Leave Letter For Went To Temple கோயிலுக்கு செல்ல விடுப்பு கடிதம் எழுதுவது எப்படி?....படிங்க...
Leave Letter For Went To Temple
விடுப்பு எடுக்காமல் வேலை பார்ப்பவர்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதாவது தன்னுடைய கல்யாண நாள் அன்று கூட மனைவிக்கு தாலியைக் கட்டிவிட்டு ஆபீசிற்கு சென்றவர்களும் இந்த உலகில் உண்டு. விடுப்பே எடுக்காமல் வேலை பார்த்தவர் என்ற பாராட்டு அவர் இருக்கும் வரை இல்லை...அவர் மறைந்த பின்னரும் அந்த ஆபீசில் பேசு பொருளாகிவிடுகிறது.
ஆனால் நாமெல்லாம் எப்படிங்க...வாரத்தில் 7 நாள் என்றால் அந்த 7 நாளில் ஒரு நாள் கண்டிப்பாக வார விடுப்பு அல்லது ஞாயிறு விடுப்பு என விடுப்பு நமக்கு உண்டு. இருந்த போதிலும் நமக்காக அளிக்கப்பட்டுள்ள விடுப்புகளை வீணடிக்கக்கூடாது என விடுப்பு எடுப்போரும் உண்டு. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் விடுப்பு எடுத்துதான் ஆக வேண்டும் என விடுப்பு எடுப்போரும் உண்டு. வருடத்தின் விடுப்பு வீணாகிறதே என விடுப்பு எடுப்போரும் உண்டு.
யாராக இருந்தாலும் உடல் நலம் சரியில்லாத நேரத்திலோ அல்லது வீட்டு உறுப்பினர்களுக்கு உடல்நலம் சரியில்லாவிட்டாலோ நாம் ஆஸ்பத்திரிக்கு செல்லவிடுப்பு எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.அதேபோல் உறவினர்கள் திடீரென யாராவது இறந்துவிட்டால் செல்ல , திருமணத்திற்குசெல்ல என விடுப்பு எடுத்துதான் ஆகவேண்டும். அந்த வகையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லவேண்டும் என்றாலும் விடுப்புஎடுத்துதான் ஆகவேண்டும். அப்படிஎனில் எப்படி விடுப்பு கடிதத்தைக் கொடுப்பீர்கள்....படிச்சு பாருங்க...
அனுப்புநர்
வீ.ரமணி
பட்டதாரி ஆசிரியர்,
38, நேரு நகர்,
முதலாவது குறுக்கு தெரு,
மதுரை-625 001.
பெறுநர்
தலைமை ஆசிரியர் அவர்கள்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
மதுரை- 625 006.
அய்யா,
பொருள்: குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லவிடுப்பு வேண்டுதல் தொடர்பாக....
நான் எனது குடும்பத்துடன் என்னுடைய குலதெய்வ கோயிலான திருப்பதிக்கு செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் எனக்கு, 15.11.2023 முதல் 18 .11.2023 வரை 3 நாட்களுக்கு மட்டும் தற்செயல்விடுப்பு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த 3 நாட்களிலும் என்னுடைய பள்ளி பாடவேளைகளுக்கான மாற்று ஏற்பாடுகளை நானே செய்துவிட்டேன். இதனால் மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது. அவர்களுடைய கற்றல் பணிகளும் பாதிப்படையாது என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
(வீ.ரமணி )
பட்டதாரி ஆசிரியர், (அறிவியல்).
நாள்: 13/11/2023
இடம்: மதுரை .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu