Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Kisan Credit Card:  கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
X
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

Kisan Credit Card: விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகளின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்ககாகவே கடந்த ஆகஸ்ட் 1998-ல் கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்.

மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும்.

விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுகிறது.

யாருக்கு இத்திட்டம் ?

கடன் மற்றும் நிதியுதவியைப் பெற, விவசாயிகள் அவர்களது நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் ஆவணங்களுடன் வங்கிக் கிளைக்கு நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே கடன் பெற முடியும்.

இத்திட்டம் மூலம் கடன் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும்.

இத்திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம்.

ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

விவசாயிகள் உரிமையாளர் -பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டு பொறுப்புக் குழுவின் உறுப்பினர் போன்ற தகுதிகள் இந்த திட்டத்திற்கு அவசியமாகும்.

18 முதல் 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • டிரைவிங் லைசென்று
  • நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
  • 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மற்றும் வங்கி கேட்கும் மற்ற ஆவணங்கள்

வழங்கும் கார்டுகளை வழங்கும் வங்கிகள்:

  • நபார்ட்
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)
  • ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
  • பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
  • பாங்க் ஆப் இந்தியா (Bank of India)
  • எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)
  • ஐ.டி.பி.ஐ (IDBI)

ஆகிய வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, "KCC க்கு விண்ணப்பிக்கவும்" என்ற option கிளிக் செய்து, KCC படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பித்தால், வங்கியின் கடன் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்வார்.

பின்னர் பயன்பாட்டு குறிப்பு எண்ணை சேமித்து கொள்ள வேண்டும்.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். குறைந்தது 15 நாட்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு கிடைத்துவிடும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!