கிவி பழத்தின் நன்மைகள் தமிழில்..

Kiwi Fruit Benefits in Tamil
Kiwi Fruit Benefits in Tamil-சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
கிவி பழம் சாப்பிட இனிப்பு புளிப்பு சுவையுடன் இருக்கும். கிவி பழத்தின் நிறம் வெளியே பழுப்பு நிறமாகவும் உட்புறம் பச்சை நிறமாகவும் காணப்படும்.
கிவி பழங்கள் பார்க்க குட்டியாய் இருந்தாலும் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது.
கிவி பழத்தில் வைட்டமின் சி , வைட்டமின் கே , வைட்டமின் ஈ , போலே மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளன .

இந்த கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும்.
இந்த பழம் முக்கியமாக இதய பிரச்சினையை தடுக்கும்.
உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.
நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை மேம்படுத்துகிறது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும்.
உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கிவி பழம்

கிவி பழத்தை சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் வளர்கிறது..
இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.
கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது.
மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது. கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது.
கிவி பழங்களை அதிகமாக வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் நோயின்றி ஆரோக்கியமாக வளருவார்கள் .

கிவி பழத்தை உலர வைத்து சாப்பிடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும் .தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை எடுத்து கொள்ளலாம்.
கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கிவி பழங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாக சொல்லப் படுகிறது.
நாம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நம் வாய், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் கூச்ச உணர்வு, அரிப்பு போன்றவை ஏற்படும். அது போல் தான் இந்த பழமும் இருக்கும்.
கிவி பழத்தை பிறந்த குழந்தை அதாவது 8 மாதம் வரை உள்ள குழந்தை கள் சாப்பிட கூடாது .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu