றலை வைத்து இன்று பலகுடும்பங்கள் முன்னேறி வருவதைக் காணலாம். அத்தகைய மனிதப்பிறவி எடுத்து எதற்கோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்... இறந்தோம்.. என்று வாழ்வது அல்லங்க வாழ்க்கை.
Life Fact Quotes in Tamil
Life Fact Quotes in Tamil
வெந்து போனதை தின்று நொந்து போவதல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்றால் ஒரு போட்டி இருக்கணும். சாதிக்கணும் என்ற எண்ணம் லட்சியம் நமக்கு இருக்கணும். ஏதோ பெற்றார்கள் நம்மை வளர்த்தார்கள் நாமும் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம் என்பதல்ல வாழ்க்கை. எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ பிரச்னைகளை சமாளித்து இன்றளவில் வாழ்வில் சாதனை படைத்து வருகின்றனர். அஞ்சி நடுங்குவதல்ல வாழ்க்கை. பிரச்னைகளை எதிர்த்து போராடும் குணம் எவருக்கு உள்ளதோ அவர்களே வாழ்வின் உன்னத நிலையினை அடைகிறார்கள்.
அதேபோல் மனித வாழ்க்கையில் அவர்களையே அழிப்பது என்ன தெரியுமா? பொறாமைக்குணம். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் நேரத்தில் உங்களைப் பற்றி சற்று சிந்தித்தால் உங்களுக்குமுன்னேற்றம் உண்டு. வாழ்க்கையில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்து பாருங்கள்... நிச்சயம் முன்னேற்றத்தினை நோக்கி நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்று பொருள். அதைவிடுத்து மற்றவர்களைப் பற்றி பேசி, புறம்கூறி வாழ்வது வாழ்க்கையே அல்ல.
Life Fact Quotes in Tamil
ஆனால் இக்காலத்தில் போலிவேஷம் போட்டு பல சுயநலவாதிகள் அவர்கள் பிழைக்க இதனைத்தான் தினமும் அரங்கேற்றி வருகின்றனர். உழைக்காமல் ஏமாற்றும் எதுவும் வாழ்க்கையில் நிலைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்க... அக்காலத்தில் நியாயம், தர்மம், நீதி இருந்தது. அதனால்தான் நோய்களின் பாதிப்பும் குறைந்திருந்தது. ஆஸ்பத்திரிகளை அக்காலத்தில் அதிகம் காண முடியாது.
Life Fact Quotes in Tamil
ஆனால் இந்த போலிகள் நிறைந்த உலகில் தற்போது நியாயம், நீதி, தர்மம், உண்மை அனைத்தும் கலிகாலத்தில் அழிவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக கருதுவதால் தான் ஆஸ்பத்திரிகளுக்கு செலவிடுகின்றனர் என்று கூட சொல்லலாம். என்னங்க வாழ்க்கை... மனுஷனை மனுஷனே சாப்பிடுவது மட்டும்தான் இன்னும் இங்கு நடக்கலைங்க... மற்றபடி எல்லாமும் நடக்குதுங்க..
Life Fact Quotes in Tamil
ஒன்றுமட்டும் நிச்சயம். உழைப்பை நம்பி வாழ்பவன் உன்னத வாழ்வை அடைகிறான். சோம்பேறியாக இருப்பவன் கிணற்றில் போட்ட கல் போலதான். லட்சிய கனவோடு பயணிப்பவர்கள் அவர்கள் இலக்கை அடைய தினந்தோறும் வாழ்க்கையோடு போராடி வருகின்றனர்.
Life Fact Quotes in Tamil
இதுபோல வாழ்க்கைன்னா பிரச்னைகள்தான்...அதனை எப்படி சமாளிப்பது, எப்படி தீர்வு காண்பது என்பதில்ந ம் கவனம் இருக்க வேண்டும் . அதைவிடுத்து ஓடி ஒளிந்து கொண்டால் பிரச்னைகள் உங்களை விட்டுபோய்விடாது... தேங்கிவிடும்..உஷார்...உஷார்...
Life Fact Quotes in Tamil
வாழ்க்கையின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்....
கஷ்டப்படும் போது உதவி செய்பவர்களை விட, மேன் மேலும் கஷ்டப்படுத்துபவர்களே இங்கு ஏராளம்!
சந்திப்பு என்று வரும் போது, மகிழ்ச்சி பிரதானமாக இருக்கிறது! பிரிவு என்று வரும் போது, குறைகள்
எதிர்பார்த்தது நடக்காமல் போவதும், எதிர்பார்க்காதது நடப்பதும் தான் வாழ்க்கை. இதை புரிந்து கொண்டவன், வாழ்க்கையை வெல்கிறான்! புரிந்து கொள்ளாதவன், அந்த வாழ்க்கையையே இழக்கிறான்!
நாம் எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்றும், நாம் எதிர்பார்த்த போது நடக்காத ஒன்றும் தான் நம் மனக்குமுறலுக்கு காரணம்!
விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது! சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது!
மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்! மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை!
இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும். சற்றும் தயங்காமல் அதை நடைமுறை படுத்துங்கள்!
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை!
பிடித்ததை எடுத்து, பிடிக்காததை விடுத்து மகிழ்ச்சியாக இரு... என்பதே வாழ்க்கை!
வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போலதான்... நிறைய நிறுத்தங்கள்..! நிறைய வழித் தடம் மாற்றங்கள்..! விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்...! சில நேரம் விபத்துக்களும் கூட..! அனைத்தையும் ரசித்துக் கொண்டே, பயணிக்க கற்றுக் கொள்வோம்... வாழ்விலும் கூட, அழகாய் அமையட்டும் இந்த வாழ்க்கை பயணம்...!
கோபத்தில் கண்டதை தூக்கிப் போடுவதைவிட, அந்த கோபத்தையே தூக்கிப் போடுங்கள்.. வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்!
வாழ்நாளெல்லாம் அடிமையாக தொட்டிக்குள் வாழ்வதைவிட பிடிபட்ட அன்றே சட்டியில் குழம்பாக கொதிப்பது மேல்
வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையை போல் இரு! அதற்கு அவமானம் தெரியாது, விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்!
உனது வலிகள் நீ யார் என்பதை தீர்மானிப்பதில்லை அந்த வலிகளிலிருந்து நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பது தான்.
வாழ்க்கையில் சில தருணங்களை கடந்து செல்வது கடினமாக தான் இருக்கும், இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் அதனை கடந்து சென்று விட்டாய் என்றால், நிச்சயம் துன்பத்துக்கு பின் இன்பம் இருக்கும்.
எட்ட வரும் வாய்ப்புகள் ஏற்றிச் செல்லும் வரை காத்திருங்கள், பயணங்கள் பாதைகளாக மாறும்...
வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே!
அவமானம் படும்போது அவதாரம் எடு, வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு, புண்படுகின்ற போது புன்னகை செய், வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டு...
நதிகள் அணைத்தும் ஓடி விழுந்தும், சமுத்திரம் நிரம்புவதில்லையாம்! பூமியின் முனைகளை ஓடி அடைந்தும், மனது நிறையவில்லையாம்! இளநீல ஆகாய விரிவில் உயர பறந்தும், அவா பூர்த்தியடையவில்லையாம் ஓடியும் விழங்கியும் அடைந்தும் மானிடரின் பேராசைகள் நீள்கிறதேனோ?
இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்..!!
"நான்" என்கின்ற ஆணவம், 'அவனா' என்ற பொறாமை, "எனக்கு" என்கின்ற பேராசை இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது!
பெரும்பாலும் முதல் சிந்தனை, தெளிவற்றதாக இருக்கும் எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்!
பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் - மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது!
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை!
உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu